FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, March 28, 2013

என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை,

திடீர் என கடவுள் உங்கள் முன்னம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை, அனைவரும் யோசிக்க முனைந்தார்கள், அவர்களுக்கு தெரியும் "தொட்டதெல்லாம் பொன் ஆகவேண்டும் என்கிற வரம் பெற்ற கதை" ஒருவர் நன்கு யோசித்தபிறகு இப்படி கேட்டார் "மன சாந்தி" வேண்டும் என கேட்பேன் என்றார் ..அதாவது எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் மனம் சாந்தி அடையாது என்கிற நோக்கில் அப்படி வரம் கேட்டார் .. அதற்கு கடவுள் சிரித்தபடியே வரம் தந்தேன் என்றார். அவரது சிரிப்பிற்கு காரணம் இருந்தது ...தேவை என்று ஒன்று இல்லாத "சாதுக்கள்" மற்றும் சில "ஞணிகள்" "சாந்தம்" நிறைந்த மனம் பெற்றவர்கள்.. சாதுக்கள் என்று அழைக்கப்படும் ஒருவர் சாலையோரம் நடந்து வந்துக்கொண்டிருந்தார். பார்பதற்கு எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்திருப்பாரோ? அவ்வளவு தூசுக்கள் படிந்த உடலும் அழுக்கு உடைகளையும் அணிந்திருந்ததால், அவரின் அருகே செல்லக்கூட மக்கள் அஞ்சி, விலகி சென்றுக் கொண்டிருந்தனர், அவரின் கண்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக இருந்தது அதில் அவருக்கு, தனது வெளிப்புற தூய்மையின்மை மற்றும் தனது நிலையைப்பற்றிய எந்த நினைப்பும் இருக்கவில்லை, அடுத்தவேளை உணவு இருப்பிடம் போன்ற எந்த கவலையும் அவரிடம் இருக்கவில்லை. மொத்தத்தில் அவரின் மனம் சாந்தமாக... "மன சாந்தி நிறைந்தவராக" தெரிந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வரம் கேட்டபோது கடவுள் ஏன் சிரித்தபடியே "வரம் தந்தோம்' என்று கூறினாரே அதற்க்கான காரணம் இது தான் " தேவை என்று ஏதுமின்றி ஆசையை தொலைத்தாலே "சாந்தி" கிடைத்துவிடும். ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் இதை, எதற்கு கடவுளிடம் வேண்டி வரமாக பெறவேண்டுமா? http://youtu.be/TdA-ZCZ1omQ

Monday, March 25, 2013

அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி. பாரதிராஜா அவர்களின் பிறந்த தினம்;( born 17 July 1941). கிராமத்து மண்வாசனை நிறைந்த தமிழ் படங்களை தயாரித்தவர் என்ற பெயர் பெற்றவர். இவரின் முதல் திரைப்படம் "பதினாறு வயதினிலே" நானும் எனது நண்பர்களும் பலமுறை பார்த்திருக்கிறோம் இந்த படம் ஒரு சிறந்த படமாக பாரதிராஜா அவர்களுக்கு பெயரும் புகழும் தந்தது. மேலும் இவரின் தயாரிப்பில் எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் "முதல் மரியாதையை", "வேதம் புதிது", "கருத்தம்மா", "கிழக்கு சீமையிலே" போன்ற கிராமத்து படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக ஆறு முறை தேசிய திரைப்பட விருதையும், இரண்டு முறை தமிழக அரசின் திரைப்பட விருதையும் , நந்தி விருது, தெனிந்தியா திரைப்பட தயாரிப்பாளர் விருது போன்ற மேலும் பல விருதுகளையும் பெற்ற சிறந்த தயரிப்பாளும் இவரே , அவரின் தயாரிப்பில் பல நடிகர், நடிகைகளை அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்களும் உள்ளனர். அவர்களில் புதியவார்ப்புகள் படத்தின் முலம் அறிமுகமாகிய நடிகர் (முருங்கக்காய் புகழ்) பாக்யராஜ் அவர்களும் அந்த படமும் பாடலும் எனக்கு பிடிக்கும். என் வாழ்கையில் படம் பார்க்கசென்று பார்க்கமுடியாமல் திரும்ப நேர்ந்த படம். இந்த படம் வெளிவந்தபோது(1979) இந்த படம் திரையிடப்பட்ட சென்னை தேவி-(3-திரை) திரைஅரங்கில், நான் பார்பதற்கு சற்று ஒல்லியாக குள்ளமாக இருந்ததினால், தாவணி உடை அணிந்திருந்த என்னைவிட 4 வயது குறைந்த எனது தங்கையை பார்க்க அனுமதித்து எனக்கு பார்க்க அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று பெற்ற படமானதால் அப்போது என்னால் பார்க்கமுடியாமல் போனது, ஆறும் மாதத்திற்கு பிறகு ஒரு கிராமத்து கொட்டகை திரைஅரங்கில் வாடகை மிதிவண்டியில் நண்பர்களுடன் சென்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்திலிருந்து இந்த அருமையான MARAKKAMUDIYAAபாடல்

இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம்

"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."
இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4

காகிதத்தில் ஒட்டகம் செய்ய தெரியுமா?

பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்" வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். http://www.youtube.com/watch?v=NPN0vfxFYGw&feature=share&list=PL1F871F1F5D547425

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா

a1951-52 ஆம் ஆண்டு பலரின் மனதை கொள்ளை அடித்துச்சென்ற பாடல், வானொலியில் இந்த பாட்டின் தட்டு தேய்ந்து போனதால் இந்தபாடலோடு மழை பெய்வதுபோல சத்தம் கேட்கும். இந்த பாடல் ஒலிக்காத அந்தகாலத்து வால்வு செட் ரேடியோ இல்லை எனலாம் "பாடல் " சம் சமா சம் சம்".... மேலும் தபால் நிலையத்தில் வருடத்திற்கு ஒருமுறை கட்டவேண்டிய ரேடியோ வரி, கட்டாத ரேடியோவை பறிமுதல் செய்ய வரும் அதிகாரியிடம் எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை... என்று மாட்டுக்கொட்டகையில் மறைத்து வைத்தவர்கள் ஏராளம்..இருந்தும் பக்கத்து வீட்டுகாரர்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் ..... இது அந்தக்காலத்தில் 1975 வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்த சுவையான சம்பவம் இது. Vyjayanthimala & Shamshad - Chham Chhama Chham Chham - Bahar [1951] http://youtu.be/b0HA5h5Nc0k
நான் படித்த புத்தகத்தின் மீது எனக்கு அதிக காதல்
என் நாட்குறிப்பு புத்தகத்தை தவிர
மற்றவை இப்போது என்னிடம் இல்லை
என்னைவிட அதிக புத்தகக் காதல்
என் மாணவர்களிடம் இருந்ததினால்
http://youtu.be/41t6DNDIo50
ஹலோ நண்பா.. நான் பெங்களூரிலிருந்து பேசுறேன்...பணமும் பர்சும் தொலைந்த்துபோனதால ஊர் திரும்ப முடியல ஏதாவது ஹெல்ப் செய்யுடா....
அட கவலைப்படாதடா அக்கம் பக்கம் இருப்பவரிடம் "தமிழில்" தண்ணி வேணும்னு சப்தமா கேளு, ஊர் மக்கள் எல்லோரும் உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து இலவசமா பஸ் எத்தி அனுப்பிவச்சுடுவாங்க...... "ஆரோடும் மண்ணில் எங்கும் தேரோடும்.." http://youtu.be/i7wZg2jW2ag
J: சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்

AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

J, AMR: ஆ.... http://www.youtube.com/watch?v=zpBvdajJ0Js&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7

1941-Dance http://www.youtube.com/watch?v=guNcA4P_7zI&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7வாழ்க்கையின் "ஆதாரம்" என்று எதைச் சொல்லலாம் ?
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்) http://youtu.be/gtzxeWqeejw
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
http://youtu.be/aN_Q_mYuaJA
ஸ்ரீரங்கமோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ http://youtu.be/aN_Q_mYuaJA
சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் http://youtu.be/h-mGG5XwQik

ஒரு சிப்பாயின் சீப்பான கருத்தும் சீறுமா?
...கொல்லப்பக்கம் போகதே கொட்டி கிடக்கு ஜாங்கிரி.....
சரி வாங்க ஒரு கோப்பை டீ சாப்பிடலாம்..... சாப்பிடலாமா

#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
"மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்... தெரிந்தது
மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb
தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக நான் ஒன்றாம் வகுப்பை இரண்டு முறை படித்தேன் (இரண்டு ஆண்டுகள்) காரணம் ஆங்கிலப்பள்ளியில் (KG +1) ஒன்றாம் வகுப்பை படித்து முடித்தவர்கள் தமிழ் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேரமுடியாது என்று கூறியதோடு என்னை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்கள் அப்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்த (1968)-காமாட்சி டீச்சர் மற்றும் பலராமன் சார், மிகச்சிறந்த ஆசிரியர்களான இவர்கள் தற்போது உயிருடன் இல்லை ஆனாலும் இவர்களின் பெயர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.... சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரி அரசு இடைநிலைப்பள்ளியில் (நான் படித்தபோது 1முதல் 5 வகுப்புகள் மட்டுமே) இன்றளவும் அவர்களின் பெயர்களை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது ...... வெற்றிலை பாக்கு 2வாழைப்பழம் (2 பழங்களுக்கு மேல் வைக்க கூடாதாம்)அதோடு 4அனா-25பைசா தட்சிணை (பின் குறிப்பு:- தட்சிணை கூடாது என மறுக்கப்பட்டு திரும்பி வந்துவிட்டது. மேலும் இரண்டு வாழைப்பழத்தில் ஒன்றை தலைமை ஆசிரியர் என் கையில் தந்துவிட்டார்) இவைகள்தான் நான் பள்ளியில் சேரும்போது குரு தட்சிணையாக தந்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. (அம்மா எனக்கு மிட்டாய் வாங்க ஐந்து ஒரு பைசா நாணயமாக (5பைசா) தந்ததும் கூட ஞபகம் உள்ளது) என் கணக்கு படி ஐந்து பைசா என்றால் ஐந்து எண்ணிக்கை இருக்கவேண்டும் ...இரண்டு பைசா மற்றும் அரையணா-3பைசா இவைகள் ஒரு பைசா என்பது என் கணக்கு..... வீட்டிலிருந்து பள்ளிக்கு நான்கு மையில் தூரம் அக்காவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தே சென்ற அந்த நாட்கள்..... இன்றைய நிலையில் அடுத்த தெருவிலிருக்கும் பள்ளிக்கு பேருந்தில் செல்லவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இது ஓர் முன்னேற்றமா?.

HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.

  • சுற்றுக்களை எண்ணிக்கொண்டு கேட்கவேண்டியதை மறந்துவிட்டு கோவிலுக்கு போவதால் என்ன பயன்? "பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு, இந்தப் புள்ளையாரு?" http://youtu.be/juVSazxOH8c
  • .காலையில் பத்திரிகை படிக்கும் கணவனை கோபித்துக்கொள்ளும் மனைவிக்கு, (கல்யாண) பத்திரிக்கையால் தனக்கு வாழ்க்கை வந்தது என்பதை மறந்துவிட்டால் எப்படி ? "வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா.." http://youtu.be/5cmfqO-e020

  • சாகடித்து சென்ற உன்னை சாதாரணமாய் மறந்துவிட்டால், சர்வகாலமும் நீதான் நான். (மண்டையில் புகுந்ததா? ... இன்னும் வால் மட்டும் உள்ளே போகவில்லை ) "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே..." http://youtu.be/bqRlw-ZemL4
  • சில நேரம் சிலரின் முகத்தில் ஒருவித ஒளி வட்டம் தெரியும் பார்த்த அனுபவம் உண்டா (இது "ஹரிசாடு" போன்றவர்களும் பொருந்தும்)

  • மனதில் "மறதி" என்ற இருள் சூழ்ந்திருந்தால், "சுச்சு" போட்டதும் விளக்கு எரியாது!!!!!!. (YOU-TUBE...LIGHT) ....என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா .....http://youtu.be/WxGP-yQj7r0
    ஓடுவது சாக்கடையே ஆனாலும், அதில் மிதக்கும் வண்ண மலரைக்கண்டு ரசிக்க பழகவேண்டும்.
    இந்தியாவிற்கு மட்டுமல்ல "முகநூல்" ஒரு சர்வதேச புத்தகம் .. ஆழம் காணமுடியாத... மிக நீண்ட தொடர் இது
    "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" பலமுறை என் மணைவியிடம் இதுகுறித்து பேசியதுண்டு, தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும்போது சில வாளிகளே தேவைப்படுகிறது, ஆனால் ஒரு நாள் தொட்டி நிரப்ப மிசாரம் இல்லாதபோது, இரண்டு தொட்டி அளவுக்கு தண்ணீர் செலவானது. ஏழைகள் எப்போதும் ஏழையாகவும் இருக்க இந்த உதாரணம் சரியாக பொருந்தும், ....ஒரு நூறு ருபாய் தாளை ஒரு ஏழைக்கும், பணக்காரனுக்கும் தரப்பட்டபோது, ஏழை மிக மகிழ்ச்சியாக அதை செலவு செய்து, குடிப்பதற்கு சாராயமும், விலை குறைந்த (அழுகிய) காய்கறிகளுடன் பன்றியின் மாமிசமும், மனைவியிடம் தந்தது சமைக்க சொன்னான், குடித்துவிட்டு பன்றியின் மாமிசம் உண்டதில் அதுவும் மிக அதிக சூட்டில் வேகவிக்க போதிய வசதி ஏழையிடம் இல்லாததால் அதில் இருந்த சில கிருமிகள் அன்று இரவே அவனை மிகப்பிரிய நோயில் தல்லா, அவனது மனைவியின் தாலி சில ஆயிரங்களுக்கு அடகுவைக்கப்பட்டு உயிர் பிழைத்தான் , பணக்காரனோ அந்த நூறு பணத்தில் இரண்டு தரமான ஆப்பிள் பழத்தை தோல்சீவி உண்டான், வயறு நிரம்பாத சத்துள்ள உணவின் மகிமை அவனை உறங்கவிடாமல் (வயிறு நிறைய சாப்பிட்டால்தானே உறக்கம் வரும்) அவனது சில லட்சங்களை மேலும் பல லட்ச்சங்கலாக பெருக்கியது. "பாடலுடன்- கதையும், கருத்தும்" என்கிற நிகழ்ச்சிக்காக நான் எழுதிய வானொலி நிகழ்ச்சியின் ஒரு பகுதி இது. ....பாடல் "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" http://youtu.be/wBq_ecZbO9M
  •  
  • திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம்

