FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, July 12, 2017

ரேடியோ, நாய், சைக்கிள் வரி:- ஒரு மாநகராட்சியின் கதை...

ரேடியோ, நாய், சைக்கிள் வரி:- ஒரு மாநகராட்சியின் கதை 

வானொலி பெட்டி (ரேடியோ) வரி:-

அந்தக்கால கட்டத்தில்(1960-70) வால்வு ரேடியோ என்னும் குமிழ் மின்னூட்ட வானொலி கேட்கும் கருவிகள் பிரபலமாக இருந்த காலம். 1970களில் சென்னை, செங்கல்பட்டு  மற்றும் அதன் சுற்று வட்ட பகுதியில் ரேடியோ வரி மிகவும் பிரபலம். வீட்டில் ரேடியோ இருந்தால் அவசியம் ரேடியோ வரி கட்டவேண்டும்  , அந்த வரித் தொகையை அருகிலிருக்கும் தபால் நிலையத்தில் ஒரு கையடக்க புத்தகத்தில் வரித் தொகைக்கான தபால் தலை ஒட்டிய, தபால் நிலைய முத்திரையோடு தரப்படும் புத்தகத்தை பத்திரமாக வைத்திருக்கவேண்டும். ரேடியோ வரியை வருட வாரியாகவோ அல்லது மாதாந்திர தவணைத் தொகயாகவோ  கட்டலாம். இருந்தும் பலர் இந்த ரேடியோ வரியை கட்டமல் இருந்ததால். வரி கட்டாதவர்களின் வானொலிப்பெட்டியை பறிமுதல் செய்ய அதிகாரிகள் ஒவொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். பலர் வானொலிப்பெட்டியை மாட்டுக் கொட்டகையில் இருக்கும் வைக்கோலில் மறைத்து வைத்துவிட்டு, எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை என்று பொய் சொல்லுவார்கள், ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரர் அவர்கள் வீட்டில் ரேடியோ இருக்கிறது தினமும் நாங்கள் ரேடியோ சத்தத்தை கேட்க்கிறோம் என்று உண்மையை போட்டு உடைத்துவிடுவார்கள். விளைவு சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் ரேடியோ வரியை அபராத தொகையோடு கட்டவேண்டிய நிலை ஏற்ப்படும்.  1980-க்குப் பிறகு வானொலி ரேடியோ வரி நீக்கப்பட்டுவிட்டது.   

நாய் வரி:-

அந்தக்காலங்களில்1970களில் சென்னை நகரத்தில் வசிப்பவர்கள் அவர்களின் வீட்டில் பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்ப்பது வழக்கமாக இருந்தது. அதேபோல சென்னை நகரத்திற்கு அருகாமையில் அமைந்த மாவட்ட நகரங்களில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களிலும் விலை குறைவான வீட்டு மனைகள் வாங்கி வீடுகட்டிக்கொள்வதோடு அவர்களின் வீட்டு காவலுக்காக நாய்கள் வளர்ப்பது வழக்கமாக இருந்தது. 

ஒரு கட்டத்தில் நாய்க்கடிக்காக பலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை   பெறவேண்டிய நிலை ஏற்ப்பட்டதோடு,  (அப்போதெல்லாம் நாய் கடிக்கு வயிற்று தொப்புள் குழியை சுற்றி 26 ஊசிகள் போடவேண்டும்)  இரவுநேரங்களில் தெருவில் நடமாடமுடியாமல் நாய்களின் தொல்லை அதிகமாகிவிட்டதால் மாநகராட்சியும், சில சென்னைக்கு அருகே அமைந்த கிராம பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகமும், நாய்களுக்கு கட்டாய வருட வரி கட்டி அதற்கான அத்தாட்சி லைசென்ஸ் எண் தகடுகளை நாய்களின் கழுத்து பட்டையோடுகட்டவேண்டும்  என்று அறிவித்தது. அப்படி நாய் வரி காட்டாத நாய்களை பிடித்து கொன்றுவிடவும் கட்டளை பிறப்பித்தது.  

ஆணை பிறப்பித்தும் பலர் நாய் வரி காட்டாமல் இருந்ததால் நகராட்சிக்கு வரி காட்டாத அனைத்து நாய்களையும் பிடிக்க உத்தரவு போட்டு, பல இடங்களில்  நாய் வண்டிகளை வைத்து கழுத்தில் பட்டை(லைசென்ஸ்) காட்டாத நாய்கள் அனைத்தையும் பிடித்து அழித்தார்கள். பிறகுதான் தெரிந்தது நாய்களுக்கு வரி கட்டண வசூலைவிட நாயை பிடிப்பதற்கான செலவு அதிகம்ஆனதால் அந்த நாய் வரி திட்டம் நிறுத்தப்பட்டது. 


சைக்கிள் வரி என்கிற பழையகால மிதிவண்டி வரி:- 

சென்னை போன்ற பெருநகரங்களில் அப்போதெல்லாம் 1970களில் அலுவலகம் செல்லும் பலர் மிதிவண்டிகளையே உபயோகித்தனர். ஆகவே நகர சாலைகளில்  மிதிவண்டிகள் அதிகமானதோடு, மிதிவண்டிகளுக்கு என்று எந்தவித சாலை கட்டுப்பாடும் இல்லாமல் சென்றதால், சாலை விபத்துக்கள் பல ஏற்ப்பட்டதாலும், மாநகராட்சி நிர்வாகம் மிதிவண்டிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அதை கண்காணிக்கும் செலவாக மிதிவண்டி வரியையும் விதித்தது. சென்னை மாநகராட்சியும், சில சென்னைக்கு அருகே அமைந்த கிராம பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகமும் சைக்கிளுக்கு வரி விதிக்கும் ஆணையை பிறப்பித்து நடைமுறைப்படுத்தியது. அதிலும் விளக்கு இல்லாத மிதிவண்டிகள் (சைக்கிள்) மற்றும் விளக்கு பொருத்திய மிதிவண்டி(சைக்கிள்) என இருவேறு வரிவிதிப்புக்களை விதித்து வசூல் செய்தார்கள். இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மிதிவண்டிவரி செலுத்துபவர்களைவிட,  வரி செலுத்தாதவர்கள் செலுத்திய அபராத தொகை அதிகமாக வசூலானது. அதோடு பல இடங்களில் சாலை பாதுகாப்பு காவலர்கள் மிதிவண்டி வரி வசூலிக்கப்பட்டது கணக்கில் காட்டப்படாமல் இருட்டடிப்பும் செய்தார்கள். பல இடங்களில் மிதிவண்டியில் விளக்கு இல்லை என்று கூறி வசூல் வேட்டைகளும் நடந்தன.   ஒரு கால கட்டத்தில் மிதிவண்டிகள் சாலையில் செல்வது முற்றிலும் குறைந்துபோனதால் நகராட்சி நிர்வாகம் மிதிவண்டி வரியை ரத்து செய்தது.  


"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்:-

அந்தக்காலத்தில்(1975) மதராஸ் என்கிற சென்னையில் "சாம்பார்" என்ற பெயரில் ஒரு இரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது, அப்படி அந்த   வண்டிக்கு பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 

1975இல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு "சாம்பார்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட, தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் ஒரு இரயில் வண்டி கிட்டத்தட்ட 15வருடங்களுக்கு மேல் ஓடியது. 

