FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, February 22, 2018

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம், இருட்டாக இருந்தது கடும் குளிர் வேறு...கரணம் தப்பினாலும் மரணம்....

விடியற்காலை உத்திராகாண்ட் மலைப்பகுதி... சாலையின் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம்,  இருட்டாக இருந்தது  கடும் குளிர் வேறு... கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைவழி சரியாக தெரியவில்லை. வாகனத்தின் சிறு தவறும் ...கரணம்  தப்பினாலும் மரணம்....

உத்திராகாண்ட் மாநிலத்தின் மிக முக்கியமான உற்பத்தியில் மின்சார உற்பத்தி உள்ளது அதற்க்கு முக்கிய காரணமாக விளங்கும் மலைப்பகுதி. அதன் நடுவில் ஓடும் அலக் நந்தா ஆற்றில் அணைகட்டி மின்சாரம் தயாரிக்கும் மிக எளிய செயலாக இருந்தாலும் அது ஒரு சவாலான பனி. எத்தனையோ தகவல் தொழில்நுட்ப வசதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இருந்தாலும் பலநேரம் திடீரென்று ஏற்படும் காட்டாற்று வெள்ளம் அந்த அணைகளை உடைத்துக்கொண்டு ஓடும் அபாயமும் உண்டு. ஒவ்வொரு வருடமும் பல கிராமங்களை அடியோடு வெள்ளத்தில் அடித்து எடுத்துக்கொண்டு ஓடி கங்கை நதியோடு கலந்துவிடும். 

மத்திய அரசு உத்திராக்காண்ட் மலைப்பகுதியில் கிட்டத்தட்ட 35 அணைகள் கட்ட அனுமதியளித்துள்ளது அதில் இதுவரை 11 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அந்த 11 அணைகளில் கோஹ்ரா அணை மட்டும் மிக மிக அபாயகரமான அணைக்கட்டு ஆகும். அந்த அணைக்கட்டு மதகுகளை முழுமையாக திறந்துவிட 15 நிமிடங்கள் ஆகும் ஆனால் காட்டாற்று வெள்ளம் வரும்போது சில நொடிகளில் அந்த அணையை உடைத்தெறிந்துவிட்டு சென்றுவிடும். 

இப்போது நான் என் கதைக்கு வருகிறேன்.... நான் தற்போது உத்திராக்கண்ட் மாநில திட்டப்பணியில் இருக்கிறேன். அன்று ஞாயிறு விடுமுறை நாள் விடியற்  காலை 4.10 மணி இருக்கும். நல்ல தூக்கத்தில் இருந்த   நான் எனது தொலைபேசி  சிணுங்கிய  சப்தம்  கேட்டு எழுந்திருக்க வேண்டியதானது. மறுமுனையில்  பதட்டமாக அந்த ராச்சஸ மின்மோட்டார் இயந்திரத்தின் 2ம் பாக இயந்திரம்  சரிவர இயங்கவில்லை  உடனே வாருங்கள் என்ற அழைப்பை கேட்டு மனம்  கலக்கமானது. 

நிறுவனத்தின் கெஸ்ட்  ஹவுஸிலிருந்து (Guest House) தங்கும் விடுதியிலிருந்து தொழிற்சாலை அமைந்திருக்கும் இடம் ஒரு 2 கிலோமீட்டர் தூரம்தான் ஆனால் அங்கு செல்ல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை மிகவும் அபாயகரமான பாதை. நான் எனது பாக்டரி  நோக்கி கிளம்பி... உத்திராகாண்ட் மலைப்பகுதி இருட்டாக இருந்தது...கடும் குளிர் வேறு, உதவி என்று கூப்பிட்டாலும் யாருக்கும் கேட்க்காத சாலையில் ஒரு பக்கம் கிடு கிடு பள்ளம் வேறு அதுவோ மலைப்பாதை... கரணம்  தப்பினாலும் மரணம் நிச்சயம். அன்று அன்று ஜனவரி மாத குளிர் காலம்வேறு எங்கும் பனிப்பொழிவால் சாலை சரிவர தெரியவில்லை தனியாக காரை ஒட்டிச் செல்வதால் காரின் விளக்கு 2அடி தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது, அந்தளவில் பனிமூட்டம் இருந்தது. 

அப்படிப்பட்ட சூழலில் காரை வேகமாக செலுத்தமுடியாமல் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்வதைப்போல சென்றதால் என்ன நடக்குமோ என்கிற பயம்.  உடனே பாபாவை மனதில் நினைத்து all is well என்கிற எனது பிரார்த்தனையுடன் மெல்ல மெல்ல தொழிற்சாலையை  அடைந்தபோது அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த அந்த ராட்சத இயந்திரத்தின் அருகே பணியிலிருந்தார்கள் விவரத்தை  கேட்டு இயந்திரத்தை சோதித்தபோது பெரியதாக கவலைப்படுமாறு எந்த பழுதும்  இல்லை என்பது தெரிந்தபோது (பாபாவின் அருள்) மனம் நிம்மதியடைந்தது. 

அந்த இயந்திரம் பழுதாகியிருந்தால் நிறுவனத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு சில லட்சம் வீதம் நஷ்ட்டம் ஏற்படும். அந்த ராட்சத இயந்திரத்தின் ஒரு இயந்திரம் பழுதானால் மாற்று  இயந்திரம் தானாக  செயல்படும். அப்படியிருந்தும்  சிலநேரம்  இயந்திர  பொறியாளர், அவர்களோடு இயந்திரத்தை பராமரிக்கும் கான்ட்ராக்ட்டர்கள் இருந்தும் ஏதும் செய்ய முடியாமல்  போகும்  வாய்ப்பு  உண்டு. 

ஒரு சிறிய  பிரார்த்தனை   நினைப்பில்  நமக்கு யானை பலத்தை தரக்கூடியது  பகவான் பாபாவின் மீது கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னை எப்போதும் வழிநடத்தி செல்கிறது.  

நிம்மதி பெருமூச்சு  விட்டு அந்த விடியற்காலை ஒரு கப்  "டி" குடிக்க நினைவு வந்தபோது....  சுட  சுட குளிருக்கு  இதமாக சுக்கு காபியுடன் நம்ம ஊரை சேர்ந்த எனது அலுவலக பணியாள் என் முன்னே வந்தார்.  

