FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, September 23, 2015

கொலுசுவின் புது முயற்சி.....

கொலுசுவின் புது முயற்சி 
========================
வரும் அக்டோபர் மாதம் முதல் "கொலுசு" இதழில் ஒரு புது முயற்சியாக, கவிதைகளை ஒலி வடிவில் தர இருக்கிறார்கள். ஆகவே, தங்களின் கவிதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து (.mp3) அனுப்பினால், ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் ஒலி வடிவக் கவிதைகள் இதழில் இடம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். தங்கள் கவிதைகளை தங்களது குரலிலே தமிழ் உலகமே கேட்கும் ஓர் அரிய வாய்ப்பு .

ஒலிவடிவக் கவிதைகளைஅனுப்பவேண்டிய முகவரி  "kolusu.in@gmail.com"

இதை தங்கள் கவிதை நண்பர்களுக்கும் பகிருங்கள் ..நன்றி...கோகி

Sunday, September 20, 2015

.....மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START "

மாப்பிள்ளைதான்:-"A DAY BEFORE MY LIFE START" பழைய புகைப்படம்........ தேடி எடுத்ததா!?  இல்லை இல்லை, அதுவா நம்ம கண்ணுல பட்டுது....அப்புறம் என்ன?....நிறைய விஷயங்கள் ஞாபகம் வருது.......... ஆரம்பத்துல சிதம்பரம்(நடராஜர்) ஆட்சிதான் போகப் போக மதுரை(மீனாட்சி) ஆட்சிக்கு கொண்டு வந்துடறாங்கப்பா!!!!... திருமண வாழ்க்கையில் விட்டுக்குடுக்குற மனப்பான்மை முக்கியமா புருசனுக்கு இல்லாம போச்சின்னா,  சமூகம் பெண்களை திட்டுவது இருக்கட்டும், ஆண்களைக்கூட  "ஒரு பெண்ணை கட்டி குடும்பம் நடத்த துப்பிலையே உனக்குன்னு' மனைவி கோபித்துக்கொண்டு அவங்க அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால'  நமக்குத்தான் டோஸ் ...அசிங்கமப்பா" ......அதனால, எல்லா ஆண்பிள்ளைகளும் இப்படித்தான் எதுக்கு வம்புன்னு அவங்க சொல்லறது சரிதான்னு தலைய ஆட்டிடுறாங்க.....அப்புறம் என்ன? மதுரை(மீனாட்சி) ஆட்சி ஏற்ப்படுகிறது....... இருந்தாலும் இந்த விஷயத்தை பெண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.....ரொம்ப அடம் பிடிக்கிறாங்கப்பா!!!!.....

எங்கள் வீட்டில் நாங்கள் 6 குழந்தைகள் 2அக்கா பிறகு நான் அடுத்தது என் தம்பி, அதற்க்கு பிறகு 2 தங்கைகள்.... ஆகவே இரண்டு தங்கைகளுக்கு  திருமணம் முடியட்டும் பிறகு எனக்கு பார்க்கலாம் என்று அப்பா,அம்மா  சொல்லவில்லை... நானே முடியாது என்றேன்..... அதான் 2 தங்கைக்கும் கல்யாணம் ஆயிடுத்தே உனக்கு பொண்ணு பார்க்கலாமா? என்ற அம்மாவிடம் இன்னும் 2 வருடம் போகட்டும் தங்கைகளுக்கு தலை தீபாவளி, பொங்கல்... வளைகாப்பு சீமந்தம் மற்றும் ஒரு குழந்தை பிறக்கட்டும்... காது குத்தல் எல்லாம் ஓரளவு முடிந்திருந்த நேரம் .....  "கல்யாண பொருத்தம் ரொம்ப அருமை,  நீயும் பெண்ணைப் பாக்கணும் (பின்.குறிப்பு:-பெண்ணிற்கு ஹிந்தி பேச தெரியுமாம்) சீக்கிரம் புறப்பட்டு சென்னைக்கு வா" என்று அம்மாவின் அழைப்பு (பெண்ணின் புகைப்படம் அனுப்பியிருந்தார்...அம்மாவுக்கு மிகுந்த நம்பிக்கை எப்படியும் பையன் விழுந்துடுவான்... புகைப்படத்தில் பொண்ணு  "பேஷா" இருக்கா..!!!)