ஆரம்பத்தில் இது புகைவண்டியாகவும், பின்னாளில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுவரை புகைவண்டியாகவும் பின்னர் மின்சார வண்டியாகவும் 1985க்கு பிறகு முழுவதும் மின்சார இரயில் வண்டியாகவும் இயங்கியது.

இதுகுறித்த மேலும் பல சுவையான விவரங்களுக்கு எனது அடுத்த பதிவில் காணலாம்.

நன்றிகளுடன் 
கோகி-ரேடியோ மார்கோனி.
   



Wednesday, June 21, 2017

திரைப்படப்பாடல்களில் "வீணை" வாத்திய பின்னணி இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி 06 / 108 (Episode-06 of 108)

திரைப்படப்பாடல்களில் "வீணை" வாத்திய பின்னணி இசைக்கருவிகளின் பங்கு:- பகுதி 06 / 108 (Episode-06 of 108):-

வலைப்பதிவர் உலகத்தில், எனது வலைப்பதிவு பக்கங்களில் இளைப்பாற வந்த உங்களை அன்போடு வரவேற்கிறேன்.....   

நமக்கு மிகவும் பிடித்த எப்போதும் நமது மனதிலே முணுமுணுத்துக்கொண்டிருக்கும், ஏராளமான மனதிற்கு இதம் தரும், எழுச்சியைத் தரும் திரைப்படப் பாடல்கள், அப்பாடல்களின் பின்னணி இசையில் உருவாகும் மாறுபட்ட, பலவித உணர்ச்சிகளின் எழுச்சியை நமது மனதிற்கு கொண்டுசேர்க்கும் சில வாத்தியக்கருவிகளின் இனிய ஓசை அந்தப்பாடலொடு சேரும்போது,  அந்தப்பாடல் எப்படியெல்லாம் சிறப்பு பெறுகிறது, என்பதை ஒவ்வொரு வாத்தியக்கருவிகளின் இசையை நன்கு உணர்ந்து, ஒவ்வொரு வாத்திய இசைக்கருவிகளின் இசையை தனித்து கேட்டு ரசிப்பதற்காகவே இந்த தொடரை நான் எழுதிவருகிறேன்.  இதை ஏற்கனவே எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுத்திருந்தாலும் மீண்டும் அவைகளை செம்மைப்படுத்தி வலைப்பதிவுகளில் பதிவு செய்தாலும்.... இன்னமும் இவற்றை மெருகேற்றி மேலும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக வடிவமைக்கவேண்டும் என்கிற ஆர்வம், என் நினைவில் ஒரு ஏக்கமாகவே இருந்துவருகிறது.  வாருங்கள் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு என்ற இந்த தொடர் வலைப்பதிவிற்கு செல்லலாம்.... இந்த நிகழ்ச்சிப்பதிவின் தொகுப்புக்களில் மேலும் பல இசைக்கருவிகளின் பின்னணி இசையிலமைந்த திரைப்படப் பாடல்களை "சங்கீத சாம்ராஜ்யம்" என்கிற எனது முகநூல் பக்கங்களில் காணலாம். 

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-"வீணை " என்கிற பாரம்பரிய இசைக் கருவியின் பங்கு -பகுதி 06 / 108 (Episode-06 of 108) 



@ வீணை ஒரு நரம்பு இசைக்கருவி,  இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவியாக பல அதிசய நுட்பாங்களையும் தத்துவங்களையும், தெய்வீக தன்மைகளையும் பொருந்தியதாக இசைக்கலையில் பல தெய்வீக சம்பவங்களும், புராணங்களும் இந்த வீணை இசைக்கருவியை பெருமைப்படுத்தியிருக்கிறது.
மிகப்பழமை வாய்ந்த காலகட்டங்களிலேயே வீணை இசைக்கப்பட்டதாக புராணங்கள் கூறினாலும் கி.பி 14ம் நூற்றாண்டிற்கு முபே வீணை இசைக்கருவி இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும், 17ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் வீணை  தற்போதைய வடிவமான, ஒரே சீரான ஒரு உருவத்தை பெற்றது என்பதை 17ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தஞ்சையை ஆண்ட மன்னர் ஸ்ரீ ரகுநாத வர்மரின் ஆட்சிக்காலத்திய கல்வெட்டுக்களும், தாமிரத்தகடுகள் மற்றும்  ஓலைச் சுவடி குறிப்புகளிலிருந்து தெரியவந்துள்ளது.    

@ சங்க இலக்கியங்கள் என்று போற்றப்பட்ட எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், போன்றவற்றில் கி பி ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னமே  "யாழ்" என்கிற நரம்பு இசைக்கருவி, தற்போதைய வீணை நரம்பு இசைக்கருவியைப் போன்றே வடிவமைக்கப்பட்டு இசைக்கப்பட்டது என்ற குறிப்புகள் கூறுகிறது. 

@ 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. 1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 2. விஷ்ணு- பிண்டகம், 3. ருத்திரர்- சராசுரம், 4. கவுரி- ருத்ரிகை, 5. காளி- காந்தாரி, 6. லட்சுமி- சாரங்கி, 7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி, 8. இந்திரன்- சித்தரம், 9. குபேரன்- அதிசித்திரம்,
10. வருணன்- கின்னரி, 11. வாயு- திக்குச்சிகை யாழ். 12. அக்கினி- கோழாவளி, 13. நமன்- அஸ்த கூர்மம், 14. நிருதி- வராளி யாழ், 15. ஆதிசேடன்- விபஞ்சகம், 16. சந்திரன்- சரவீணை, 17. சூரியன்- நாவீதம், 18. வியாழன்- வல்லகி யாழ், 19. சுக்கிரன்- வாதினி, 20- நாரதர்- மகதி யாழ், 21. தும்புரு- களாவதி (மகதி), 22. விசுவாவசு- பிரகரதி, 23. புதன்- வித்யாவதி, 24. ரம்பை- ஏக வீணை, 25. திலோத்தமை- நாராயணி. 26. மேனகை- வாணி, 27. ஊர்வசி-லகுவாக்ஷி, 28. ஜயந்தன்- சதுசும், 29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி, 30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம். 32 ராவணாசுரம். (இந்த வகை வீணையை வாசித்தவன், ராவணன்). 


@ வீணையை சிவபெருமானே உருவாக்கினார் என்றும் அதனால் அதற்க்கு ருத்ரவீணை என்று பெயர் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகிறது. உருவ வேறுபாட்டைக்கொண்டே வீணைகள் பெயர்கள் உருவானதாகவும் இந்தியாவின் வடநாடுகளில் ருத்ரவீணை, விசித்ரவீணை, கச்சவீணை, சித்தார், ஸூர் பஹார் , ஸூர் சிங்கார் போன்ற பெயர்களிலும், தென்னிந்தியப்பகுதியில் வீணையை சரஸ்வதி வீணை என்றே போற்றப்பட்டாலும் தமிழகத்தின் தஞ்சாவூரில் செய்யப்பட்ட வீணைக்கு மிகவும் பெயர்பெற்ற வீணைகளாக தஞ்சாவூர் வீணை என்றே பெயர்பெற்று அழைக்கப்பட்டது.  