    எங்கெங்கு காணினும் வீணையின் பாடல்கள்... பேசாம இதை வீணை வாரம் என்று கொண்டாடிடலாம். வீணை அழகாக பாடுவதை கேட்டதுண்டா? நான் வீணையின் ரசிகன்...வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா என்றால் அதற்க்கு பொருத்தமானவர், தற்போது புகழின் உச்சியில் இருக்கும் வீணை விற்பன்னர், கலைமாமணி "திரு .ராஜேஷ் வித்தியா" அவர்கள். இவரின் பெரியப்பா ஒரு இசைமேதை G.ராமநாதன் அவர்கள், அவரின் இசையில் உருவானதுதான் "தெய்வத்தின் தெய்வம்" படப்பாடல்கள் இந்தப் படத்தில் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் அற்புதமான தெய்வீக வரிகளுக்குள் வீணை இசை பின்னிப் பிணைத்திருக்கும் "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" அசத்தலான வீணை விருந்துடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தொடர்ந்து பாடல் முழுதும் வீணை இசைதான் ஆக்கிரமித்தாலும் "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் " என்று ஜானகி அவர்கள் ரொம்பவே உருக்கமாகப் பாடும்போது வட இந்தியக் இசைக் கருவியான ஷெனாய் இசை இடையில் வந்து மனதை எதோ செய்துவிடுகிறது...அப்படிப்பட்ட இசைமரபில் வந்தவர்தான் "ராஜேஷ் வைத்யா" என்ற இந்த வீணை இசைக் கலைஞர், மெய் சிலிர்க்க வீணையை வாசிப்பார். பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்கமாக வீணையை மீட்டுவார். இவரின் கைகள் வீணையில் விளயடுவதைப்பார்க்க அருமையாக இருக்கும் அத்தனை இலகுவாக வேறு எவராலும் வாசிக்கமுடியுமா? சில வாரங்களுக்கு முன்பு இவரின் நேர்காணல் "பாட்டு தர்பார்" நிகழ்ச்சி ஒன்று சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டது. இவர் "விஷ்வ துளசி" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். Kurai Ondrum Illai http://youtu.be/ufBJBjEO4F8
    Rajesh Vaidhya - திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம் என்னுள் இருக்கும் இசை நரம்புகளை என்னவோ செய்கிறது!!! இனிமை.. Thunbam Nergayil - Veena Art வித விதவிதமான வீணைகள் http://youtu.be/n9LXyg1gapE

    "பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... டி.ஆர்.பாப்பாவின்....

    சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI
    வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2004, பழம்பெரும் திரைப்பட, மெல்லிசை இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மாரடைப்பால் காலமானார். அவருக்குவயது 81.

    சிறுவயது முதல் பாடல்களைப் பாடியபடி வளைய வந்த இவரை பார்க்கும் குடும்ப நண்பர்கள் அனைவரும் "பாப்பா பாட்டு பாடு" என் அழைக்க.... பின்னாளில் அதுவே இவருக்கு பிடித்த புனைப் பெயராக, அனைவராலும் அழைக்கப்பட்ட சிறந்த வெள்ளித்திரை மற்றும் AIR-வானொலி நிலைய இசைஅமைப்பாளர் என்ற பெயர்பெற்ற, சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா அவர்கள் 1923ம் ஆண்டு பிறந்தவர். தனது தந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா அவர்கள் 1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார்.
    சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது.

    இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர்.

    சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கலைஞ்சர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் உருவான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் பாப்பா.
    டி.ஆர்.பாப்பா, அவர்களின் இசையமைப்பில் TMS அவர்கள் பாடி உருவான இரவும் பகலும் படப் பாடல் இது
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காதல் என்பது தேன் கூடு
    அதை கட்டுவதென்றால் பெரும்பாடு
    காலம் நினைத்தால் கைகூடும்
    அது கனவாய் போனால் மனம் வாடும்
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உயிருக்கு உருவம் கிடையாது
    அந்த உயிரின்றி எதுவும் நடவாது
    உருவத்தில் உண்மை தெரியாது
    என்றும் உலகத்தில் நேர்மை அழியாது
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
    அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
    உள்ளத்தின் கதவுகள் கண்களடா
    இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
    சிந்துபைரவி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான, சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல் தமிழர்களின் மனதில் வாழ்துகொண்டிருக்கும் ...இன்றைய இளையர்களும் கூட ரசித்து கேட்கும் பாடல். http://youtu.be/eoldjJS1OWI

    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

    Mami : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
    அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
    அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
    பட்டு பொடவயை வாங்கிக்கிறா
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி.. பட்டூ…
    அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
    அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
    மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி
    சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ
    புடவைக்கேதடி.
    அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
    Mami : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
    உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
    Mama : பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
    Mami : நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
    நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
    எட்டுக்கல்லு ? போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு
    Mama : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
    சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
    Mami : எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு .. ம்,,கும்
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ..ஊ….
    Mami: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…
    Mama : ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு..ஊ..
    Mami : என்னத்த செய்வேள்
    Mama : சொன்னத்த செய்வேன்
    Mami : வேரென்ன செய்வேள்
    Mama: அடக்கி வைப்பேன்
    Mami : அதுக்கும் மேலே
    Mama : ம்ம்….. பல்ல உடைப்பேன்
    Mami : ஆ…ஆ..ஆ.ஆ….
    அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
    அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
    Mama : பட்டூ.. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
    பட்டு நமக்கேண்டி , பட்டு நமக்கேண்டி
    MOVIE : ETHIRNEECHCHAL
    SINGER : TMS & P SUSHEELA
    MUSIC : MSV http://youtu.be/-gfOuldRWzU

    திரு. R D பர்மன்

    இன்று பிரபல இசை அமைப்பாளர்கள் வரிசையில் திரு. R D பர்மன் அவர்களின் பிறந்த தினம் (27-ஜூன்), ஏராளமான இந்தி திரைப்படப் பாடல்கள் இசை அமைத்திருந்தாலும்,  தமிழில் நிறை பாடலுக்கு இசைஅமைத்து பல பாடல்களை சூப்பர் ஹிட் பாடலாக தந்திருக்கிறார் அதில் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் பாடல் நடிகை நதியா அவர்கள் நடித்த -பாடல் -"நதியா நதியா நைல் நதியா" - இந்த பாடல் தமிழில் RD
    பர்மன் அவர்களுக்கு அமைந்த சூப்பர் ஹிட் பாடல் படம் *'பூ* மழை பொழிகிறது பொதுவாக கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து
    மட்டுமா..தேர்ந்தெடுக்க மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப்  பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய  பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன்
    இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா   தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில்   பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...',
    லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை',   பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி   இசையில் ப்ளாக் மெயில் பாடல்...*"மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ்,  அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்...** நிறைய இருக்குங்க...  http://youtu.be/i7nhb4Fh_tE