ஆகவே... நான் தில்லியிலிருந்து உடனே கிளம்பி சென்னைக்கு நேரிலேயே வந்துவிட்டேன்... எப்போது பெண் பார்க்க போகிறோம்???, எதுக்கு திரும்ப திரும்ப நிச்சயதார்த்தம் அது இது என்று அடிக்கடி தில்லியிலிருந்து வரவேண்டும், நிச்சயதார்த்த புடவையும் வாங்கிக்கொண்டு பெண் பார்க்கும்போதே நிச்சயமும்  செய்துவிட்டு வரலாமே, நேரடியாக திருமண தேதி குரித்துவிடலாமே என்றேன்.......பரவாயில்லையே நல்ல ஐடியா என்று கூறியதோடு அப்படியே செய்தோம்.... (என் மைண்ட் வாயிஸ் :- உன் மூஞ்சிக்கு ஒரு பெண் கிடைத்ததும் அப்படியே அமுக்கிடலாம்னு தானே...நான் நாசூக்காக என் மனதை - "கம்முனு கட" என்றேன் ... உண்மையை சொல்ல விடமாட்டேங்கிறாங்கப்பா.....).

பெண்வீட்டில் அனைவருக்கும் சகஜமாகப் பேசிப் பழகும் என்னைப் பிடித்திருந்தது. மாப்பிள்ளைக்கு "ஒகே" என்றனர்....... எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல எனது மைண்ட் வாய்ஸ்  "மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய், மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்" ...........

சினிமா பார்க்கும்போது பாட்டு முடிந்ததும் என்ன நடக்குமோ என்பதுபோல மனசுக்குள்ள ஒரு டக் டக் ...அதுபோல என் மனது சொன்னது ...பொறுமையா இரு, "மாப்பிள்ளை பிடித்திருக்கிறது" என்று பொண்ணு சொல்லணுமில்ல..... எங்கே இந்தப் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால்.... எனவே சற்றும் யோசிக்காமல் "பெண்ணிடம் நான் தனியாக பேசவேண்டும் என்றேன்" என்னுடைய அம்மா மற்றும் அக்காவும் மாமாவும் டேய் என்னடா இது என்றார்கள்?

....... புரிந்துகொண்ட எனது மாமியார்வீட்டினர் சம்மதம் என்றார்கள்..... சென்னை IIT-குடியிருப்பு வளாகத்தின்.... வீட்டின் பின் பகுதி என நினைக்கிறேன்... நான்தான் நிறைய பேசினேன்- எனக்கு  மனைவியாகப்போகும் கல்யாணப் பொண்ணு எதுவும் பேசவில்லை.. ஆனால் திருமணத்திற்குப் பிறகு இது மாறிவிட்டது-மனைவி அதிகம் பேசினார்.... அட வீட்டுக்கு வீடு வாசப்படி.... இது எல்லாம் சகஜமப்பா". 

"மனிதன் தனது வாழ்க்கையை அவனது திருமணத்திற்குப் பிறகுதான் தொடங்குகின்றான்" எதோ புத்தகத்தில் படித்தது..... ஆகவே நான் எனது வாழ்க்கையை தேடங்கவிருக்கும் நாளுக்கு முந்தய நாள் மாலை நேரம் "A DAY BEFORE MY LIFE START" (தலைப்பு புரிந்துவிட்டதல்லவா?) அன்று மாப்பிள்ளை அழைப்பு...... அந்த நேரத்தில் என் மனதில் எங்கோ வானொலியில் பாட்டு பாடுவதுபோல, எனது மைண்ட் வாய்ஸ் "மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மன மாலை சூடிடும்... கல்யாணம்..ஹ ஹ ஹா கல்யாணம், கல்யாணம்"...  