@ வீணையிசைக்காகவே பாடலா என்று தோன்றுமளவிற்கு மனதிற்கு சாந்தம்தரும் ரம்யமான திரைப்படப்பாடல்கள், அதிகம் பழைய தமிழ் திரைப்படப்பாடல்களில் வீணை இசையின் பாரம்பரியத்தை மாற்றாமல் பல பாடல்களை பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார். 

@ புதிய தமிழ் திரைப்படப் பாடல்கள் என்றால்  இந்திய அரசின் கலைமாமணி விருதுபெற்ற வீணை  அரசர் திரு ராஜேஷ் வைத்யா அவர்களின் விரல்கள் விளையாடிய இனிமையான பாடல்கள் காலத்தையும் கடந்துநிற்கும் பாடல்கள்.  ஒரு முறை அவரின் பிரியமான வீணை ஒன்றை நமது விமான நிலைய பயணிகள் பொருட்களை கையாள்வதில் ஏற்பட்ட கவனக்குறைவின் காரணமாக உடைந்துவிட மிகவும் மனம் வருந்தினார்.

@ 40 வகையான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்தான் பிரபல திரைப்பட இயக்குனர் இசைக்கலைஞ்சர், வீணை வித்துவான் திரு எஸ் பாலச்சந்தர் (வீணை எஸ் பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டார்) பழைய தமிழ் பாடல்களில் வீணையிசைக்கு வித்திட்டவர். பல பழைய திரைப்படங்களில் வீணை இசைக்கு முக்கியத்துவம் ஏற்பட இவர் முக்கிய காரணமாக இருந்தவர். 


எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பக்தி ததும்பும் பஜனைப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்திழுப்பதைக் கண்ட அவரின் வாழ்க்கைத்துணைவர் திரு சதாசிவம் அவர்கள், எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை முழுவதும் வெளிக்கொண்டுவரும் வகையில், எழுத்தாளர் ‘கல்கி’யுடன் விவாதித்து ‘மீரா’ திரைப்படத்தை உருவாக்கினார். வெள்ளி விழா கொண்டாடிய அப்படத்தில், எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைப்பில் எம்.எஸ். பாடிய பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றன. அதில் ‘கல்கி’ எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கீதமானது! வித்வான் நாகஸ்வர சிம்மம் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், வயலின் மேதை மைசூர் டி.சவுடையா போன்றவர்கள் எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை வியந்து பாராட்டினார்கள். கச்சேரியைக் கேட்ட வீணை காரைக்குடி சாம்பசிவ ஐயர், ‘‘குழந்தே... உன் தொண்டைக்குள்ளே நீ வீணையை ஒளிச்சுவெச்சுருக்கே...’’ என்றார். 


மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், 'எந்த திரைப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவைதானே வைத்துக் கொண்டு வருவார்', என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. முதன் முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக் கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல் நாரதர் இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் அவஸ்தையினப் பார்த்த ஆர்ட் டைரக்டர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பது போலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, "நாராயண; நாராயண" என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.


@ தற்காலத்தில் மரகத வீணை என்றால் சட்டென்று தொலைகாட்சி தொடர் ஞாபகம் வரும். மரகதவீணை என்று திரைப்படம், புத்தகங்களுக்கு கதைகளும் உள்ளது ஆனால் இசைக்கருவிகளின் மரகத வீணைக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருந்தது. மன்னர்கள் ஆண்டுவந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்த வீணை இசைக்கருவியை முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும், மரகதங்களாலும் வீணையில் பதித்து அழகுபடுத்தி, அவர்களின் ஆத்மார்த்தமான வீணைக்கு விலை மதிப்பைக் கூறமுடியாத அளவிற்கு விலைமதிப்பற்ற வீணையாக உருவாக்கி வைத்திருந்தார்கள்...  ஆகவே மரகத வீணை என்பது பலா மரத்தில் செய்யப்பட்ட வீணையில் விலை உயர்ந்த மரகத மணிகளைப் கலைவண்ணத்தோடு பதித்து உருவாக்கப்பட்ட விலைமதிப்பில்லா வீணை என்று பொருள். தற்போது மரகத வீணை எங்குள்ளது என்று கேட்டால் என்னிடம் அதற்கான சரியான பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும் ஆகவே தற்காலத்தில் மரகதவீணை என்று கூறப்படும் வீணை மரகதத்தின் நிறத்தில் இருக்கும் ஒரு மரத்தில் செய்யப்பட்டது என்று கூறப்படுவதும் அல்லது போலியான மரகத மணிகள் பதிக்கப்பட்ட வீணைகள்தான், இன்றய நிலையில் மரகதவீணைகளாக காட்சிப்படுத்தப்படும் வீணைகள் என்று எளிதில் கூறிவிடலாம். 

@ திரையிசையில் வீணை பின்னணி இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் வீனை வாத்திய பின்னணி இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

வீணை இசையில் சிறந்த திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-

பழைய திரைப்படப் பாடல்கள் வரிசையில்:-
@ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராதா ஜெயலட்சுமி குரலில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் ஒலித்த ‘மனமே முருகனின் மயில்வாகனம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த வீணை பின்னணியிசைப் பாடல்களில் இந்தப்பாடல் முதன்மையானது.  இந்தப்பாடலின் ஆரம்பமே வீணைமீட்டும் அழகை மிக அருமையாக  படக் காட்சிகளில் பக்திமணம் கமழ அருமையாக பதிவுசெய்திருப்பதும் மனதிற்கு இனைமைசேர்க்கிறது.  இந்தப் பாடலின் பின்னணியிசையிலும் பாடல் காட்சிகளிலும் வீணை வருவதோடு பக்திமயமான இந்தப் பாடல் வெகு சீக்கிரமே முடிந்துவிட்டதைப்போல, சிறு பாடல் போல தோன்றினாலும், பாடலை திரும்ப திரும்ப கேட்கத்தோன்றும் மிக அருமையான பாடல். https://youtu.be/-uKUXueJYDc
@1958இல் ரஷ்ய (சோவியத்து யூனியனின்) திரைப்படத்திற்காக நமது கற்சிற்பங்களில் பரதநாட்டியம் பற்றிய ஒரு காட்சி தொகுப்பில் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் நடித்த வீணையிசையில் இந்த பாடல் கட்சி https://youtu.be/3drXukfiH4o

@ வீணையின் பின்னணியிசையில் அமைந்த பல பாடல்களில் புல்லாங்குழல் இசையோடு வீணையின் இசையையும் சேர்ந்து ரசிக்க இந்தப்பாடல் மிக அருமையான பாடல்  "தில்லையம்பல நடராஜா. செழுமை நாதனே பரமேசா. அல்லல் தீர்த்தாடவா வா வா. அமிழ்தானவா" படம் சௌபாக்யவதி(1957) பாடலுக்கு இசை என் நாகேஸ்வரராவ், பாடலை இயற்றியவர் பி கல்யாணசுந்தரம் அவர்கள் பாடலை பாடியவர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள்.  இதைப்போல வீணையின் பின்னிசையில் அமைந்த மேலும் பல பாடல்களை கேட்டு மகிழலாம் வாருங்கள்   https://youtu.be/qUORRGYe1y4

@ இந்தப்பாடலில் வீணையின் இசை பாடல்முழுவதும் தனித்தன்மை பெற்று பாடலுக்கு இனிமைசேர்த்திருக்கும் பாடல்:- இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.. படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் (16.05.1959) பாடியவர்கள் : பி.பீ.ஸ்ரீநிவாஸ் - பி.சுசீலா https://youtu.be/Fh1VVDwxRCA