    எஸ்.வி. *ரங்கா ராவ்*

    இன்று எஸ்.வி. *ரங்கா ராவ்* (03-July)அவர்களின் பிறந்த தினம், இவரைப்போன்ற சிறந்த குணச்சித்திர *நடிகரை, தமிழ் திரையில் இனி பார்ப்பது கடினம். அவரின் ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரின் நடிப்புதான் கதனாயகனைப்போன்று ஒரு தனி ஆளுகைத்தன்மையுடன் இருக்கும் ...அவர் நடித்த படப்பாடல்களில் அவருக்கு அதிக போரையும் புகழையும் தந்த பாடல் மாயாபஜார் -"கல்யாண சமையல் சாதம்", மற்றும் "கண்ணா கருமை நிறக்கண்ணா" *'முத்துக்கு முத்தாக' ஆகிய பாடல்கள் முத்தான பாடல்கள். இதுபோன்ற பல பாடல்கள் உள்ளது ...... (1963)நானும் ஒரு பெண், படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட்  அடித்திருக்கிறார் " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு . ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்." ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி.
    ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்....நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...." - ராதா படாத
    பாடு படுத்துவார். http://youtu.be/zapJyr8-p2g

    "பாலக்காடு உன்னி கிருஷ்ணன்"

    #திரையிசை மற்றும் கர்னாடக சங்கீத இசை புகழ் "பாலக்காடு உன்னி கிருஷ்ணன்" (P. Unnikrishnan)* அவரின் பிறந்த தினம் (born 9 July 1965). பாலக்காட்டில் பிறந்த இவர், தமிழகத்தின் -சென்னையில் படித்தவர். தனது 12 வயதிலிருந்தே சங்கீத வாழ்கையை தொடங்கியவர், மனம் உருக உருக பாடும் உன்னி கிருஷ்ணன் பாடல்கள் எல்லாம் மனதை வருடிக்கொடுக்கும் பாடல்களாகவே என்னால் உணரமுடிகிறது. இரண்டுமுறை
    அவரின் இசைக்கச்சேரிக்கு சென்றிருக்கிறேன், அவர் எப்போதும் ஜம்மென்று ஜிப்பா  போட்டுக்கொண்டு காட்சியளிப்பது அவருக்கென்றே அமைந்த ஒரு தனி சிறப்பு, அவரின் கர்நாடக இசைக்கச்சேரி ஆரம்பித்துவிட்டால் ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி அவரின் தெளிவான குரலின் இனிமையால் கட்டிப்போட்டுவிடுவார். உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கும்.
    அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற  ஓர் உணர்வு உண்டாகிறது. அவர் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன, மனதை உருகவைக்கும் மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் அவரின் குரலிலேயே கொண்டுவந்துவிடக்கூடிய வித்தகர். அவரின் தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன் வந்து பாயுது என்று நம்மையும் பாட வைக்கும் குரல் ஜாலம் கொண்டவர். நாம் இன்று அவரின் பிறந்தநாளுக்காக, தேசிய விருதைப்பெற்றுத்தந்த அவர் பாடிய
    "என்னவளே அடி என்னவளே" A. R. ஹ்மான்<http://en.wikipedia.org/wiki/A._R._Rahman> இசையில்
    அமைந்த இந்த பாடலை கேட்போமா. http://youtu.be/E_vMpqTSXxM

    "தண்டம்"

    "தண்டம்" என திட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்,... தமிழ் அகராதிப்படி "தண்டம்"-என்பது வரி, அபராதம் மற்றும் 'நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் ஒரு கம்பு' அல்லது 'கோல்' (கோலாடக் குரங்காடும் என்பார்களே அந்தக் 'கோல்') அப்படிப்பட்ட இந்தக் கோலினால் அதற்க்கு எந்தப்பயனுமில்லை, அது யார் கையில் இருக்கிறதோ அவர் அதை பயன்படுத்திக்கொள்வார்....ஆகவேதான் 'தண்டம்" என திட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தினர். இதுவே ஒரு ஆயுதமாக மாறும்போது "தண்டாயுதம்" அது மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதால் இரும்பு, வெண்கலம், மற்றும் ஐம்பொன் போன்ற உலோகங்களினால் செய்யப்பட்டது . ...சரி சரி விஷயத்துக்கு வருவோம், இப்படிப்பட்ட "தண்டச்சோருகள்" அடிவாங்கியதால் கிடைக்கப்பெற்ற வாய்ப்புதான் ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பாட்டு.... ராம் லட்சுமணன் படத்தில் இந்த வசனத்திற்கு பிறகுவரும் பாட்டு "அடடா எல்லாம் தண்டச்சோறு அடியாள் இங்கு எத்தனை பேரு அடடா எல்லாம் தண்டச்சோறு சும்மா எதுக்கு பந்தா அட கும்மாங்குத்து இந்தா." நான்தான் உங்கப்பண்டா, நல்லமுத்து பேரன்டா....... http://youtu.be/fKRO26_jvIs

    பாதிப் பேர் கழுதைகள்?

    ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன், பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,
    “”இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
    “”நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
    ... கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “”மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.
    இது ஒரு "ஆமாமில்ல" கருத்துக்கதை.... ஆமாவும் உண்டு இல்லையும் உண்டு ... பல சமயங்களில் இதை நான் விர்ப்பனையாளர் கூட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அவர்கள் எப்போதும் குறிப்பிட்ட சில காரணங்களால் இலக்கை அடையமுடியவில்லை என்று மற்ற துறையை சேர்ந்தவர்களை குறை கூறுவார்கள்... சாக்கு போக்கு சொல்லுவார்கள், ஆகவே கூட்டம் ஆரம்பமானதும் முதலில் இப்படி கூறுவேன் " எனது பனியின் இலக்கை அடயமுடியாமலும், மற்றவர்களை குறை கூறுபவனாக நான் இருந்தால், இந்த நிறுவனம் வெளியேற்றப்படவேண்டிய முதல் ஆளாக நான் ஆகிவிடுவேன். ஆனால் குறைகூற என்னிடம் ஏதும் இல்லை, ஆகவே இன்னமும் நான் இங்கு பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்...... இனி ஒவ்வொருவராக வந்து அவர்களின் குறைகளைக் கூறலாம்?

    மொழி

    தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.

    புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....

    மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள். வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

    இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் ....

    நீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். திடீரென்று அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவருக்கு மருத்துவ மற்றும் வேறுவித அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மின் தூக்கியை பயன்படுத்தும்போது இடையில் பல இடங்கள் நின்று போகுமாறு ஏற்க்கனவே மின்தூக்கி விசைப்பலகையில் (LIFT SWITCH) சமிக்கைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை நீக்க, விசைப்பலகையின் ஏதாவது இரண்டு பொத்தான்களை உதாரணத்திற்கு என் 4 மற்றும் 6 ஆகிய பொத்தான்களை அழுத்திக்கொண்டு மூன்றாவதாக வேறு ஒரு என்னை, 2 அழுத்தினால் ரீசெட்(RESET) என்கிற முறையில் அனைத்து தளங்களிலும் நிற்கவேண்டிய சமிக்கைகள் நீக்கப்பட்டுவிடும். உடனே நீங்கள் செல்லவேண்டிய மாடி-குடியிருப்பு தளத்தின் என்னை மட்டும் அழுத்தினால் அந்த இடத்திற்கு மட்டும் மின்தூக்கி இயங்கும் . இதை அவசர கால உதவிக்குமட்டும் பயன்படுத்துங்கள் .... http://youtu.be/TvBS0Dl6g2E

    நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்

    உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது ஒரு சிறந்த கடமை. (முகநூளில் ரசித்த பகுதிக்கு ஒரு "LIKE-லைக்" போட்டு விருப்பம் தெரிவிப்பது போல)..... ஒரு சிறு புல்லைக் கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு, இத்தனை உணவும், உடையும் மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே, நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டி விட்டுப் பிறகு நாம் தான் உண்ணப் போகிறோம். நாம் பலவிதமான ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திருவாபரணங்களையும், வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால் எங்கும் நிறைந்த பரம்பொருளை சில விக்ரஹங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச்செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப் பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால் தான் அங்கு பூஜைகள் குறைவின்றி நடக்கும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் புண்ணிய மொழி வழங்கும் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் நம் முதல் கடமை. -நன்றி தினமலர் ஆன்மீக வகுப்பறை.
    ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும், நம்பினோர்க்கு அருளும் முருகா...
    நற்பண்பு நல்லறிவு செழிக்கவேண்டும்.... அதை நான் கண்டு மகிழவேண்டும்....
    பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுத கே. வி. மகாதேவன் அவர்கள் இசை அமைத்த "தேவரின் - துணைவன்" படத்திற்காக... http://youtu.be/zPsC1dtyGe0

    பிறந்தநாள் பரிசு

    அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகளிடம் உனக்கு பரிசுப்பொருட்கள் வரும் பொது மகிழ்ச்சிதானே என்று கேட்க அவளும் ஆமாம் என்றால. இந்த வருடன் அதை சற்று மாற்றி நீ மற்றவருக்கு பரிசு தந்தாள் எப்படி, என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை தந்தாள் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன் சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முப்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொடாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எண்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காவவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள். எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று.

    இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்.....HAPPY BIRTH DAY 2 U.... Wish you many happy returns of the day ... மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்களும், உங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் குடும்ப நபர்களும், சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... "நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே, நூறாண்டு காலம் வாழ்க "... http://youtu.be/i-jlk4dEFLY



    Saturday, March 9, 2013

    மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்... நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது" என கூற எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ... அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட, நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்... அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்... இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்.... Koonthal Karuppu KV Mahadevan TMS P Susheela MGR கூந்தல் கருப்பு Song-கூந்தல் கருப்பு..http://youtu.be/7qv2K1Gd82c

    மலரும் நினைவுகள்:-நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன் ?....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ... எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது...போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார் ரசிகன் என சொல்லிவிட்டேன்..... சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் ஆருபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் ஹீரோ "உங்கள் ஆளு இந்த படத்தில் சூப்பர் அல்லது சொதப்பிவிட்டார் என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்" அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை... அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

    மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும் பொது நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில் ஓர் கல்லூரி விழாவில் யார் ஆதிகநேரம் அறுவை செய்கிறார்களோ அவர்களுக்கு அறுவை மன்னன் பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா , .................மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டார்கள் (பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்) http://youtu.be/oHUsQGYEen4

    "நினைத்தாலே இனிக்கும்" மற்றும் "பிரியா" படப் பாடல் படமாக்கப்பட்ட இந்த இடத்தின் அருகேதான் நான் தங்கியுள்ள 21- அடுக்கு குடியிருப்பில் தற்போது எனது இருப்பிடம் உள்ளது , நான் தினமும் காலையில் உடர்ப்பயிற்சி செய்யும் இடம் இது (சிங்கப்பூரின் - சீன தோட்டம் மற்றும் அதன் அருகே அமைந்த ஜப்பான் தோட்டம்-(இங்கு 5 வித வண்ணத்தாமரை மற்றும் "இக்கிபானா"-உலகிலேயே அதிசய குட்டி மரங்களையும் இங்கு காணலாம் ) அருமையான இடத்தில் இருக்கிறாய் என்று எனது நண்பர்கள் கூறினாலும் எப்படாப்பா இந்த ப்ராஜெக்ட் வேலை முடியும் எப்ப நம்ம ஊர் போகப்போறோம் என்கிற ஏக்கம் உள்ளூர இருக்கும் "சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா ?????????? http://youtu.be/5GA2rHlWYxE
    இந்த படம் திரையில் சிவக்குமார் முருகன் வேடத்தில் தோன்றியபோது எனக்கு முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டி ஒருவர் அவரது கன்னத்தில் போட்டுக்கொண்டு "முருகனே என் அப்பனே ' என்றார்... அப்போது அவர் அருகில் இருந்த ஒருவர், பாட்டி அது முருகன் இல்லை சிவகுமார் என்றார் அதற்க்கு அந்த பாட்டி "சிவா குமாரன்தான் முருகன்" என்று ஒரு போடு போட்டார். எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை... சிலநேரங்களின் நான் நேரடியாக திரையை பார்ப்பதைவிட அதை பார்க்கும் முகங்களை பார்பதுண்டு... ஆஹா எத்தனை விதமான ரசனைகள் முகத்திற்கு முகம் வேறுபாடும்அந்த ரசனை ...நீங்களும் அதை நேரில் பார்த்தால்தான் உங்களுக்கு புரியும். 

    # Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala இந்த "பத்ரகாளி" திரைப்படம் முடிந்த கையேடு படத்தின் கதாநாயகி ராணி சந்திரகலா மும்பை அருகே நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார் ஆனாலும் இந்த படப் பாட்டில் அவர் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார், இந்த படம் சிவகுமாருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது, (115 நாட்கள் அரங்கு நிறைந்து ஓடிய படம் ) இந்த படத்தின் அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். எல்லா பாடலும் எனக்கு பிடிக்கும் அதிலும் முக்கியமாக இந்த பாடல் (உன் அருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது- உன்மடியில் நான் உறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ) Song-Kannan Oru Kai Kuzhanthai :- Movie:-Bhadrakali ,music composed by Maestro Ilaiyaraja,:- Sivakumar & Rani chandrakala http://youtu.be/HrPSdzcsrsE
    மேலும் தவசி மற்றும் அருணாசலம் போன்ற படங்களில் நடித்த காலம்சென்ற(விமான விபத்தில் பலியானார்) நடிகை "சௌந்தர்யா" அவர்களின் பிறந்த தினமும் இன்று ஜூலை 17. அவரின் நினைவாக இந்த பாடல் " மாட்லாடு மாட்லாடு மல்லிகே என்று ஆரம்பிக்கும்... உறவினர்கள் சேர்ந்து பாடும்படி படமாக்கப்பட்ட கொண்டாட்டமான பாடல் இது http://youtu.be/X0bznnzTdno... விபத்தில் பலியானார் என்று குறிப்பிட்டிருப்பது மிகப் பொருத்தமான வார்த்தை ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற பொது நடந்த விமான விபத்து அது, இப்படி ஒரு சிறந்த நடிகை விமான விபத்தில் பலியானார் என்பது இவரை சார்தவருக்கு மட்டுமில்லை திரைத்துறைக்கும் இழப்புதான்.
    #"ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே Raathaiyin Nenjame " Movie:Kanimuthu papa, Music:TV Raju...Singer:P Susheela:-இந்த படம் 1972 இல் வெளிவந்தது, ராஜு அவர்கள்தான் இந்த பாடலை ஒரு ஹிந்தி படத்திலிருந்து "ஷர்மிலி (1971)" காப்பி அடித்தார் ."இந்த பாட்டு கணவன் மனைவிக்கு நடுவில் உள்ள புனிதமான உறவை பற்றிய பாடல் என்னக்கு மிகவும் பிடிக்கும், " ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே, ஆனந்த நினைவுகள் அன்று வந்த உறவிலே , வசந்த காலம் நேரில் வந்து வாழ்த்து கூறும் எங்களை .(ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே)..வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்...கோவிலை போலவே குடும்பத்தை போற்றுவேன் ..மலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன். ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே."