கோவிலிலிருந்து கல்யாண மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்.  திருமண மண்டபத்தை நெருங்கிவிட்டோம் மண்டபத்திலிருந்து மணமகள் அழைத்துவரப்படுகிறாள் என்னோடு மாப்பிளை அழைப்பு வாகனத்தில் இருவரும் சேர்ந்து அமர எங்களை சுற்றி இருக்கும் சுற்றமும், நட்பும் கேலி பேசிக்கொண்டதை மேலும் பல பக்கங்கள் எழுதலாம் இருந்தாலும் சுற்றத்தினர்கள் அவரவர் கைக் குழந்தைகளை மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் மடியில் அமர செய்து புகைப்படம் எடுப்பது என்பது தற்போது பாரம்பரிய செயலாகிவிட்டது. எனக்கும் குழந்தைகள் என்றால் மனதுக்கு பிடிக்கும் என்பதால் எனது மடியில் அமர சற்றும் யோசிக்காமல் இடம் கொடுத்தது...(புகைப்படத்தில் இருப்பது எனது மடியில் என்னுடைய தாய்மாமாவின் மகளின் குழந்தை அதாவது எனது தாய்மாமாவின் பேத்தி) ........குழந்தைகள்  "சு-சு" பண்ணிவிட்டால் அதுவேற கேலி கூத்து என்று... எனது மனைவி மிகவும் கவனமாக அதை தவிர்த்தார் என்று  பிறகுதான் தெரிந்தது....

மாப்பிள்ளை அழைப்பு நடந்த அன்று இரவு கல்யாண மண்டபத்தில் பெரிய சண்டை "மாப்பிள்ளைக்கு" இரவு தூங்க தலையணை தரவில்லை என்று ...
அடடா அப்புறம் என்னாச்சு....
 (தொடரும்)...

வாழ்க்கையில் விடாமல் முயலுங்கள்....
(முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்...முயலாமை வெல்லாது).
விரும்பியதைப் பயிலுங்கள், 
தொடர்ந்து சிந்திப்போம், 
மீண்டும் சந்திப்போம் ,
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி-புது தில்லியிலிருந்து.


Thursday, September 17, 2015

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

ஏமாறுவது தவறா? அல்லது ஏமாற்றுவது தவறா?

கண்ணுக்கு தெரியாத அளவில் மிக மெல்லிய இழையில் நெய்த புது ஆடை செய்துதருகிறோம் என்று இரண்டு நெசவாளர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள், அரசரை சம்மதிக்கவைத்து எந்த வேலையும் செய்யாமல் பல காலமாக அரான்மனையின் விருந்தினராக ஏக போகங்களை அனுபவித்து வந்தனர்.

அரசர் அந்த இருவரையும் அவைக்கு அழைத்து, இனி பொறுமையாக இருக்கமுடியாது, ஆகவே நாளை நீங்கள் நெய்த ஆடையை அணிந்து நகர்வலம் வரப்போகிறேன், உடையை தயார் செய்து வையுங்கள் என்று கட்டளையிட்டார்.

அரசக் கட்டளையை கேட்ட அந்த இரண்டு ஏமாற்றுக் காரர்களுக்கு பயம் வந்துவிட்டது, சமாளித்துக்கொண்டு "அரசே நாங்கள் நெய்த அந்த சிறப்பு உடையானது நல்லவர்கள் கண்களுக்குத்தான் தெரியும், கெட்டவர்கள் கண்கள்க்குத் தெரியாது என்றனர். இதைக்கேட்ட அரசரோடு வீட்டிருந்த அவையிரருக்கும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

ஆகவே அனைவரும் அரசர் அணியப்போகும் அந்த சிறப்பு உடையை பார்க்க ஆவலாக காத்திருந்தனர்......நீங்களும் நானும் எல்லோரும்தான் .... காத்திருக்கிறோம் .... இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு உடை மற்றும் நான் கேட்ட கேள்விக்கு விடை தெரிகிறதா? .."ஆம்" அல்லது "இல்லை" இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பதில் கூற முடியுமா? .. . நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. .........

