FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......


மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்???"......

வேலை, வேலை என்று, நேரம் காலம் இல்லாமல் உழைப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த நேரமும் அலுவலக, தொழில் கூட்டாளிகளோடு, காலத்தைச் செலவழித்துக் கொண்டு, பணம் ஈட்டுவதில் மட்டும் சிலர் குறியாக இருக்கிறார்கள். இதில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது... அவர்கள் இந்த உலகத்தில் பிறந்ததே, தங்கள் தொழில் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ளத்தான் என்று வாழ்க்கை நடத்துவார்கள். பல பேர் இரவு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும்கூட அலுவலகப் பணிக்காகவே நேரம் செலவிடுவார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று வீட்டு நினைவுகள் எதுவும் இருக்காது....வேலை.... அது மட்டும்தான் குறிக்கோள். அது மட்டும்தான் முக்கியம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்..  அப்போதும் அவர் கூறுவது என்னவென்றால் "நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" ஆகவே உடனே எனது உடல்நிலையை சரிசெய்து அலுவலகம் செல்வதற்கு உதவுமாறு மருத்தவரிடம் மன்றாடுவார்கள்...... 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு  சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்??????????".......

"நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" என்று கூறிய பலர், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரையிழந்து இடுகாட்டுக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிரார்கள்... அப்போதும் அவர்களின் நிறுவனம் சிறப்பான நிலையில் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள,அது ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று மருத்துவர் மருந்துச் சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என எழுதியிருந்தால்,அதற்காகஆச்சர்யப்படவேண்டிய அவசியமில்லை.

வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக  ..
ஆலோசகர்-கோகி-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.

No comments:

FREE JOBS EARN FROM HOME