    தமிழ் திரைப்பட சரித்திரத்தில் முதன் முதலில் வில்லன் நடிகருக்கேன்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்ததென்றால் அது வில்லன் நடிகர் ஜெமினி பிக்சர்ஸ் -சந்திரலேகா - "ரஞ்சன்" அவர்களுக்குத்தான்..... "அவா ஊதினா இவா வருவா" என்கிற பிரபலமான வசனம் இன்றும் பேசப்படும் சிறந்த வில்லன் வசனமாகும். முதன் முதலில் தமிழில் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமும் இசை நடனமும் இதுவே. சந்திரலேகா"வில், எம்.கே.ராதா, ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை மற்றும் சந்திரலேகா திரைப்படம் ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப்படம்( 3.5 மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்தது பார்க்கவேண்டிய பெரிய படம் ) மிகவும் விறுவிறுப்பாக ஓடிய படம். வில்லனுக்காகவே ஓடிய படங்களின் பெருமையில் அதன்பிறகு வந்த எம் ஆர் ராதா மற்றும் நம்பியார் அவர்களும் மேலும் அந்த வரிசையில் தற்போதைய நடிகர் "தகடு தகடு"சத்யராஜ் அவர்களுக்கும் உண்டு. http://youtu.be/jW-J8qU4cMA

    # கல்லையும் கரைக்கும் சங்கீதம்....பாடல்-" சிவசங்கரி.... சிவானந்தலகரி, சிவசங்கரி ...சந்த்ரகலாவதி ஈஸ்வரி" கண்டசாலாவின் இந்துஸ்தானிய சங்கீத பாடல் படம்;-(JAGADHALAP PRATHABAN) ஜகதலப் பிரதாபன் (இதன் தமிழ் பதிவு சீர்காழி பாடியதும் உண்டு. கண்டசாலாவின் குரல் இனிமையோடு வர...சீர்காழி உற்சாகம் குறையாத கணீர் குரலோடு. ஒரே பாடல் .. ஆனல் இருவித ரசனை.) .http://youtu.be/xq0l5yT818U இது பாடல் இல்லை சிறு இசைக்கச்சேரி கருணா அமிர்தமுளு புரியகு நிலுமா, மனசுக்கு சுகம்கா மகிமை சூப்பகா ...Please tune in to A9 Radio and listen this song now.. in broth version / voice of Seergazhi Govindarajan & Ghantasala....

    ♥கொன்றால் பாவம் திண்றால் தீரும்♥

    உங்களுக்கு இதைபற்றி...இதன் பொருள் என்ன என தெர்யும? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் சொல்லுங்கள்.
    #
    என்னக்கு தெரிந்தது :- இந்த பழமொழி ஒரு கதையால் வந்தது. ஒருவர் பூனை ஒன்றை அறியாமல் கொன்றுவிட அதன் பாவத்தை போக்க அந்தனரிடம் சென்றான். அவரோ கொன்ற பாவம் தீர தங்கத்தால் ஒரு பூனை செய்து தானம் செய்யவேண்டும், அது முடியாது என்றால் வெள்ளியில் அல்லது சுவையான வெல்லத்தில் பூ...னை செய்து தானம் செய்யவேண்டும் என கூற...அவ்வாறே சுவையான வெல்லத்தில் பூனை செய்து தானம் செய்துவிட்டு உடனே அந்த பூனை வெல்லத்தை புடுங்கி தின்றுவிட்டார். அதாவது பூனை கொன்ற பாவம் அந்தணருக்கே, வெல்லம் தின்ற பவம் எனக்கு என கூறியதால் ... "கொன்றதால் பாவம் தின்றதால் போச்சு"


    # "யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
    இடையில் வந்த உரிமை என்றாய்...
    அதற்காக நான் வழக்காடுவேன்
    ...யாரும் உன்னை திருடி செல்ல
    பார்த்திருக்கும் தோழன் அல்ல
    உனக்காக நான் காவல் நிற்பேன்....
    எனது மனமும் எனது னினைவும்
    உனது வாசமே...

    நண்பனே எனது உயிர் நண்பனே

    நீண்ட நாள் உறவிது
    இன்று போல் என்றுமே தொடர்வது..

    எதிரியாக இருந்தாலும் நண்பனாக கருதுவது சிறந்த மனித பண்பு - ஒரு கடும் விஷம் உடைய கருந்தேள் தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைக்கண்ட குருநாதர், அதை தண்ணீரிலிருந்து காப்பாற்றியபோது "தேள் " அவரை கொட்டியது, இதைப்பார்த்த சிஷியன் குருவே தேள் கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்றினீர்கள் என்றான், அதற்க்கு குரு சொன்னார் "தேளின் இயல்பு கொட்டுவது ..மனிதனின் இயல்பு ஆபத்தில் உதவுவது என்றார் மேலும் அவர் "எதிரியே ஆனாலும் நண்பனாய் பாவிப்பது சிறந்த மனிதனின் பண்பு என்றார்" http://youtu.be/TqB4aLfvF_4
    பசிப்பிணியே மிக மோசமான பிணி!
    பசி நீக்குதலே உயர்ந்த மானிட அறம்!
    பசி நீக்குதலே உயர்ந்த புண்ணியம்!
    தானங்களில் உயர்ந்தது அன்னதானம்! http://youtu.be/DxmJXefORrY
    எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
    எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் வீரமணி அவர்களின் ஐயப்ப பக்திப்பாடலுக்கு தனி சக்தி கிடைக்குது.....
    ஆறுதரம் பூமியை வலம் வருதலும், ஆயிரம் முறை காசியில் குளித்தலும், நூறு தடவை சேது ஸ்நானம் செய்தலும், என இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயை பக்தியுடன் ஒருதரம் வணங்கினாலே கிடைக்கும்." http://youtu.be/b1PuDk_WyS0

    "ஆலய மணி தலை கவிழ்ந்து உள்ளது. ஆனால் அதன் நாதம் தொலைதூரம் வரை கேட்கிறது. அதுபோல அடக்கமாக செய்யும் தொண்டு நெடுங்காலம் பயன் தரும்." http://youtu.be/A2Zr9gVpYX4

    "பள்ளிக்கூடம் ஒரு கோயிலைப் போல இருக்க வேண்டும்,
    கோயில் ஒரு பள்ளிக் கூடமாகத் திகழ வேண்டும்."http://youtu.be/VLMjv8LzMHY"