ஜெய் சாயிராம். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Tuesday, February 13, 2018

சிவபூஜையில் கரடி

சிவபூஜையில் கரடி:-

தூக்கம் களைந்து விழிப்பு வந்ததும் காலைக்கடன்களை முடித்து சற்று வெளியில் வந்து பார்த்தபோது இன்னமும் கதிரவன் எழுந்திருக்கவில்லை. நேற்று பெய்த மழையில் இன்றய காலை நேரம் சில்லென்ற ஈரமான தரை, மிகவும் சில்லென்ற காற்று உடலுக்கு சிலிர்ப்பூட்டியது. வெகுதூரத்தில் சிவன்கோவிலின் பாடல்கள் காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது.  இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வந்தத்த்து. 

வேகா வேகமாக குளித்து உடைகளை உடுத்தி கைத்தொலைப்பேசியில் வாட்சப் விவரங்களில் சற்று காக்காய் குளியலைப்போல சில பதிவுகளை படித்தும் எழுதியும் ஒரு அரை மணிநேரம் ஆனதும் இன்று இரவு சிவராத்திரி விஷேசம் என்பது ஞாபகம் வர அருகிலிருந்த சிவன் கோவிலுக்கு செல்கின்ற வழியில் இருந்த வில்வமரத்திலிருந்து வில்வதளங்களை பறித்துக்கொண்டு மலைப்பாதை வழியிலிருந்த நாகவல்லி நீலநிற புஷ்பங்களை பறித்து எடுத்துக்கொண்டு கோவிலையடைந்தபோது என்னோடு தொழிற்சாலையில் பணியாற்றும் மற்றொரு நபரும் வந்திருந்தார். 

இருவரும்  கோவிலின் உள்ளே சென்றபோது கோவில் பூசாரி எங்களைப்பார்த்ததும் வேகமாக என் அருகே வந்து வாருங்கள் இந்த சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு வாருங்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்று கூறி கோவிலின் உள்ளே அழைத்துச்சென்றார். அந்தக் கோவில் எங்களது தொழிலக நிறுவனத்துக்கு சொந்தமான கோவில். அதோடு கோவில் பூசாரிக்கு மாத சம்பளமும்  நிறுவனமே வழங்குகிறது.

கிட்டத்தட்ட அரைமணிநேரம் அவர் எங்களுக்கு இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் எழுந்து நில்லுங்கள் என்று  சிவ லிங்கத்திற்கான அபிஷேகம் அர்ச்சனை பூஜை என ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மந்திரங்களோடு ஒரு குட்டி யோகாசன பயிற்சி தருவதைப்போல பல பூஜை அர்ச்சனை செய்யச்சொன்னார், இடையில் அவரது வாயில் எதோ இருந்ததை (பாண் மசாலா என நினைக்கிறேன்) சற்று தூரத்திலிருந்த சன்னல் வழியாக தூ தூ என துப்பிவிட்டு வந்தார். என்னுடன் வந்திருந்த நண்பர் மெல்ல என்னிடம் இது என்ன பூஜையில் தூ தூ என்று கிசுகிசுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் மந்திரங்களைக்கூறி அதற்க்கு எங்களை வில்வதளத்தால் பூஜை செய்யச்சொன்னார். இடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வர மறுமுனையில் சற்று கோபமாக பேசுகிறார்கள் என நினைத்தேன் காரணம் பூசாரியும் சற்று காரசாரமாக இடை இடையே சில  திட்டு வார்த்தைகளையும் பிரயோகித்தார். என்னோடு இருந்தவர் மறுபடியும் கிசுகிசுத்தார் இதென்ன பூஜையின் இடையில் கரடி அதைவேறு கெட்டவார்த்தையில் திட்டுவேறு என்று முனகினார். சற்று நேரத்தில் பால்காரர் ஒருவர் பால் கொண்டுவர இன்று இதை கொண்டுவர இத்தனை நேரமா என்கிறார். இறுதியாக ஆரத்தி பாடலோடு சிவலிங்க பூசை முடிந்தது. 

பூசாரிக்கு தட்சிணையை தந்துவிட்டு கோவிலின் வெளியில் இருந்த திண்ணைபோன்ற உட்காரும் இடத்தில் ஒரு செய்தித்தாளை விரித்து இருவரும் உட்க்கார்ந்தோம். என்னுடன் இருந்தவர் இது சரியில்லை இப்படியா தூ என்று எச்சில் துப்புவது கேட்ட வார்த்தையில் திட்டுக்கள் வேறு இப்படியா பூசை செய்வது என்று மீண்டும் பேச்சை தொடங்கினார். 

நானும் சற்று யோசனையில் இருந்தபோது எனது உள்மனம் அதான் "மைண்ட் வாய்ஸ்" என்னோடு பேசியது இன்று இந்தநேரத்தில் கோவிலில் இருக்கும் நீங்கள் இருவரும் மற்றும் அந்த கோவில் பூசாரி இந்த மூவரில் யார் சிறந்த பக்தர் என்று உனக்கு தெரியுமா? என்று கேட்டது. 

அதிலென்ன சந்தேகம் நான் பக்தியோடுதான் கோவிலுக்கு வந்தேன் என்றேன். அதற்க்கு என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது யார் முதல்நிலை பக்தர் என்று கேட்டது. அதற்க்கு நானும் பூசாரி தூ தூ என்று துப்பினார் என்று கூறும் என்னோடு வந்திருக்கும் எனது அலுவலக நண்பரின் மனநிலையில் அவர் பக்தியோடு இல்லை என்பதாக தெரிகிறது. அவர் கிசு கிசு என்று சொன்ன சில செயல்களோடு பூசாரியும் நடந்து கொண்ட விதம் பார்க்கும்போது பூசாரியும் பக்தி சிரத்தையோடு இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆவகே இதை அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டு பூசை செய்த நானே முதல் நிலை பக்தனாக இருப்பேன் என்றேன்.