Tuesday, September 15, 2015

தமிழ் தாத்தா உ.வே.சா.அவர்கள் எழுதிய‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’....‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’:-

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். இப்போது உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து ஒரு பகுதி :

ஒரு நாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.

உ.வே.சா.வின் சுயசரிதம், சுவாரிசியமாக எழுதியிருக்கிறார் ... இதுபோல "எங்கோ மனம் பறக்கிறதே கூட எத்தனை முறை படித்தாலும்,  படிக்கப் படிக்க சிரிப்பும் சந்தோசமும் அதிகரிக்கும் .... நன்றிகளுடன் கோகி ...

என் நினைவில் நிறைந்திருக்கும் "அண்ணா"....

இன்று  பேரறிஞர் அண்ணா என்று போற்றப்படும்  திரு.காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம்(செப்டம்பர்-15), இந்தியாவின் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித் திறன் பெற்ற மாநிலமாகத் திகழ முக்கிய காரணமாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா. நமது தேசத் திருநாட்டின் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க பள்ளிக்கூடம் வரவேண்டும் என்கிற சீரிய நோக்கில், ஒருவேளை உணவாவது அந்த ஏழை குழந்தைகளுக்கும் பள்ளியில் கிடைக்கும்படி செய்தால் அதற்காகவாவது  நிச்சயம் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வருவார்கள் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையில், அவர் இயற்றிய திட்டமும், அந்த திட்டத்தை பிடிவாதமாக செயல் படுத்திய விதமும்தான் அவருக்கு சிறப்பான பெயரைப் பெற்றுத்தந்தது. "நேற்றைய முட்டாள்தனமான திட்டம் என்று தூற்றப்பட்ட பல திட்டங்கள் தற்கால சூழலுக்கு மிகவும் ஏற்றவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது". அதற்க்கு ஒரு உதாரணம்தான் பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டம்.  இன்று உலகமே வியந்து போற்றக்கூடிய திட்டத்தை வகுத்தவர் என்கிற பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்குப் பின்னால் எத்தனையோ சிரமங்களையும், எதிர்ப்புக்களையும் எதிர்கொண்டு அவர் நிறைவேற்றிய திட்டம் தான் "மதிய உணவு திட்டம்". கல்யாணம் செய்துப் பார்... வீட்டைக்கட்டிப்பார்  என்கிற மனப்பான்மை கொண்ட மக்கள், பல ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் உணவு சமைப்பது என்பது 'தினம் ஒரு திருமணம்' செய்வது போல, மிகப்பெரிய செயலாயிற்றே, இது முடியக்கூடிய செயலா? இது என்ன முட்டாள் தனமான திட்டம் என்றெல்லாம் தூற்றினார்கள். 

ஓர் இடத்தில் மிகப் பிரும்மாண்டமான சமையல், பிறகு அது அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் எடுத்து சென்று விநியோகிக்கப்படும் என்கிற ஏற்பாட்டில் மிகவும் சிரமம் ஏற்பாட்டாலும்.. பின்னாளில் அதை சிறப்பாக செயல்படுத்திய பெருமை, மா மனிதர், கர்மவீரர்  காமராஜருக்கே சென்றடையும். 

அதன் பிறகு அந்த திட்டத்தை மேலும் சிறப்படைய செய்த பெருமை நமது எம் ஜி ஆர் என்கிற திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களைச் சேரும். இவரின் காலத்தில்தான் இந்த திட்டம் உலக அளவில் சிறந்த திட்டமாக செயல்படுத்தப்பாட்டது. 

ஆகவே இன்றைய தினத்தில் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித்திறன் படைத்த மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரனமாகத்திகழ்ந்த நமது மனங்களில் என்றும் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவை போற்றுவோமாக. 

இப்படிக்கு நன்றிகளுடன் 
கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.... புது தில்லியிலிருந்து .....

Monday, September 7, 2015

"சேவை வரி" :- சேவை என்றால் என்ன?