@ பாடல்: இசை மஹாதேவன்,  இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் ஆண்டு: 1965 திரைப் படம்: வீர அபிமன்யு. பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்,  பாடல் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் என்கிற இந்தப்பாடலில் வீணையின் நாதம் நமது மனதையும் மீட்டும் இசையாக மிக இனிமையான பாடல் இது. பாடலின் ஆரம்பம் முதல் இறுதிவரை பாடல் முழுதும் நிறைந்திருக்கும் வீணையின் பின்னையிசையில் அமைந்த பாடல் "பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன் அன்று உன்னைத் தேன் என நான் நினைத்தேன்" https://youtu.be/7EHgb4e_L_w


@ வீணையில் பாடலா வீணையின் பின்னணியிசையில் பாடலா என வியக்கவைக்கும் வீணையின் போட்டி பாடலான அகத்தியர் படப்பாடல் வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன், நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன், எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்... படம்:- அகத்தியர், வருடம்:- 17 டிசம்பர் 1971; இசை:- குன்னக்குடி வைத்தியநாதன்; உதவி:- M. முத்து ராகவன்;  பாடல்கள்:- K.D.சந்தானம், உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன், இரா.பழனிசாமி, புத்தனேரி ரா.சுப்ரமணியம், நெல்லை. அருள்மணி. பாடியவர்கள்:-  TMS & சீர்காழி கோவிந்தராஜன்; நடிப்பு:- R.S.மனோகர், சீர்காழி கோவிந்தராஜன். https://youtu.be/z5wZVG_oJiI

@ இந்தப்பாடலின் ஆரம்பத்திலிருந்தே பாடலிலும் பாடல் வரிகளிலும் வீணை வருவதோடு அந்த வீணையின் பின்னிசையில் தொடர்ந்து பாடல் முழுவதும் மீட்டப்படுவதோடு இடையிடையே வரும் இசையிலும் புல்லாங்குழல் மற்றும் குழு வயலின் இசையுடன் வீணையும் சேர்ந்து இந்தப்பாடல் இனிமையாக்கியிருக்கிறது    பாடல்:-வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு தென்றல் பேசும் ...படம் :-வாழ்வு என் பக்கம்,இசை எம் எஸ் விஸ்வநாதன். பாடியவர்கள்  யேசுதாஸ், சசிரேகா நடிப்பு முத்துராமன்லெக்ஷ்மி https://youtu.be/5sliTjKfPEo 

@ எனக்கு மிகவும் பிடித்த வீணை பாடல், இந்தப்பாடலின் ஆரம்பமே வீணைமீட்டும் அழகை மிக அருமையாக வாழும் வாழ்க்கையோடு இணைத்து பாடப்பட்ட அதாவது மீட்டப்பட்ட ஒரு அருமையான பாடல் இந்தப்பாடல் இந்தப்பாடலின் ஆரம்பத்திலிருந்தே பாடலிலும் பாடல் வரிகளிலும் படக்காட்சியிலும் வீணை வருவதோடு அந்த வீணையின் பின்னிசையில் தொடர்ந்து பாடல் முழுவதும் மீட்டப்படுவது இந்தப்பாடலின் சிறப்பு வீணை பின்னணியிசையுடன் இடையிடையே வரும் இசையிலும் புல்லாங்குழல் மற்றும் குழு வயலின் இசையும் சேர்ந்து இந்தப்பாடல் இனிமையாக்கியிருக்கிறது. பாடல்:- "வீணை மீட்டும் கைகளே... மாலை சூட்டவா?.... மாலை சூட்டும் கைகளே, வீணை மீட்ட வா???... வீணை மீட்டும் கைகளே, உலகமே புகழ்ந்ததே, அது உண்மை அல்லவா" பாடகர்: எஸ் ஜானகி அவர்கள்,  இசை: இளையராஜா, திரைப்படம்: வாழ  நினைத்தால் வாழலாம்........  https://youtu.be/GCkrKM_t9s0

@கலைமகள் எனக்கொரு ஆணையிட்டால்  - படம் : மகாகவி காளிதாஸ் (1966) இந்தப்பாடலில் வீணையின் பின்னணியிசையில் பாடல் ராகமாலிகையில் அமைந்திருப்பது மிக அருமை. கவிஞ்சர் கண்ணாதாசன் அவர்கள் எழுதிய பாடலுக்கு இசை எம் எஸ் வி அவர்களும் பாடியவர்கள் டி எம் எஸ் மற்றும் பி சுசீலா அவர்களும் https://youtu.be/6eiMJvlOHpM

@பாடல்:- இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா? இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும், பி. சுசீலாவின் அவர்களின் குரலில் பிறந்துவந்ததும் மறக்க முடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா? வீணை பின்னணியிசையில் அமைந்த சிறந்த பாடல் https://youtu.be/WlbCfTDv9Q8

@ பாடல் :- யார்தருவார் இந்த அரியாசனம். இந்தப்பாடலில் இடையிடையே வரும் இசையிலும் புல்லாங்குழல் மற்றும் குழு வயலின் இசையுடன் வீணையும் சேர்ந்து இந்தப்பாடல் இனிமையாக்கியிருக்கிறது...     திரைப்படம்: மஹாகவி காளிதாஸ், பாடியவர்: டி .எம் .எஸ், இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன், இசை: கே.வி. மஹாதேவன் https://youtu.be/Fm7QOXpd3jU

@ பாடல் :- சொன்ன சொல்லை மறந்திடலாமா வா.... வா........ உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ இன்னமுதம் பேசிடும் கண்ணா வா...வா..... இந்தப்பாடலில் ஆரம்பம்முதலே வீணையின் பின்னணியிசையிலும் காட்சிகளிலும் வீணை வாசிப்பதைப்போல படமாக்கியிருக்கும் அழகு இந்தப்பாட்டிற்கு மேலும் சிறப்புசேர்க்கிறது.  இடையிடையே வரும் குழு வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையுடன் வீணையும் சேர்ந்து இந்தப்பாடல் இனிமையாக்கியிருக்கிறது...     திரைப்படம்: பெண் (1954) பாடியவர்கள் டீ எஸ் பகவதி மற்றும் எம் எஸ் ராஜேஸ்வரி, பாடலுக்கு இசையில் ஆர் சுதர்சனம், பாடலாசிரியர் பாபநாசம் சிவம் https://youtu.be/Cnc0cHgUR4g

@வீணை இசையும் படக்காட்சியும் கொண்ட, குங்குமம் (1963) படத்தில் வரும் ஒரு பாடல்: சின்னம் சிறிய வண்ண பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, இசை: கே.எம்.மஹாதேவன், பாடியவர்கள்: டி.எம்.சௌந்தர் ராஜன், எஸ்.ஜானகி, பாடலாசிரியர்: கண்ணதாசன் https://youtu.be/mS_DsFaQl28