இதைக்கேட்ட எனது  "மைண்ட் வாய்ஸ்" சிரித்தது. பிறகு சொன்னது இந்த இடத்தில் இருக்கும் நீங்கள் மூவரில், பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்று கூறியது. இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்ததால் அது எப்படி என்று கேட்டேன்.  அதற்க்கு என்  "மைண்ட் வாய்ஸ்" சொன்னது நீ வேண்டுமானால் பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது என அவரது நடவடிக்கைகளைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுப்பாரேன் உனக்கே புரியும் என்றது. 

இது சரி என்று தோன்றியதால் அவரிடம் சென்று இது பற்றி( இது=பூசாரி பூசையின்போது துப்பியது மற்றும் திட்டியது)கேட்டதும். பூசாரி சற்று திடுக்கிட்டு போனார் அதோடு நிற்காமல் "நானா அப்படியெல்லாம் செய்தேன் இருக்காதே" என்று சொன்னதைக்கேட்ட என்னுடன் இருந்த கிசு கிசு பார்ட்டிக்கு கோபம் வந்து காச்சு மூச்சென்று கத்திவிட்டார். பிறகு அவரை சமாதானம் செய்யவேண்டியாதாகப் போனது. இதையெல்லாம் பார்த்த கோவில் பூசாரி நான் அப்படி செய்தது எனக்கே தெரியவில்லை அப்படி உங்களது மனம் புண்படும்படி நடந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்கிறார். 

அந்தநேரம் என் "மைண்ட் வாய்ஸ்" சொன்னது... உங்கள் மூவரில் பூசாரி மட்டுமே முதல் நிலை பக்தர் என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா? என்று சொன்னதும் சற்று நிதானமாக யோசிக்கத்தொடங்கினேன்.  

அசரீரி ஒலித்தது என்று பழைய கதைகளில் சொல்வதை கேட்டிருப்போம் அது வேறு ஒன்றுமில்லை அது நமது மனதின் ஓசைதான் அதைத்தான் தற்போது நாம் "மைண்ட் வாய்ஸ்" என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வம் வாழ்கிறான். அந்த தெய்வம் எங்கே வாழ்கிறார்  என்றால் மனிதனின் மனங்களில் வாழ்கிறார். அந்த மனம் சொல்லும் செயலைத்தான் ஒவ்வொரு மனிதனும் செய்கிறான். செய்துகொண்டிருக்கிறேன் அப்படி நமது மனதை ஆட்கொண்டு இயக்குபவர்தான் தெய்வம். அப்படியென்றால் நம் மனதின் பேச்சுக்கள் தான் தெய்வ வாக்கு அல்லது தெய்வத்தின் அசரீரி வாக்கு மற்றும் இன்றய சூழலுக்கேற்ப நமது  "மைண்ட் வாய்ஸ்".     

ஆகவே கோவில் பூசாரியின் மனம் முழுவதும் ஆண்டவனின் சேவையில் இருந்தது ஆனால் அவரது செய்கைகள் மட்டும் அவரது எண்ணங்களுக்கு எட்டாத அனிச்சை செயலாக மட்டுமே இருந்திருக்கிறது.   என்பது புரிந்தபோது மீண்டும் கோவிலுக்குள்ளே சென்று தவறுகளுக்கு மன்னிப்பைக்கேட்டு மானசீகமாக சிவனிடம் வேண்டிக்கொண்டு எனது அன்றய பணிகளை செய்ய அலுவலகம் புறப்பட்டேன்.  

பலர் அவர்கள் பேசும்போது சில கெட்டவார்த்தைகளை பேச்சின் நடுவில் நுழைத்து பேசுவார்கள். ஒரு முறை அப்படிப்பட்டவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று... என்று அவர் பேசி முடிக்கும்வரை எண்ணி மொத்தம் 20 முறை அந்த கெட்ட வார்த்தையை உனது பேச்சின் இடையில் நீ உபயோகித்தாய் என்று சொன்னபோது.  நானா அப்படி அந்த கேட்ட வார்த்தையை சொன்னேன் இருக்காது என்கிறார். பிறகு ஒருமுறை அவர் பேச்சை அவருக்கே பதிவுசெய்து போட்டுக்காட்டினேன். ஆகவே அவர் என்ன பேசுகிறார் எப்படி அந்த வார்த்தையை உபயோகித்து பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அந்தஅளவில் அவரது செய்கை அனிச்சை செயலாக இருந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தபோது  மிகவும் வருந்தினார். 

இப்போது சொல்லுங்கள் கோவிலுக்கு போகிறவர்கள் எல்லோரும் பக்திமான்களா? கோவிலுக்கு சென்று வந்த எத்தனைபேருக்கு மனநிம்மதி கிடைத்தது. ஆகவே முதலில் கோவிலுக்கு எப்படிப்பட்ட மனநிலையில் போகவேண்டும் என்று தெரிந்துகொள்வது எத்தனை முக்கியம் என்பதை மேற்கண்ட ஒரு சிறு உதாரணத்தில் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஆகவே கோவிலுக்கு போகவே சாமி கும்பிடவே..... மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சப்புள்ளையாட்டம் அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லிகைப்பூவாக.

மீண்டும் அடுத்தப்பதிவில் சிந்திப்போம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி 

Thursday, January 18, 2018

ஆதரவும் அங்கீகாரமும்:- வாருங்கள் பாராட்ட தொடங்குவோமா????

ஆதரவும் அங்கீகாரமும்:-  வாருங்கள் பாராட்ட தொடங்குவோமா????

ஆதரவளிப்பது, அங்கீகரிப்பது என்பது ஒருவருக்கு தன்னம்பிக்கையைத்தரும் முக்கியமான செயலாக போற்றப்படுகிறது. எந்த ஒரு முயற்சி அல்லது செயலுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மனதிற்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது ஆகவே அதற்குப்பின்னால் தொடர்ந்து அந்த செயலை செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அதோடு மனதிற்கு ஏராளமான சக்தியும் கிடைத்துவிட்டாற்போல ஒரு புது உத்வேகத்துடன் அந்த செயலை மீண்டும் மீண்டும் செய்ய மனம் விரும்புகிறது. 