சேவை வரி :- சேவை என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு செய்யும் தொண்டுக்கு சேவை என்று பெயர் அப்படிப்பட்ட சேவைக்கும் வரி என்பது சரியில் என்பது பலரது வாதம் ... சேவை என்பதற்கு பதிலாக ஆதாய வரி என்று இருந்திருக்கலாமே என்பது ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே.


"ஆதாய வரி" என்பது அர்த்தம் வேறு அது வேறு ஒரு வரி விதிப்பின் கிழ் வருகிறது, இருப்பினும் அரசாங்கம் இந்த சேவை வரி என்பதில் சில பிரிவுகளை ஏற்ப்படுத்தி சில சலுகைகள் அறிவித்துள்ளது குறிப்பிடப்படவேண்டும்.  என்ன இருந்தாலும் சேவைக்கு வரி என்பது சரியில்ல என்றுதான் தோன்றுகிறது. மக்களின் அன்றாட தேவையான உணவு உடை கல்வி இருப்பிடம் போன்ற அனைத்துமே சேவை வரியின் கீழ் வருவது வேதனைக்குரிய விஷயம். 



கடன் பெற்றால் அதற்க்கு வட்டி கட்டவேண்டும் என்கிற கவலையோடு தற்ப்போது சேவை வரிச்சுமையும் சேர்ந்து சுமப்பது என்பது பல மக்களின் மனங்களில் புகைகின்ற வேதனை எப்போது எங்கு வெடிக்கும் என்று தெரியவில்லை, 



பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிவரையில் மாணவர்கள் கல்விகற்கும் செலவே மிகவும் சுமையான செலவுதான் இதோடு அந்த செலவுகளும் சேவை வரியின்கீழ் வருவது மிகவும் வேதனையான வரிச்சுமை, அரசு இதற்க்கு வருமான வரிவிதிப்பில் கல்விச் செலவுகளுக்குஆகும் செலவுகளை 80சி யின் கீழ் தள்ளுபடி தருவதாக கூறுவது ஏழை விவசாயி, மற்றும் வருமான வரிக்குட்படாத பல பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளில், மாணவர்களின் வயிற்றில் அடிப்பதுபோலத்தான்... இப்படி பலவிதங்களில் ஆராய்ந்து பார்க்கும்போது மிஞ்சுவது வருத்தம் மட்டுமே. 



ஆகவே சேவை வரிபற்றிய மேலும் பலரது கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், நீங்களும் இதில் பாதிப்படைந்திருந்தால் உங்களின் ஆலோசனை என்ன? வாருங்கள் இதைப்பற்றி மேலும் அலசுவோம், ஆரோக்கியமான வழியில் உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் . தங்களின் மேலான கவனம் இந்தப் பதவில் திருப்பியமைக்கு நன்றிகளுடன் கோகி என்னும் கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி. 

Wednesday, September 2, 2015

மாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை, திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர

மாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை,  திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர, வேறு வழியில்லாமல் பாலில் தண்ணீர் ஊற்றி, காப்பி கலக்கமுடியாமல் எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ, என்று அனைவருக்கும்   சுடச் சுட ஏலக்காய் மணக்க தேநீர் "டி" பருகத்தந்தோம்.  அனைவரும் கிளம்பும்போது ஒரு நண்பர் மட்டும் என்னை தனியாக அழைத்து "பாலும் தண்ணி அதில் போட்ட "டீ"யும் தண்ணி, உங்கள் வீட்டில் தண்ணிக்கு பஞ்சமில்லை என நினைக்கிறேன் என்று கூறியதோடு, நிலைமையை புரிந்துகொண்டதாகவும் கூறினார்.... 


நீங்கள் பாலில் தண்ணீர் சேர்த்திருப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவை காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல உங்களிடம் நல்ல விஷயங்கள் குறைய குறைய உங்களது செயல் அதனை காட்டிக்கொடுத்துவிடும்.....கோகி ...

FREE JOBS EARN FROM HOME