@அகத்தியர் படத்தில் வரும் அனைத்துப்பாடலிலும் வீணையின் பின்னணியிசையில் பாடல் முழுதும் நிறைந்திருக்கும், இந்தப்பாடல் .. "இன்னிசையை செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவா மாயமாய் நிலைப்பவனே" என்னும் இந்தப்பாடலில் வீணையிசையோடு வயலின், தம்பூரா, மோர்சிங், மிருதங்கம் என  அணைந்ததும் ஒருங்கே அமைந்த ஒரு சிறந்தபாடல் இது  கே வி மஹாதேவன் அவர்களின் இசையமைப்பில் டி ஆர் மகாலிங்கம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் அமைந்த மிக அருமையான பாடல் இது https://youtu.be/UCvYSRVpF2M

@பாடல் :- கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நலம் காக்கும் குணமாதா ஆ...ஆ.. ஆரம்பமே வீணையின் இசையில் தொடர்ந்து பாடல்முழுவதும் பாடல் காட்சியிலும் பின்னணி இசையிலும் வீணையின் இசை இப்பப்பாடலுக்கு சிறப்புசேர்க்கிறது.. படம் சரஸ்வதி சபதம், பாடலின் இசை கே வி மஹாதேவன் பாடியவர் பி சுசிலா மற்றும் குழுவினர்கள் https://youtu.be/nQx_QTk4wVY

@திருவருட்ச்செல்வர் படத்தில் பாடல்:- மன்னவன் வந்தானடி தோழி பாடலுக்கு இசை கே வி மஹாதேவன் பாடலைப்பாடியவர் பி சுசிலா அவர்கள், இந்தப்பாடலில் ஆரம்பம் முதல் இறுதிவரை வீணையின் பின்னணியிசையில் பாடல் மற்றும் படக்காட்சிகள் மிக அருமையாக அனைவரது மனதிலும் நிலைத்து நிற்குமாறு பாடப்பட்ட விதம் மிகவும் அருமை https://youtu.be/IBVrGAiqRGo

@பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் பாடல்:- அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்சேரும் நாள் பார்க்கச் சொல்லடி என்ற பாடலில், பாடலின் ஆரம்ப காட்சி முதல் வீணையின் இசையை பாடல் முழுவதும் வருவதோடு பாடல் காட்சிகளிலும் வீணை வருவது இந்த பாடலுக்கு சிறப்புசேர்க்கிறது பாடலுக்கு இசை ஆர் கோவர்தனம் பாடலைப்பாடியவர் பி சுசிலா மற்றும் டி எம் எஸ் அவர்கள், பாடலை இயற்றியவர் கவிஞ்சர் கண்ணதாசன். https://youtu.be/XGoZnhfXmHg

@வீணையின் பின்னணி இசையில் மிக அருமையான இந்தப்பாடல் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி, படம்: பாக்யலக்ஷ்மி, பாடியவர்: பி. சுசீலா, இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி, இந்தப்பாடலில் ஆரம்பம்முதலே வீணையின் பின்னணியிசையிலும் காட்சிகளிலும் வீணை வாசிப்பதைப்போல படமாக்கியிருக்கும் அழகு இந்தப்பாட்டிற்கு மேலும் சிறப்புசேர்க்கிறது.  இடையிடையே வரும் குழு வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையுடன் வீணையும் சேர்ந்து இந்தப்பாடல் இனிமையாக்கியிருக்கிறது...  https://youtu.be/TmHtHGZZrOQ

@திருவிளையாடல் படத்தில் வரும் அனைத்துப்பாடலிலும் வீணையின் பின்னணியிசையில் பாடல் முழுதும் நிறைந்திருக்கும், இந்தப்பாடல் .. "ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா, நான் பாட இன்றொரு நாள் போதுமா, நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா" என்னும் மந்த இராகத்தில் தொடங்கும் இப்பாடல், பின்னர் தோடி, தர்பார், மோகனம், கனடா எனும் இராகங்களை உள்ளடக்கித் தொடரும் ஒரு இராகமாலிகை பாடல் இது. இந்தப்பாடலில் வீணையிசையோடு வயலின், தம்பூரா, மோர்சிங், மிருதங்கம் என அணைந்ததும் ஒருங்கே அமைந்த ஒரு சிறந்தபாடல் இது  திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965) பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன், இசை: கே.வி மஹாதேவன் அவர்களின் இசையமைப்பில் அமைந்த மிக அருமையான பாடல் இது . https://youtu.be/D0wLIArAayY

@நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை, நான் காத்திருந்தேன், உன்னை பார்த்திருந்தேன்   கண்களும் மூடவில்லை  என் கண்களூம் மூடவில்லை திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை, பாடியவர்கள்:  ஸ்ரீனிவாஸ் மற்றும் பீ. சுசீலா,  இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர், பாடல் வரிகள்: கண்ணதாசன்.https://youtu.be/NdnCxcEderU

பாடல்:- மலரோடு விளையாடும், தென்றலே வாராய் இந்தப் பாடலில் ஆரம்பமே அமர்க்களமாக சோகமான வீணையிசையில் பாடல் தொடங்கி ஒற்றைக்குரலில் ஹம்மிங்கில் பாடல் வர தொடர்ந்து பாடல் முழுதும் சோகமான வீணையிசையில் சோகமில்லாத பாடல் இது . முக்கியமாக பாடலில்  "குறும்புகள் எனோ என்னிடம்" என்கிற பாடல்வரிகள் வரும்போது சினிங்கிடும் கிடார் மற்றும் வீணையின் இசை மிக அருமை, திரைப்படம் தெய்வபலம் (1959), இசை : ஜி அஸ்வத்தாமா, பாடல் : அ மருதகாசி, பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி https://youtu.be/jgxRGsHbVKc

@ மைய்ந்தும் விழியாட பாடலின் முதலில் வீணையிசை வர தொடர்ந்து புல்லாங்குழல் குழு-வயலின், கிடார் என பாடல் முழுவதும் தொடரும் இசைக்கோர்வை  இந்தப்பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.  https://youtu.be/2Wu3TLhStGc

@ பாடலின் ஆரம்பத்தில் வீணை மற்றும் குழு வயலின், என்று மிக அருமையாக தொடங்கும் பாடல் "மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்" பாடல் முழுதும் வீணையிசை தொடர்ந்தாலும் இடையிடையே வரும் புல்லாங்குழல் இசை பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது. https://youtu.be/IHiI-g-PXYM
@ பொன்னென்பேன் சிறு பூவென்பேன் காதல் கன்னென்பேன் என்ற பாடலில் மெல்லிய சிலுங்களான வீணை மற்றும் தம்புரா இசையோடு இடையிடையே வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையும் சேர்ந்து பாடலை இனிமையான பாடலாக மாற்றுகிறது. போலீஸ்காரன் மகள் படத்தில் பாடியவர் PB ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி அவர்கள் பாடிய பாடல் பாடலை இயற்றியவர் கவிஞ்சர் கண்ணதாசன் https://youtu.be/Z-3ixNNaIVg