வாருங்கள்.... நமது வாழ்க்கையில் "அங்கீகாரம்" என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை இரண்டு உதாரணங்களில் நாம் தெரிந்துகொள்ளலாம்:-

இளம் தம்பதியர்கள், அவர்களின் குழந்தையை பள்ளியில் ஆரம்ப கல்வியில் சேர்த்து 6 மாதம் தான் ஆகிறது. அவர்களின் குழந்தைக்கு 1,2,3,4 என எண்களை சரியாக சொல்லத்தெரியாமல் பாதியிலேயே நிறுத்திவிட, குழந்தையின் பெற்றோர்களுக்கு கோபம் வர, அன்று குழந்தையுடன் பள்ளி ஆசிரியரை சந்தித்து அதுபற்றி விவரம் கேட்டார்கள்.

அதற்க்கு அவரின் குழந்தைக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியரோ. உங்களது குழந்தை மிகவும் கெட்டிக்காரர்  நன்றாக படிப்பவர், தொடர்ந்து 1முதல் 100 வரையிலான எண்களை வரிசையாக பிழையின்றி கூறக்கூடியவர் என்று கூறி ஆசிரியர் அவரின் குழந்தையிடம் எங்கே ஒன்று இரண்டு என 100 வரை விடாமல் சொல்லு என்று கேட்க.  

அதற்க்கு குழந்தையும் 1-ஒன்று  என்று ஆரம்பித்து ஒவ்வொரு எண்களை சொல்லும்போதும் ஆசிரியர் அதற்க்கு ம், ம் , ம்,.சரியாகச் சொல்கிறாய் ... என்று தொடர்ந்து சொல்லி அந்தக் குழந்தையை ஊக்கப்படுத்தியபோது, குழந்தையும் 100 எண்கள் வரை சரியாக பிழையின்றி கூறி முடித்தது.  

அப்போது அந்த ஆசிரியர் குழந்தையின் பெற்றோர்களிடம் ... "குழந்தைகளிடம் நாம் எதை எதிர்ப்பார்த்தாலும் அவர்களை உற்சாகப்படுத்துவிதமாக அதற்குண்டான அங்கீகாரத்தை அவர்களுக்குத் தந்தால்தான், அவர்களிடம் நாம் எதிர்பார்க்கும் எந்த பதிலும் நமக்கு கிடைக்கும். அதை விடுத்து கேள்வியை கேட்டுவிட்டு, அவர்களை கவனிக்காமல் நீங்கள் உங்களது வேளைகளில் கவனமாக இருந்தால்... குழந்தையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது".  என்று கூறினார். 

இப்போது மற்றுமொரு உதாரணமாக.... 

அவர் நன்கு படித்த அறிவில் சிறந்த ஒரு கல்லூரி பேராசிரியர், அன்றய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கூட்டத்தில் உரையாற்றிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவர்,  நான் எப்படி பேசினேன்? நான் சிறப்பாக உரையாற்றினேனா? என்று  தம்முடன் பணியாற்றும் வேறு ஒரு பேராசிரியரிடம் கேட்க. 

அதற்க்கு அவருடன் பணியாற்றும் பேராசிரியரும்,  நீங்கள் சிறப்பாக பேசினீர்கள்.  இன்று உங்களது உரையில் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பல அபூர்வமான விவரங்களை குறிப்பிட்டீர்கள். மேலும் அதுபோன்ற ஒரு பேச்சை கேட்ப்போம் என்று நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை, நீங்கள் கூறிய விவரங்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது என்று கூற.   

நன்கு படித்த அறிவில் சிறந்த ஒரு கல்லூரி பேராசிரியருக்கே தனது செயலுக்கு ஒரு அங்கீகாரமும் பாராட்டும் தேவை என்று எதிர்பார்க்கின்றபோது இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஒரு அங்கீகாரத்தையும், ஆதரவையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கின்றன என்பதில் சிறு துளியும் சந்தேகமில்லை.

எனவே நாம் நமது வாழ்க்கைக்கு அவசியம் தேவையான அங்கீகாரத்தையும் ஆதரவையும், பாராட்டையும் பிறருக்கு தரும்போதுதான் அவைகள் நமக்கும் கிடைக்கும். அப்படிப்பட்ட அங்கீகாரத்தால் கிடைக்கும் அனுமதியும் ஆதரவும் பெருகும்போது, ஒரு புது உத்வேகத்துடன் எந்த செயலையும் நாம் விரும்பி செய்து முடிக்கமுடியும்.  

ஆகவே எப்போதும், பிறரின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கின்றவகையில் சிறந்த, தரமான, உண்மையான செயல்களையே செய்யுங்கள். அதேப்போல பிறரது திறமைகளையும் எப்போதும் அங்கீகரிக்க தவறாதீர்கள்.   

வாருங்கள் பாராட்ட தொடங்குவோமா????

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எழுதிய குட்டிக் கவிதை இது.

"அதிகாரமும் 
அங்கீகாரமும் 
ஏழைகளுக்கு கிடைக்காத 
எள்ளுருண்டைகள்... 

அனுமதியும் 
ஆதரவும் தரக்கூட 
அழுக்குச்சட்டைக்கு 
இடமில்லை...கோகி"  

உங்களது பாராட்டுக்களுக்கு நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Saturday, December 30, 2017

வலைப்பதிவு:- ஒவ்வொரு 1000 பார்வை அல்லது வருகைக்கு ரூபாய் 66.00 கிடைக்கிறது

நீங்கள் ஒவ்வொருமுறையும் எனது வலைப்பதிவுக்கு வருகைத்தரும்போதெல்லாம் இந்திய ரூபாயில் 6.50/-ஆறுரூபாய் ஐம்பது காசுகளை விளம்பரதாரர்கள் வழியே எனக்கு கிடைக்கும்படி செய்கிறீர்கள்..... 
(ஒவ்வொரு 1000 பார்வை அல்லது வருகைக்கு ரூபாய் 66.00 கிடைக்கிறது) 
இதைத்தவிர எனது வலைப்பதிவு பக்கங்களில் இருக்கும் விளம்பரங்களை நீங்கள் சொடுக்கினால் மேலும்  6.50/- ஆறு ரூபாய் ஐம்பது பைசா அல்லது ரூபாய் 150/- வரையிலும் கிடைக்கிறது. தவறுதலாக விளம்பர படங்களை தொட்டுவிட்டாலும் இந்தத் தொகை எனது கணக்கில் சேர்ந்துவிடும். 
இவை தவிர எனது வலைப்பதிவுகள் விளம்பரங்களின் வழியே நீங்கள் எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ கிளிக் செய்து பெறும்போது குறைந்தபட்சமாக 5% முதல் 20% வரையிலான கமிஷன் தொகையாக ரூபாய் 75/- முதல் ரூபாய் 3500/- வரை கிடைக்கும்.  