    "நோக்கம் ஓராண்டாயிருந்தால் பூக்களை வளர்ப்போம்,
    நோக்கம் பத்தாண்டாயிருந்தால் மரங்களை வளர்ப்போம்,
    நோக்கம் முடிவில்லாமலிருந்தால் மனித குலத்தை வளர்ப்போம்."
    ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?
    #தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.
    #தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வ‌ரிசைய...
    ாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.
    #இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது.
    #துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.
    #மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்- ஸ்ரீ கிருஷ்ணா பகவானின் அம்பு நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம் அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே...
    இப்படிக்கு நன்றியுடன் சுட்ட பழம்..... மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்களுடன்....கோகி. http://youtu.be/ewcpytHT7uk
    அந்த சின்னத்திரை தொலைக்காட்சியைப் போலவே "உலக முகநூளின் வரலாற்றில் முதன் முதலாக....திரைக்கு வந்து பல வருடங்களான, மிகப் பழைய "மூக்குத்திப்" பாடல்
    "சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்" பட்டுக் KCS கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதிய இந்த பாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு "புதுமையான நவீன வகையில் இசை அமைக்கவேண்டும், என்று அந்தக்காலங்களிலேயே மும்பாயிலிருந்து வாத்திய இசைக் கலைஞ்சர்கள் வரவழைக்கப்பட்டார்கள். திரைப்படம் "பாதை தெரியுது பார்" .......மேலும் அதே படத்தில் வரும் "தென்னங்கீற்று சோலையிலே... தென்றலும் வீசிடும் மாலையிலே... சிட்டு குருவி பாடுது தன் பெட்டை துணையை தேடுது? ரம்மியமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத திரு எஸ் ஜயகாந்தன் அவர்களின் பாடல்" http://youtu.be/Dw77uCP_PdI
    "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி, தமிழ் திரைப்பட வரலாற்றில் கழுதையை மையமாக வைத்து " அக்ரஹாரத்தில் கழுதை மற்றும் பஞ்ச கல்யாணி என இரண்டு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த யோகம் கிடைக்காமல் போனது, கழுதைகளுள் பல வகைகள் உண்டு. அதில் அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.
    இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார், "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. " எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை? அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார், உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும். http://youtu.be/Mwk-NXEq6vc
    என்ன சொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர http://youtu.be/p_7SyGC3xZA
    அய்யா சாமி ஆவோஜி சாமி அய்யா ரய்யா வாய்யா யூ கம்மய்யா அய்யா சாமி ஆவோஜி சாமி நரிக்கொம்பிருக்கு வாங்கலையோ

    விசில் "சீட்டி" அடித்து பாடும் பாடல்கள்
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் ...
    http://youtu.be/LoHIb8IvdDc
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்... http://youtu.be/ikgK4D17_pQ
    நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் http://youtu.be/0Ded74fqkOA
    நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ பலர் நிறைந்த சபையினிலே பண்புகூட மாறுமோ http://youtu.be/RHQjbzcUE44
    எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடிய பாடல் ....வந்தாலே.....பாசப்பறவைகள் பாடும் கவிதைகள், உறவில் வந்த சுகம்
    இன்றைக்கு என் இந்த ஆனந்தமோ இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின் சுயவரமோ கண் திறந்தால் சுகம் வருமோ http://youtu.be/YqOe921vKuI
    உறவினில் பிஃப்டி பிப்டி உதட்டினில் பிப்ஃடி பிஃப்டி வருவதில் சுகம் 50 50 தருவது இந்தத்தங்கக் கட்டி.
    அதே படத்தில் இந்த பாடலும் என்குதேடியும் கிடைக்கவில்லை .... உறவினில் 50-50, உதட்டினில் 50 - 50, உறவினில்.. பாதி பாதி , உதட்டினில்.. பாதி பாதி .....வருவதில் சுகம் 50 50, தருவது இந்தத்தங்கக் கட்டி....முத்த மழை இங்கு பொங்கிவர பொங்கிவர வர... வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர ..படம் கலாட்டா கல்யாணம் "பாடியவர் -எல் ஆர் ஈஸ்வரி. Here is the song.http://www.raaga.com/play/?id=232006
    தேர்ந்தெடுத்த அருமையான பாடல் "நீ பலபன்னு போட்டிருப்பது ..யாரு குடுத்த சொக்கா '
    தேசுலவுதே தேன் மலராலே
    தென்றலே காதல் கவி பாடவா
    விளையாடவா....
    மனம் உஞ்சலாடுமோ உல்லாசமாய்.... http://youtu.be/zTXvHuwu6g4
    "தேசுலவுதே தேன் மலராலே... தென்றலே, காதல் கவி பாடவா விளையாடவா..." ராஜா மற்றும் PBS பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்! இவங்க ரெண்டு பேரையும் விட கண்டசாலா பாடல்கலேன்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அவரோட"தேசுலவுதே" வும் அமைதியில்ல என் மனமே" என்னோட music player ல most played songs list ல இருக்கும்.. http://youtu.be/ZVmv4jTUqG0

    எதோ அறியேன் எழில் கா வினிலே
    இன்புறும் வேனு கானம்தான்......
    ஆஹா இன்று, காண்பது யாவும்
    ஆசையினுடயது தானோ....(அமைதியில்லா என் மனமே....என் மனமே)
    அனுதினம் கண்முன் கனவே போலே,
    மனதே பிரேமா மந்திரத்தாலே
    அமைதியில்லா என் மனமே....என் மனமே http://youtu.be/Q5doxu9Dgj4

    தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
    சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுதுநீல மேகம் ஏழு வண்ணம்
    ஆடையோடுலாவுது
    மாலை சூடி அழைக்குது
    தொடு வானில் இரண்டும் கலக்குது
    தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
    சிட்டுக் குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது http://youtu.be/OGkebWnTk-o

    கோகுலத்து பசுக்களெல்லாம்
    கோபாலன் குழலை கேட்டு
    நாலுபடி பால் கறக்குது ராமாரே
    அந்த மோகனின் பெயரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே http://youtu.be/rzd42y0l0CQ
    குளத்தில் முங்கி குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி நிக்குது ராமாரே
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பமெல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரே
    அட படிப்பில்லாத ஆண்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்..
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்னாரே
    "இராமன் எத்தனை இராமனடி -அவன். நல்லவர் வணங்கும் தேவனடி ". http://youtu.be/DR2GFE0B5M0
    வணக்கம் நீங்கள் எங்கிருந்து அழைகிறீர்கள் ? நீங்களும் பாடுவீங்களா?

    பாடல் என்ன ராகம்
    வருவது
    ஷண்முகப்ப்ரியா ராகத்தில் அமைந்த "தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு ஏனடி தோழி அறிவாயோ..." http://youtu.be/jMd4AXW4lAk
    ஆபோகி ராகத்தில் அமைந்த இந்த அருமையான பாடல் "தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே ..மரகதத் தோரணம் அசைந்தாட, நல மானிக்க மாலைகள் கவிபாட....http://youtu.be/2wWdF_kZhjA
    இதே போல் இனிமையான இன்னொரு பாடல் பார் மகளே பார் படத்தில் மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல்,மேலும் சுமைத் தாங்கி படத்தில் "எந்தன் பார்வையின் கேள்விக்குப் பதிலென்ன சொல்லடி ராதா போன்ற பாடல்கள் அற்ப்புதம்.
    தமிழ தமிழா தமிழா இனி உன்
    பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்...நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்....நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்...பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்... படம் மணப்பந்தல், பாடியவர்கள் BPஸ்ரீநிவாஸ் & Pசுசிலா .. http://youtu.be/1w7wjlK7ZWI