வீணையிசை பின்னணியிசையாக அமைந்த மேலும் பல பாடல்கள்:- 
பாடல்:- இரவு முடிந்து விடும் - முடிந்தால், பொழுதும் விடிந்து விடும் - விடிந்தால், ஊருக்கு தெரிந்து விடும்...  பாடியவர் PB ஸ்ரீனிவாஸ், P சுசீலா, இசை R சுதர்சனம், கவிஞ்சர் வாலி அவர்களின் பாடல் வரிகள், திரைப்படம் -அன்புக்கரங்கள் (1965), நடிப்பு சிவாஜிகணேசன் மற்றும் தேவிகா. https://youtu.be/bn7Xv5-J4Xk 
@ கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தால் - பாடலில் முதலில் புல்லாங்குழல் தொடர்ந்து வீணை மற்றும் வயலின் என்று இணைந்துவர ஒலிக்கும் பாடல் இது. https://youtu.be/d2KFecrpDvQ
@ பாடல்:-  மெல்ல மெல்ல அருகில்வந்து மென்மையான கையைதொட்டு.. அள்ளி அள்ளி அணைக்கத்தாவுவேன்.. நீயும் அச்சத்தோடு விலகி ...பாடலை பாடியவர் TM.சௌந்தரராஜன், இசை: கே வி மகாதேவன், பாடலாசிரியர்: கண்ணதாசன்  https://youtu.be/Qp0Vkiq1j48
@ பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். எல். வசந்தகுமாரி இருவரும் பாடிப் பிரபலமான பாடல்:-  "கனியோ, பாகோ, கற்கண்டோ" இந்தப்  பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. https://youtu.be/hjyC7vHJOlI
@பாடல்:- ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பேரென்ன படம்: சாரதா, வெளியீடு: 1962, குரல்: P. சுசீலா - PB. ஸ்ரீநிவாஸ், பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன், இசை: KV. மகாதேவன். https://youtu.be/xCCoc5CtO9M
பாடல்:-இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.. படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் (16.05.1959) பாடியவர்கள் : பி.பீ.ஸ்ரீநிவாஸ் - பி.சுசீலா. இயற்றியவர்  : கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம், இசை: ஜி. ராமநாதன், இயக்குனர் : பி.ஆர்.பந்துலு.  https://youtu.be/RMXKvmrAn_Q
பாடல்:- மலரோடு விளையாடும் தென்றலே வாராய். இனிமையான குரல்கள் நல்ல இசையுடன் பிண்ணி பிணைந்து வருகிறது... திரைப் படம் தெய்வபலம் (1959), இசை : ஜி அஸ்வத்தாமா, பாடல் : அ மருதகாசி. 
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி. https://youtu.be/jgxRGsHbVKc
@ பாடல்:- மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்... திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965), இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி, நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன், பாடல் வரிகள்: வாலி.  https://youtu.be/2Wu3TLhStGc
 பாடல்:-சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா, படம்:- குங்குமம், - (12th ஆகஸ்ட் 1963), இசை:- கே.வி.மகாதேவன்; பாடல் வரிகள்:-கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி.எம்.எஸ். & எஸ்.ஜானகி; நடிகர்கள்:- சிவாஜி கணேசன், சாரதா. https://youtu.be/mS_DsFaQl28
@பார்த்து பார்த்து நின்றதினால் பார்வையிழந்தேன் 
@குங்குமம் படத்தில் சிவாஜி -சாரதாவுக்கு ஒரு பாட்டு. தூங்காத கண்ணொன்று ஒன்று’....   https://youtu.be/j7-cDxpGSic
சோகமான வீணையிசையில் பாடல்:-தேடிடுதே வானமிங்கே, தேன் நிலவே நீ போனதெங்கே,  பாடுது பார் ஒரு வானம்பாடி, வாடுது பார் அதன் ஜீவநாடி, திரைப்படம் உத்தமி பெற்ற ரத்தினம், பாடியவர்  P.B.ஸ்ரீநிவாஸ்.  https://youtu.be/GjK8twYITOQ
@ சிந்துநதியின்மிசை நிலவினிலே https://youtu.be/AKLzxSGhVyw
@ கலைந்திடும் கனவுகள் அவள்படைத்தால்  https://youtu.be/9P8Hynotz1M
@ காலையும் நீயே மாலையும் நீயே https://youtu.be/BqI5RwlhUPs
@ சோகமான வீணையிசையில் " உலகே மாயம் வாழ்வே மாயம்" பாடல் https://youtu.be/52Mquy3K4yQ
@ அன்புமனம் கணிந்தபின்னே அச்சம் தேவையா அன்னமே  https://youtu.be/f8jAKQ5bF94
@ பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகியமெனி சுகமா https://youtu.be/qhIczMtCpxA

இடைக்கால திரைப்படப் பாடல்கள் வரிசையில் :-

@ வீணையின் பின்னணி இசையில் மிக அருமையான இந்தப்பாடல் "கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ, படம்: வசந்த மாளிகை, பாடியவர்: பி. சுசீலா, இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், இந்தப்பாடலில் ஆரம்பம்முதலே வீணையின் பின்னணியிசையிலும் காட்சிகளிலும் வீணை வாசிப்பதைப்போல படமாக்கியிருக்கும் அழகு இந்தப்பாட்டிற்கு மேலும் சிறப்புசேர்க்கிறது.  இடையிடையே வரும் குழு வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையுடன் வீணையும் சேர்ந்து இந்தப்பாடலை இனிமையாக்கியிருக்கிறது...     https://youtu.be/iZy6SY9Yqoc

பாடல்:- நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக.. பாடலின் ஆரம்பத்தில் மணியோசை... அது ஆரம்பித்து வைக்கும் தொடக்கமே, அமர்க்களம்.‘  பாடலில் வரும் வீணையும், violinsஉம் (in parallel tracks), Flutesஉம் கண்டிப்பாக உள்ளத்தை கொள்ளை கொள்ளும். என்ன ஒரு uplifting element இந்த பாடலுக்கு இருக்கிறது என்பதை, இந்த interludeஐ திரும்ப திரும்ப கேட்டாலே புரியும். அதுவும் அந்த 26-second markerல் வரும் வீணையில் என் மனம் மகுடிக்கு மயங்கிய பாம்பு. வேறு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை பாடலின் திரைப்படம் என்றும் அன்புடன்’ திரைப்படப் பாடல். பாடியவர்கள் மனோ மற்றும்  எஸ். ஜானகி குரலில் மிகவும் அருமையான பாடல். இசை இளையராஜா https://youtu.be/G8U_-Is12ZE 
@ பாடல்:- ” காதல் மயக்கம், அழகிய கண்கள் துடிக்கும் “. படம் புதுமைப் பெண். ஜெயச்சந்திரன், சுனந்தா பாடிய அருமையான டூயட் பாடல். இசை இளையராஜா. பாடலின்  வீணை ஆரம்பமாக, அதனுடன் சந்தூர் லயிக்கிறது. இங்கே, அருமையான strumming of the guitars. அந்த strummingன் நடுவே, chorus பாப்பாக்களும், ஆண் பாடகரும் ஹம்மிங் செய்ய, பாடல் ஒரு தேவலோக overtone எடுக்கிறது. https://youtu.be/5B4_S-gsR8w

@ அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் - பாடலின் ஆரம்பம் முதலே வீணை மற்றும் வயலின் இசையோடு தபேலாவின் ஓசையில் ஒலிக்கும் அருமையான பாடல் இது. https://youtu.be/vtLDBrwawrM

@ சின்னஞ்சிறு வயதில் மீண்டும் கோகிலா படப்பாடல் சினிங்கிடும் வீணையிசையோடு கிட்டார்,வயலின், மிருதங்கம் என மிக அருமையான இசைக்கலவையில் உருவான பாடல். https://youtu.be/k_z3vSTSB98

@ ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்ற பாடலில் வயலின், பியானோ, புல்லாங்குழல், வீணையென வரிசையான பின்னணியிசையில் ஒலித்திடும் பாடல் https://youtu.be/o6p-PRP1Mt0

@ இளஞ்ச்சோலை பூத்ததா என்ன ஜாலம்... பாடலின் ஆரம்பத்தில் புல்லாங்குழலோடு வீணையும் ஜோடி சேர்ந்தவரும் தொடர்ந்து வயலினோடு தபேலாவும் வீணையோடு மிருதங்கமும் இணைந்து வரும் சிறந்த பாடல் இது. https://youtu.be/W8FK4vGmKLY
@ பாடல்:- ” செவ்வந்தி பூக்களில் செய்த வீடு – படம் மெல்லப் பேசுங்கள், உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி பாடிய அருமையான ஒரு பாடல்அருமையான டூயட் பாடல். இசை இளையராஜா. பாடலின்  வீணை இசை அருமை  இது ஒரு மென்மையான காதல் டூயட்.பாடல்  சற்று வேகமாக வரும். இதில் கவனித்துப்பாருங்கள்….மெலிதான bass-guitarல் ஒரு கொட்டாங்குச்சி வயலின் போன்ற interludeல் தூக்கலாக மிருதங்கத்தின் தாளம். தொடர்ந்து வீணை…இதைவிட ஒரு சொர்க்கலோகம் இருக்கவே முடியாது. அதில் அழகாக இழைத்திருக்கும் fluteன் நேர்த்தியைப் பற்றியும் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும். https://youtu.be/-s1xOxXR39c

@ பாடல்:- ” நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே…" – பாடியவர் எஸ்.பி.பி. – படம்:-துங்காதே தம்பி தூங்காதே,  அருமையான ஒரு பாடல் இசை இளையராஜா. பாடலின்  ஆரம்பம் வீணை. ஆனால், நடுவில் பாஸ் கிடார், லீட் கிடார், எலக்ட்ரிக் கிடார் என்று பயணிக்கும் இடையிசையில், புல்லாங்குழலின் குளுமையும், சந்தூரின் தட்டலும், காங்கோ டிரம்ஸின் தட்டலும் உண்டு.  https://youtu.be/ZH7-ibPXU70

@நிலாவே வா செல்லாதே வா https://youtu.be/wWE0RXvFYp4
@ எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் என்று என்னைக் கொள்ளாதே ... தள்ளிப்போ தள்ளிப்போ https://youtu.be/ZN31q7Jnjyg
@ சீர்கொண்டவா வெண்மேகமே Movie - Naan Paadum Paadal, Music - Ilayaraajaa, Singer - SP Balasubramaniam, S Janaki. https://youtu.be/IIq-pXFzEpM
@  சுகராகமே என் சுகபோகம் நீயே :- படம் கன்னி ராசி  https://youtu.be/SajaMDxeAsM
@ தென்மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே என் மன்னா நீ இன்றி நான் இல்லையே, படம் தியாகம், இசை இளையராஜா  பாடியவர் TMS https://youtu.be/X5wtYdRDCo8
@ ஒரு பொன்மானை நான் காண தகுதிமிதோம் https://youtu.be/S-XvP9p9mOs 
@பாடல்:-பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ பாடும் வானம்பாடி ஹ மார்கழி மாதமோ பார்வைகள் ஓ ஓ ஓ ஈரமோ ஓ ஓ ஓ ஏனோ ஏனோ பாடும் ..https://youtu.be/12V13oDF81c

வீணையிசை பின்னணியிசையாக அமைந்த மேலும் பல பாடல்கள்:-
@  முருகனை நினை மனமே, நலன்கள் பெருகிடும் தினம் தினமே 
@ பொன்வானம் பன்னீர்தூவுது இந்நேரம் 
@ மாலைசூடும் வேலை,  அந்தி மாலைசூடும் வேலை 
@ பூந்தென்றலே .. நல்ல நேரம் காலம் சேரும் ...
@ சீர்கொண்டவா வெண்மேகமே 
@ பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல்நாளே காட்சி பிழையாக 
@ வைகைநதியோரம் நான் பாடும் நேரம் 
@மதுரை மீனாட்சி மாணிக்கதவில் 
@ தேவன் கோவில் மணியோசை நல்ல செய்திகள் சொல்லும் 
@ மயக்கமென்ன இங்கு மெளனம் மென்ன  மனமாளிகைதான் கண்ணே 
@சிந்து நதிக்கரை ஓரம் அந்திநேரம் 
@ அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவன் 
@  பாடினால் ஒரு  பாட்டு தென் நிலாவினில் நேற்று ஓடினேன் அதைக்கேட்டு 
@ தென்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே 
@உன்னை ஒன்று கேட்ப்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னைப்பாட என்னைப்பாட சொன்னால் 
@ இலங்கையில் இளம் குயில் என்னோடு 
@ தாழம்பூவே கண்ணுறங்கு 
புதிய திரைப்படப் பாடல்கள் வரிசையில்:-
@ பாடல் :- மலரே மௌளனமா, மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா என்கிற  இளையராஜா இசையில்  S.P பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ் ஜானகி  அவர்களின் குரலில், கர்ணா திரைப்படத்தில் ஒலிக்கும் இந்தப்பாடலில் வீணையின் நாதம் மிக மென்மையாக இதமாக வருடுகிறது https://youtu.be/AFPOgNmkLZs  


@ இந்த பாரதியார் பாடலில் ஆரம்பம் முதல் இறுதிவரை வீணையின் பின்னணியிசையில் பாடல் மற்றும் படக்காட்சிகள் மிக அருமையாக அனைவரது மனதிலும் நிலைத்து நிற்குமாறு பாடப்பட்ட விதம் மிகவும் அருமை பாடல் வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு, பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு https://youtu.be/drcdEUjBnNo

@வீணையின் பின்னணி இசையில் மிக அருமையான இந்தப்பாடல் "பாடலின் நடுவே நடிகர் விஜய் வீணை பின்னணியிசைக்கேற்ப, வீணையை வாசிப்பதைப்போல நடனம்வேறு ஆடுவர் ... பாடல் தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி, சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா என்னும் பாடல் இடம்பெற்ற படம் "சிவகாசி" பாடலுக்கு இசை தேவா, பாடியவர் கே கே & வசுந்தரா தாஸ்  https://youtu.be/puVyydH18EQ

@ முன்னாள் காதலி முன்னாள் காதலி என்ற பாடலில் பாடலின் இடையிடையே வரும் சிணுங்களான வீணையின் இசை பாடலுக்கு இனிமை சேர்க்கிறது. https://youtu.be/9l6b8RV4iKk

@ நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சில் பாடலில் புல்லாங்குழலோடு தபேலாவும் தொடர்ந்து வீணையிசையும் தொடர்ந்து வரும் பாடல் இது.  https://youtu.be/8HY9095hjQg

@ ஆரம்பமே அமர்க்களமாக வீணையிசையில் ஆரம்பிக்கும் பாடல் "வைகைநதியோரம் பொன்மாலை நேரம்" என்ற பாடல்  https://youtu.be/RiNV_aGsLy8

@பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன் பாடலின் ஆரம்பத்தில் பலப்பொடி டப்பியை  தட்டுவதைப்போல இசை வரும் தொடர்ந்து கிடார் வயலின் இசை தொடர பாடலின் இடையிடையே வீணையிசை வரும் அருமையான பாடல் இது.https://youtu.be/ipbhSDL_SMY
@ டிங் டாங்  கோவில் மணி நான் கேட்டேன்,  உன்பேர் என்பெயரில் சேர்ந்ததுபோல் ஒலிகேட்டேன் https://youtu.be/9799k7_MS5o
@ எங்கெங்கோ எங்கெங்கோ இன்பம் என்று என்னைக் கொள்ளாதே .. தள்ளிப்போ தள்ளிப்போ https://youtu.be/14Ho5FQWjoI
@ பார்த்த முதல்நாளே உன்னை பார்த்த முதல்நாளே காட்சிப் பிழை போலெ https://youtu.be/chcMmxBMKDM
@ இதயம் போகுதே எனையே பிரிந்தே https://youtu.be/g8fcPDG8RhQ
@ படம் அன்னை பாடல் "சின்ன சின்ன கனவுகள் பாரம்மா"  https://youtu.be/ExNKTkLaCgs

வீணையிசை பின்னணியிசையாக அமைந்த மேலும் பல பாடல்கள்:-
@தந்தன நந்தன தாளம்வரும் புது ராகம்வரும் 
@ஒருகாதல் மயக்கம்
@ அழகு அழகு தேவதை 
@ அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே 
@ நின்னை சரணடைந்தேன் கண்ணாம்மா 
@ படம் அன்னை பாடல் சின்ன சின்ன கனவுகள் பாரம்மா 
@ வான் மேகங்களே வாழ்த்துகள் கூறுங்கள் 
@ புன்னைவனத்துக்  குயிலே 
@   மாலை சூடும் வேலை அந்தி மாலை சூடும் வேலை 
@ பூந்தென்றலே,  நல்ல நேரம் காலம் சேரும் அழகிய 
@ சீர் கொண்டுவா வெண்மேகமே 
@ நிலாவே வா செல்லாதே வா 
@ மனமே மனமே மெல்லத்தாலம்பொடு 
@ அன்பே அன்பே கொள்ளாதே கண்ணே 
@ மலைமகள் கைவினை முழங்குதம்மா 
@ நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 

இப்படி "வீணை" என்கிற பாரம்பரிய இசைக் கருவியின் அற்புதமான இசையை மற்ற வாத்தியத்திற்கு தகுந்தாற்போல் பல பாடல்களில் இசைக்கப்பட்டு, திரைப்படப் பாடல்களை மேலும் மேலும் மெருகு சேர்த்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. காலங்களைக்கடந்த இந்த இசைக்கருவிக்கு ரசிகர்களின் மத்தியில் என்றைக்கும் நிரந்தரமான ஒரு இடம் இருக்கும் என்பது திண்ணம். 



வீணை வாத்தியக்கருவியில் மேலும் பல திரைப்படப்பாடல்கள், பழைய பாடல், புதிய பாடல் என வரிசைப்படுத்தப்பட்டு எனது சங்கீத சாம்ராஜ்யம் என்கிற முகநூல் பதிவில் பதிவிட்டுருப்பதை கண்டு, கேட்டு ரசிக்கலாம். 

இந்தத்தொடரின் அடுத்த பகுதியில், தமிழ்  திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "மணியோசை" வாத்திய இசைக் கருவி எத்தனை வகைகள் உள்ளது அதன் சிறப்பு என்ன? இவற்றின் இசை எப்படியெல்லாம் தமிழ் திரைப்படப்பாடல்களை சிறப்புப்படுத்தியிருக்கிறது  என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.... 

ஒரு முன்னோட்டமாக:- 
இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "பாஸ் கிடார், லீட் கிடார், எலக்ட்ரிக் கிடார் என் பலதரப்பட்ட "கிட்டார்" வாத்திய இசைக் கருவியின்  பின்னணியிசையில் அமைந்த பாடல்களை பற்றி தெரிந்துகொண்டு ரசிக்கலாம் வாருங்கள். 
கிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். கித்தாரில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மரபுவழி செவ்விசைக் கித்தார்கள் மற்றும் அக்குஸ்டிக் கித்தார்கள் (ஒலிமப்பெட்டிக் கித்தார்கள்) மரத்தினால் செய்யப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால் (steel) தயாரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நான்கு தொடக்கம் பதினெட்டு வரையிலான தந்திகளைக் (கம்பிகள்) கொண்டுள்ளன. ஆனால் பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது.[1] அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) நான்கு தந்திகளைக் கொண்டன.


கித்தார்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம், அவையாவன அக்குஸ்டிக் கித்தார்கள் மற்றும் எலக்ட்ரிக் கித்தார்கள். இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே மேலும் உப பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர பண்டைய கால மரபு வழி வந்த செவ்விசைக் கித்தார் வகையும் உள்ளது, இது கிளாசிக்கல் கித்தார் (classical guitar) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. கித்தார் அதனது வடிவம், இசையின் வகை போன்ற காரணிகளைக் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய பாடல்கள் வரிசையில் கிடார் இசையில் பல பாடல்களை சொல்லலாம் 
@ சின்ன சின்ன மூக்குத்தியாம், செவப்புக்கல்லு மூக்குத்தியாம், கன்னிப்பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு கண்ணை சிமிட்டுற மூக்குத்தியும்  ..https://youtu.be/pM1W5HuZNLg

@ ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு  https://youtu.be/G97Q6mVk4yc
@ நல்வாழ்த்து நான் சொல்வேன் நல்லபடி வாழ்வென்று  https://youtu.be/nalSqmgDyX0

@ இடைக்காலப்பாடலிகள் வரிசையில் இளையராஜாவின் இசையில் கிட்டார் பாட்டு என்றாலே இந்தப்பாடல் ஞாபகம் வரும்  "என் இனிய பொன் நிலாவே...' https://youtu.be/E-BeQ79uZ00
@ இளையநிலா பொழிகிறது https://youtu.be/s5nLGiRp0zU
@ 'ராஜ ராஜ சோழன் நான்...'எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
https://youtu.be/KjAw0fj7Avk

@ 'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..' https://youtu.be/JjRs0KjYzbo

@ 'பூங்காற்று .. புதிதானது..'

@ 'கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..'

@ 'வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட..' https://youtu.be/bqtA8myPSto

@ 'அந்த நாள் ஞாபகம்..'

@ 'எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..'

@ 'கண்ணம்மா.. காதலெனும் கவிதை சொல்லடி..'

@ இப்படி எத்தனையோ இனிமையான மேற்கத்தேய இசையின் ஆளுமையுடன் கூடிய பின்னணி இசையுடன் இசைஞானி அற்புதமாக அமைத்த பாடல்களில் இடம்பெற்ற கிட்டாரில் தனது கைவண்ணத்தைக் காட்டியது எவராலும் மறக்கமுடியாத பாடல்கள்.

@ "கிட்டார்" இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. வாருங்கள் எனது அடுத்த பதிவில், திரைப்படப் பாடல்களில் "கிட்டார்" இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 
@நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.. நீருக்குள் மூழ்கிடும் தாமரை. https://youtu.be/syq-PCpPT3w


திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.......   

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   


FREE JOBS EARN FROM HOME