ஆகவே நான் பணம் சம்பாதிக்க உங்களை எனது பதிவுகளை படிப்பதற்காக எனது வலைப்பதிவிற்கு அழைத்துச்செல்லும் வேலையை மட்டும் நான் செய்தாலே..  போதும் அமெரிக்க டாலரில் பணம் வந்தால் எனது "பேபால்-Paypall" என்கிற ஆன்லைன் கணக்கின்மூலம் எனது வாங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளமுடியும் .. அல்லது இந்திய ரூபாயில் பணம் வரும்போது அவை "பே-யு-மணி-Pay-U-Money" என்கிற ஆன்லைன் பணப் பரிமாற்றமுறையில் எனது வாங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும். 

(Published on Aug 8, 2016 SRI SATHYA SAI BABA ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் அற்புதங்கள் ...பாபா அன்பைத் தாருங்கள் அமைதியை தாருங்கள் எப்போதும் ஆனந்தம் நிறைந்திருக்கும் உங்களின் அருளைத் தாருங்கள் ஆர்த்தி கிருஷ்ணன்.)

மேற்கண்ட  எனது கூகிள் யூ -டுப்பில் இருக்கும் இந்த காணொளியை இங்கு பகிர்ந்திருக்கிறேன்... இந்த காணொளியை நீங்கள் பார்த்தாலும் எனக்கு பணம் கிடைக்கும் ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கு ரூபாய் 66/- கிடைக்கும். இந்தப்பணம் கூகுளின் ஆட்-சென் என்கிற கணக்கின் வழியே எனது "பே-பால்" இணையவழி டாலர் கணக்கிலிருந்து எனது வாங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.   
கிட்டத்தட்ட 5வருடமாக நான் செய்த ஆராய்ச்சியினால் (ஒரு இரண்டு வருடம் திரு வி. சுப்பிரமணியமும் அவர்களும் சேர்ந்து இந்த இனைய ஆராய்ச்சியில் இருந்தோம். பிறகு அவர் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று விட்டுவிட்டார், தற்போது அவரும் இதில் கவனம் செலுத்திவருகிறார்) பலரும் விரும்பும்வண்ணம் எந்தவித முதலீடும் இல்லாமல் இனைய வழியில் பணம் சம்பாதிக்கும் எளிய முறையை கண்டுபிடித்து செயல்படுத்தி அதை தற்போது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவருகிறேன். இந்த ஆராய்ச்சிக்கு முன்னர் பலர் இனைய இணைப்பிற்கு மாதா மாதம் செலுத்தும் தொகையாவது திரும்ப கிடைத்துவிடாதா என்கிற கேள்விக்கு விடையாகவே அவர்களுக்கு, அவர்களின் தேவைக்கு அதிகமாகவே மாதம் ரூபாய் 10,000/- வரையிலும் மிக எளிய வழியில் வெறும் விளம்பரங்களின் வழியிலேயே அவர்களுக்கே தெரியாதவகையில் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடுவதை பார்த்த பல பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் அவர்களே விரும்பி இனைய வசதி ஏற்படுத்திக்கொண்டார்கள். 

அப்படிப்பட்ட சூழலில்தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இளையவர்கள் உள்பட இணையத்தை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் அனைவரும் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் அவர்களுக்கென்ற தனியாக, அவர்கள் விரும்பும்பெயரில் உருவாக்கிய வலைப்பதிவுகளை எழுதுவது எப்படி? அந்த அவர்கள் எழுதும் வலைப்பதிவுகளை எப்படி வடிவமைப்பது மற்றும் அவர்களது எண்ணங்களில் உருவான கதை, கவிதை, கல்வி, கேள்வி சார்ந்த விவரங்களை அனைவருக்கும் எப்படி பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் வலைப்பதிவு பக்கங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்வது போன்ற பல பயிற்சிகளையும் ஒவ்வொருமாத புதுதில்லி வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பின் வழியே பல இளைய தலைமுறையினர்களுக்கு பயிற்சியாக வழங்கியபோது பல பெற்றோர்கள் இதை வரவேற்றார்கள்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு 10 நபர்களில் ஒருவர்மட்டுமே தமிழில் வலைப்பதிவு எழுதக்கூடியவராக இருக்கிறார் மற்றவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தி மற்றும் அவர்களது பிராந்திய மொழியில் வலைப்பதிவு எழுதும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள் ஆகவே எத்தனையோ முயன்றும் தமிழில் மிக அதிக அளவில் வலைப்பதிவு எழுதுபவர்களை உருவாக்க முடியவில்லை. 

நீங்கள் இந்த பதிவை படிப்பதற்குமுன் எனது வலைப்பதிவு பக்கத்தை ஒருமுறை வலம்வந்து பாருங்கள். உங்களுக்கு பல விவரங்கள் புரியவரும். 

சரி அப்படி எந்த எந்த வழிகளிலெல்லாம் பணம் சம்பாதிக்கமுடியும், என்கிற விவரத்தை எனது அடுத்த பதிவில் பகிர்கிறேன். அதற்க்கு முன்பாக கீழ் கண்ட வலைப்பதிவில் ஒவ்வொரு வாசகர் வட்ட சந்திப்பில் இளைய தலைமுறையினர் எப்படியெல்லாம் பயிற்சிபெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Monday, December 4, 2017

வெறும் 5-ஐந்து ரூபாயை செலவு செய்தால், கிட்டத்தட்ட ருபாய் 3500/- ஐ மிச்சப்படுத்தலாம்.

வெறும் 5-ஐந்து ரூபாயை செலவு செய்தால், கிட்டத்தட்ட ருபாய் 3500/- ஐ மிச்சப்படுத்தலாம்:-

வெறும் ஐந்து ரூபாய் செலவில் பற்களின் புறை அல்லது கறை நீக்ககுதல்:- .... 