    #மனிதா.. மனிதா... இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...! http://youtu.be/UuzG8Axhs7M
    # தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா, வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா.... உரிமை இழந்தோம் ஊடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ... http://youtu.be/0boI_dAMhZk
    # நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ... http://youtu.be/lXo7W5_DMGM
    #வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு, இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே, மழை என்றும் நம் காட்டிலே http://youtu.be/aXE5kVqBZn8
    # ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ் ஒரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே http://youtu.be/SNjt5RaaThw
    # மடை திறந்து, தாவும் நதியலை நான், மனம் திறந்து கூவும் குயில் இசை நான், இசை கலைஞன், என்னாசைகள் ஆயிரம், நினைத்தது பலித்தது...( நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம், இசைக்கென்று ...இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்,... எனக்கே தான்) http://youtu.be/-WRzBU1TO6w
    kanavin கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம்
    #"கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியம் கவித்துவமான வரிகள் கொண்ட ஒரு காதல் ஜோடிப்பாடல். பாடல் வரிகளுக்கேற்ப இசையும் நடைமாருகிறது.
    # வைரமுத்துவின் கனவே கலையாதே
    kai ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
    கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்
    #ஆரோடும் மண்ணில் இங்கு நீரோடும்,
    #ஆற்றங்கரை மரமே அதிலிருக்கும் கிளியே
    #ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி
    # ஆறு அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
    #
    #போய்வா நதி அலையே நான் பூச்சூடும் நாள் பார்த்து வா
    # நதியா நதியா நைல் நதியா
    # நதிஎங்கே போகிறது கடலைத்தேடி
    # நதியே நதியே காதல் நதியே, நீயும் பெண்தானே..
    # நதியே...... அடி நயில் நதியே http://youtu.be/0jQHto3G4Dw
    #நதியிலே அலை ஒன்று மறுபடி http://youtu.be/w4ApUmN2TGs

    # நதியில் ஆடும் பூ வனம் http://youtu.be/W02st3WU-sE
    #வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பர்தா
    #காவேரி ஓரம் கதை சொல்லும் நேரம்
    #காவிரிக் கரையிருக்கு கரைமேலே பூ விருக்கு
    # காவிரியே கவிக்குயிலே
    #கங்கை கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
    #கங்கை நதியே கங்கை நதியே http://youtu.be/3ku9NZsg6JQ
    #சிந்து நதிப்பூவே
    #சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
    #சிந்து நதியின் மிசை
    #
    #யமுனை

    #சரஸ்வதி
    #பாலாற்றங் கரையினிலே தேன்னிலவின் இரவினிலே மோகினிப்போல் வந்தால்

    #வைகைக் கரை காற்றே நில்லு
    #வைகறையில் வைகைக் கரையில் நீ வந்தால் வருவேன் உன் அருகில்
    #வண்ண நிலவே வைகை நதியே http://youtu.be/Z22yWxPCAKQ
    #சிறுவாணி
    #சரவனப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
    #நந்தி ஆறு
    #கோதாவரி
    #கிருஷ்ணா

    ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும், மொத்தத்தில் விவசாய நாடு நீர், நில
    வளங்களில் திவாலகிக்கொண்டிருக்கிறது என எச்சரிக்கும் (சில வருடங்களுக்கு முன்பே பாடிய பழைய) பாடல் . இதனை இன்றைய பொருளாதார நிபுணர்கள் உணர்த்து எச்ச்சரிக்கிறார்க்கள்.
    எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1985-87
    # 1985-87என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr Sir Sarvepalli Radhakrishnan....சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே வேஷ்டி உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது. 1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...(அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால் கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது) போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0

    # என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- http://youtu.be/ac4aT3sGO2M
    "குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி" .....நான் சிறுவனாக இருந்த பொது அதிகம் பார்த்த திரைப்படம்கள் அனைத்தும் பக்திப்படங்கலாகவே இருந்தது, காரணம் என்னுடைய பாட்டியும் அதே ஊரில் வசித்த அவரின் தங்கை எனக்கு "சின்ன பாட்டி" இருவரும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் அவர்களின் கைபிடித்து அழைத்துவர துணைக்கு நானும் அவர்களுடன் திரைப்படம் பார்க்க செல்லவேண்டும் என்பதால் நான் பார்த்த படங்கள் திருவருட்செல்வர் , திருவிளையாடல், ஒளவையார், கோமாதா என் குலமாதா, காரைக்கால் அம்மையார்... இப்படி பல பக்திப்படங்கலாகவே இருக்கும், அதில் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி வந்த பொது என் பாட்டி தனது புடவை தலைப்புபகுதியால் என் முகத்தை மூடி "பார்க்காதே பயந்துவிடுவாய்" என்று சொல்லியும் விடாமல் பிடிவாதமாக பார்த்த அந்த காட்சி என்றும் என் நினைவில் இருப்பவை.

    # என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;-
    "ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் "..... அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு தொழிற்ச்சாலை அது, அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார், கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிறுவனத்தின் நேரடி ஆய்வு, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம். மறுநாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி நான்கு வாட்ட சாட்டமான ஆட்களை கையில் தடியுடன், தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.

    குறிப்பிட்ட நேரப்படி இரண்டு கடன் நிறுவன அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட)இருப்பு (STOCK) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார் " என்றார்கள்.... அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் "கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும் வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்" பிறகு தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக தாயாராக இருந்த "பஞ்சு-Cotton" -STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்றுகூறி சென்றனர். அன்று அந்த தொழிற்ச்சாலை தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்து தகராறில் ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..." http://youtu.be/drBTwOv1QWk

    "மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
    வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
    சிறப்பான வேலை என்பதைவிட
    செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
    அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
    புரிந்ததும்... தெரிந்தது
    மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb


    #
    HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.


    #என்னுடைய அப்பாவழி பாட்டி அவர்களின் வீட்டு திண்ணையில் இதுபோலவே அவர்களின் தோட்டத்தில் விளைந்த காய்களை பறித்து வைத்துவிடுவார்களாம், வேண்டுபவர்கள் அதை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதேபோல நான் வசிப்பது (1990முதல்)புது தில்லியில் என்பதால் எங்களது வாடிக்கயரான வீடு வீடாக செல்லும் காய் வண்டிக்காரரிடம் ஒவொரு மாதமும் வரும் அம்மாவசை அன்றும் 20 கிலோ வாழக்கைக்கு பணம் தந்து அதை அன்று முழுவதும் இலவசமாக பலருக்கு வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டதுண்டு .. தற்போது ப்ராஜெக்ட் வேலைநிமித்தம் பல இடங்களுக்கு செல்வதால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.... ஒரு மாமி என்னிடம் "ஏண்டாப்ப இப்போதெல்லாம் இலவச வாழக்காய் தருவதில்லை" என்று கோபித்துக்கொண்டார்..... பாட்டிக்கு ஆங்கில காய் வகைகள் பிடிக்காது (கோஸ், பீன்ஸ், கேரட், முள்ளங்கி நூகோல் போன்றவை) பின்னாளில்1912- தாதாவுக்கு ஊட்டி தாவரவியல் தோட்டத்தில் கார்டன் (botanical garden superintendent) இருந்தபோது அவருக்கு வரும் ஆங்கில காய்கறிகளை அப்படியே மாட்டுக்கு வைத்துவிடுவார்களாம். 1989கலீல் பாட்டி எங்களது தலைநகர் வாழ்க்கையை பார்த்து, காய்கறிகள் அரைகிலோ, ஒருகிலோ என்று வாங்கி குளிர் போட்டியில் வைத்து வாழ்வதைப்பார்த்த பாட்டி, எங்கல் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்தொமடா என்று கண்ணீர்விட்டது... என் நினைவில் நின்றவை....

    #பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்"
    வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    # "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."

    இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4

    FREE JOBS EARN FROM HOME