ஹலோ சுட்டீஸ் இன்று உங்களுக்கு வெறும் ஐந்து ரூபாய் செலவில் பற்களின் புறை அல்லது கறை நீக்ககுதல் பற்றிய இனிப்பான சுவையான விவரத்தை கூறப்போகிறேன். 

நாம் தினமும் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்களில், ஒருவர் ஆப்பிள் பழத்தை கடிக்கும்போது பற்களில் இரத்தம் வருவதை பற்றிய, பற்பசை விளம்பரம் காட்டுவதை பார்த்திருப்போம் அல்லவா.  அப்படி பற்களின் ஈறுகளில் புறை என்ற கரை சேர்வதால், பல் ஈறுகளில் இரத்தம் கசிவது என்கிற நோய் உண்டாகிறது. இதற்க்கு பல் மருத்துவரிடம் சென்றால் அவர் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உண்டான புறைகளை நீக்குவதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 3500/- கட்டணத்தை கட்டும்படி, வைத்திய செலவை வைத்துவிடுவார்.  

வெறும் ஐந்து ரூபாயில் பற்களின் புறை நீக்குவதற்கான தீர்வை ஒரு துண்டு "கரும்பு" செய்துவிடுகிறது. "கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்..."  6-மாதங்களுக்கு ஒரு முறையாவது ஒரு துண்டு கரும்பு தின்றாலும் போதும்.... உங்களின் பற்கள் வெண்மை நிறத்துடனும், பற்களில் மற்றும் ஈறுகளில் படிந்திருக்கும் புறைகளையும், கறைகளை நீக்கி இரத்தம் வடிதல் என்னும் நோயையும் முற்றிலும் குணமாக்குவதோடு உடலுக்கும் நன்மை தரும் மிக எளிய இயற்க்கை ஆரோக்கிய வைத்தியமுறையாக "கரும்பு" தின்பதால் நமக்கு கிடைக்கிறது.  

இதோ அடுத்தமாதம் ஜனவரியில் தை மாத-பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது அன்று ஒருநாளாவது சற்று நேரம் ஒதுக்கி நாம் அனைவரும் கரும்பு தின்போமா? நமது பற்களுக்கு ஆரோக்கியம் சேர்ப்போமா????

பாடல்:- சிட்டிபாபு செய்யும் பூ என்ன பூ "குறும்பு".... அவன் வெட்டி தின்று துப்புவது என்ன பூ "கரும்பு".. வாணியிடம் இல்லாதது என்ன பூ "படிப்பு" ஹா ஹா ஹா ... இப்படி வாய்திறந்தால் உதிரும் பூ என்ன பூ "சிரிப்பு" ... பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ "அன்பு"... 

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி. 

Tuesday, November 28, 2017

....அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (24+6=30). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம்.. புரிந்ததா?????

....அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (24+6=30). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம்.. புரிந்ததா?????

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு,  இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.
உதாரணத்திற்கு வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பெரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும் . 


முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் பணிநிரந்தரம் மற்றும் பதவி உயர்வு பெற்றிட தேவையான முயற்சிகளையும், உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு 30மணி நேரம். (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = மொத்தம் 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது இது உங்களுக்கு, பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

மேலும் தற்போது உங்களின் ஊதியம் உதாரணமாக 1000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 2000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள். 

பாடல்:- "பொன்னாள் இதுபோல் வருமா இனிமேலே"...  

....அப்படி நீங்களும் பயனடையும்போது அவசியம் உங்களது அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். 

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.  

Wednesday, November 22, 2017

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:

கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி 

-o-o-o-o-O-o-o-o-o-

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:-


வரும் திசம்பர் மாதம் முதல் தேதியன்று என்னிடம் ஒரு சிறுசேமிப்புக் கணக்கு துவங்குங்கள். 

01.12.2017 அன்று ஒரே ஒரு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

02.12.2017 அன்று முதல் நாள் போல இரு மடங்கு அதாவது இரண்டே இரண்டு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

03.12.2017 அன்று முதல் நாள் கொடுத்த இரண்டு பைசா போல இரண்டு மடங்கு அதாவது 4 பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

இதுபோல 1.12.2017 முதல் 31.12.2017 வரை, முதல் நாள் சேமித்தது போல இரண்டு மடங்கு அடுத்த நாள் சேமிக்க வேண்டும், நீங்கள். 

வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கும் நீங்கள் இது போல செய்வது கஷ்டமா என்ன? 

அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம், அதுவும் நீங்கள் சேமிக்கத்தானே போகிறீர்கள்! 

இதில் வெட்டிச்செலவோ வீண்செலவோ ஏதும் இல்லையே!! 

ஒரே ஒரு பைசாவில் ஆரம்பிக்கும் மிகவும் எளிமையான சுலபமான சேமிப்பு அல்லவா!!!

ஒரு மாதம் அதாவது திசம்பர் 31 நாட்கள் முடிந்ததும், அதாவது 01.01.2018 அன்று,  நான் சுளையாக உங்களுக்குத் தரப்போவதோ 

"ஒரு கோடி ரூபாய்"


இந்த கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில், முதலில் என்னிடம் பெயர் பதிவு செய்துகொள்ளும் 100 நபர்களுக்கு ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயம் இலவசம்; ஆடித்தள்ளுபடி போல. 25-12-2017 அன்று உங்களுக்கு வழங்கப்படும். 

மொத்த வாடிக்கையாளர்களின் பெயர்களை குலுக்கல் நடத்தி அதில் விழும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் விலையுள்ள மிக உயர்ந்த கார் அல்லது வீடு  பரிசும் உண்டு. கார்/வீடு  பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களே தான். முந்துங்கள்! 
01-12-2017 0.01
02-12-2017 0.02
03-12-2017 0.04
04-12-2017 0.08
05-12-2017 0.16
06-12-2017 0.32
07-12-2017 0.64
08-12-2017 1.28
09-12-2017 2.56
10-12-2017 5.12
11-12-2017 10.24
12-12-2017 20.48
13-12-2017 40.96
14-12-2017 81.92
15-12-2017 163.84
16-12-2017 327.68
17-12-2017 655.36
18-12-2017 1310.72
19-12-2017 2621.44
20-12-2017 5242.88
21-12-2017 10485.76
22-12-2017 20971.52
23-12-2017 41943.04
24-12-2017 83886.08
25-12-2017 167772.16
26-12-2017 335544.32
27-12-2017 671088.64
28-12-2017 1342177.28
29-12-2017 2684354.56
30-12-2017 5368709.12
31-12-2017 10737418.24

என்ன நண்பர்களே / நேயர்களே நீங்கள் தயாரா????????????????? உங்கள் கணக்கை துவங்கவேண்டிய இடம் http://gopalkrishnaniyer.blogspot.in Wednesday, November 1, 2017

"வருமானவரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை உங்களுக்கு திரும்பி உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்"

"உங்களது வருமான வரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை திரும்ப உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்"

மேற்கண்ட படத்தில் உள்ள போலி மின்னஞ்சலை பாருங்கள். அப்படியே அச்சு அசலாக இந்திய வருமான வரித்துறையிலிருந்து வந்த மின்னஞ்சல் போலவே இருக்கும் ஒரு போலி மின்னஞ்சல் இது. "உங்களது வருமானவரிக்கணக்கில் அதிகப்படியான வருமானவரி பிடித்தமான ரூபாய் 12,627 தொகையை உங்களுக்கு திரும்பி உங்களது வங்கிக்கணக்கில் வழங்கவுள்ளோம்" என்ற  இப்படி ஒரு இ-மெயில் உங்களுக்கு வந்தால் மகிழ்ந்துவிடாதீர்கள். உணர்ச்சிவயப்பட்டு அவர்கள் சொடுக்க சொன்ன இனைய முகவரியில் சென்று உங்களைப்பற்றிய, தொலைப்பேசி, வங்கிக்கணக்கு போன்ற முழுவிவரங்களையும் தந்தால், உங்களது வாங்கிக்கணக்கிலிருக்கும் மொத்த பணமும் காணாமல் போகிவிடும்.. 

இந்திய வருமானவரித்துறை என்றிருக்கும் எழுத்துக்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் சொடுக்கு வலைதள முகவரி, வேறு ஒரு நாட்டின் போலி வலைதளத்தின் முகவரியாகும். மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் "இங்கே சொடுக்கவும்" என்கிற குறியீட்டின் பின்னால் நம் கண்களுக்கு தெரியாத அளவில் வேறு ஒரு நாட்டின் போலி இணையதள முகவரி தரப்பட்டிருக்கும். நீங்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சொடுக்கியவுடன் அந்த வெளிநாட்டினரின் இணையத்தளத்திற்குள் சென்று அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் தந்ததும். அந்த வெளிநாட்டு போலி இனைய நிறுவனத்தினர் உங்களது வங்கியிலிருக்கும் பணத்தை முழுமையாக அவர்களின் போலி வாங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அந்த தொகையை வங்கியிலிருந்து எடுத்தபிறகு, அவர்களின் வாங்கிக்கணக்கை மூடிவிட்டு கம்ம்பிநீட்டிவிடுவார்கள். பணத்தை பறிகொடுத்த நீங்கள்தான் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்ட உங்களது பணத்தை பெறுவதற்கான எந்த வழி வகைகளும் கிடைக்காமல் ஏமாந்துபோக நேரிடும்....

ஆகவே எந்த இனைய வலைத்தள முகவரியை சொடுக்கும்போதும், நீங்கள் செல்லவேண்டிய சரியான முகவரியின் இணையதள வலைப்பக்கம் திறக்கிறதா என்று கணினி திரையின் மேற்பகுதியில் இணையதளத்தின் முகவரியைக்காட்டும் பகுதியில் http://xxxxxxx சரியாக முகவரியை காட்டுகிறதா என்பதை முழுமையாக உறுதிசெய்துகொள்ளுவது மிக மிக அவசியம். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு வந்த மின்னஞ்சலின் சொடுக்கு பட்டனை சொடுக்கியபோது ஒவ்வொருநாளும் ஒவ்வொரு இணையதள முகவரி மாறிக்கொண்டேயிருந்தது ஒருநாள் இங்கிலாந்து நாட்டின் www.xyz.co.uk இனைய முகவரியும் வேறொரு நாளில் நெதர்லாந்து நாட்டு www.xyz.nl இனைய முகவரியும், மற்றும் ரஷ்யாவின் இனைய முகவரி என்று... ஒவ்வொருநாளும் மாறிக்கொண்டேயிருந்தது.

ஆகவே உங்களது சொந்த விவரங்களை கேட்கும் எந்த ஒரு வலைத்தளத்தையும் உடனே நம்பி விவரங்களை பகிர்ந்துவிடாதீர்கள். போலியான முகவரி என்று எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கு பல வழிகள் உள்ளது அதற்காகவே சில கணினி செயலிகளும் உள்ளது அவைகளை பயன்படுத்தி எந்த ஒரு வலைதள முகவரியையும், மின்னஞ்சல் முகவரியையும், தொலைபேசி போன்றவைகளையும் உண்மைத்தன்மையை அலசி ஆராய்ந்து தெரிந்துகொள்ளமுடியும். 

@ போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிதல்:-  ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிய நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள் அங்கே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முகவரி யாருடையது சரியானதா போன்ற விவரங்களைப்பெறலாம், போலியைக்கண்டறியும் அந்த இணையதளத்துக்கான லிங்க் : http://www.verifyemailaddress.org/

@ வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று இந்திய வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

@ உங்களுக்கு ஏதேனும் போலியான மின் அஞ்சல் வந்தால் வருமான வரி துறையின் தேசிய இணையதளத்தில் உள்ள >'ரிப்போர்ட் ஃபிஷிங்' பகுதியை பார்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி துறையின் >www.incometaxindia.gov.in இணையதளத்தை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வருமான வரி துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தவறாமல் பின்னூட்டமிடுங்கள். மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Tuesday, October 10, 2017

தீபாவளிப்பண்டிகை.... மூன்றாம் உலகப்போர் நிகழ் வாய்ப்புள்ளதாக .....

தீபாவளிப்பண்டிகை....  மூன்றாம் உலகப்போர் நிகழ் வாய்ப்புள்ளதாக .....
http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/10131453/Bob-Corker-Says-Trumps-Recklessness-Threatens-World.vpf

தீபாவளிக்கு ஆபீஸ் லீவு.... விடியற்காலை... 

"என்னங்க எழுந்திருங்கள் பலதேய்த்து காப்பி குடித்து தலைக்கு எண்ணெய்தேய்த்து குளிக்க வேண்டும்"... என்று என்னை தூக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்... 

எனது மகன் அப்பா ராக்கெட் வெடி வெடிக்கவேண்டும் ஒரு நீண்ட பாட்டிலில் மண் நிரம்பித்தாருங்கள் எனக்கூறிக்கொண்டே வீட்டின் மொட்டைமாடியைநோக்கி ஓடுகிறான்.. 

அடேய் பார்த்து வெடி வெடிங்கடா என்று நானும் அவனோடு மொட்டை மாடிக்கு ஓட, மொட்டை மாடியில் பாட்டிலை வைத்து அதில் ராக்கெட் வெடியை சொருகி..... பத்திரமாக பார்த்து சற்று தூர நின்றுகொண்டு ராக்கெட் விடவேண்டும் என்று சொல்லி எனது மகன் அந்த ராக்கெட் வெடியை பற்றவைத்து அது ஊஸ் என்று சப்தத்தோடு மேலெழும்பியது ...

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.... வெகு தூரத்தில் கீழ் வானில் வரிசையாக பல குட்டி போர் விமானங்கள் குண்டுகள் மழையாகப் பொழிந்தபடி பறந்து வந்துகொண்டிருந்தது. அதேநேரத்தில் என் மகன் விண்ணை நோக்கி விட்ட ராக்கெட் வெடி வெடித்து அதிலிருந்து வண்ண வண்ண நிறங்கள் வெளிவந்ததை பார்த்து அந்த போர் விமானங்கள் திடீரென அவர்களின் பாதையை மாற்றி வந்தவழியே திருப்பி பறந்தன. 

இருந்தும் அந்த விமானத்திலிருந்து வீசப்பட்ட சில வெடி குண்டுகள் என் வீட்டின் அருகேயும் விழுந்து மிகப்பெரிய சப்தத்தை எழுப்ப சற்று நிலைகுலைந்துபோன நான் சட்டென்று விழித்துக்கொண்டேன் .... 

அடடா இது கனவா ... தீபாவளிக்கு இன்னும் முழுசாக ஒரு வாரம் இருக்கே ... பயங்கரமான விடியற்காலைக் கனவு .... திடீரென்று எனக்கு ஏன் இந்த கனவு?...  அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் என்னசெய்யவேண்டும் ?  அப்படி நடந்தால் அதற்காக முன்கூட்டியே நாம் மேற்கொள்ளவேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? மூன்றாம் உலகப்போர் நிகழ் வாய்ப்புள்ளதாக செய்தி ஏதாவது இருக்கிறதா என்று செய்த்தித்தாளை புரட்டி பார்க்கவேண்டும்? ..... இப்படி பலவேறு சிந்தனைகளுடன் படுக்கையிலிருந்து எழுந்து பல்துலக்க சென்றேன் ......

அன்றய பத்திரிகை செய்தி :- "அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கருத்துக்களால் மூன்றாம் உலகப்போர் நிகழ் வாய்ப்புள்ளதாக குடியரசு கட்சியின் மூத்த எம்.பி.பாப் கார்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/10131453/Bob-Corker-Says-Trumps-Recklessness-Threatens-World.vpf

பேசாம இந்த தீபாவளிக்கு பசங்களுக்கு வெடி வாங்கவேண்டாம் அதனால நாம் வெடி வெடிக்க மொட்டைமாடிக்கு போகவேண்டாம்.. மூன்றாம் உலகப்போரை நடக்கவிடாமல் தடுத்துவிடலாம்...  எப்படி என்னுடைய ஐடியா ... ஆகவே பொதுமக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து என்னை ஏதாவது ஒரு மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....  

விடியற்காலை கனவு. 
எனக்கெதற்கு வீண் வம்பு...

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்கோனி.

Tuesday, September 5, 2017

"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்..சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பள்ளி...

"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்:- பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 

சாம்பார் என்று சொன்னாலே அந்த பழம்பெரும் பிரபல நடிகரின் பெயர் ஞாபகம் வரும். ஆனால் அந்தக்காலத்தில்(1975) மதராஸ் என்கிற சென்னையில் "சாம்பார்" என்ற பெயரில் ஒரு இரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது, அப்படி அந்த   வண்டிக்கு பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 


1975இல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு "சாம்பார்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட, தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் ஒரு இரயில் வண்டி கிட்டத்தட்ட 15வருடங்களுக்கு மேல் ஓடியது. 

ஆரம்பத்தில் இது புகைவண்டியாகவும், பின்னாளில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுவரை புகைவண்டியாகவும் பின்னர் மின்சார வண்டியாகவும் 1985க்கு பிறகு முழுவதும் மின்சார இரயில் வண்டியாகவும் இயங்கியது.

சென்னையில் பணிபுரியும் காஞ்சீபுரத்தைசேர்ந்தவர்களுக்கு இந்த இரயில்வண்டி ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. அதுமட்டுமில்லாது இந்தியாவிலேயே ஓட்டல்கள் அதிகம் நிறைந்த ஊராகவும் காஞ்சிபுரம் விளங்கியது. இந்தியாவிலேயே ஏரிகள் நிறைந்த மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை இடமாக காஞ்சிபுரம் இருந்தது. அதற்க்கு முக்கிய காரணமாக காஞ்சிபுரத்தை பொறுத்தவரை கோவில் நகரம் பக்தர்களும், வெளிநாட்டு ஆன்மீக யாத்திரிகளும் அனுதினமும் வந்துசெல்லும் இடமாகவும் , அதோடு கைத்தறி இல்லாத அதன் சப்தம் கேட்க்காத வீடே இல்லை என்கிற காரணத்தினாலும் ("காஞ்சிக்கு சென்றால் காலாட்டி பிழைக்கலாம்" என்ற பழமொழியை உருவாக்கிய நகரம் ) , பலரது வீடுகளில் சமைத்து சாப்பிடுவதற்கு நேரமில்லாமல், குடும்பம் குடும்பமாக, குடும்ப ஓட்டல்களில் உணவுகளை வாங்கி உண்பது வெகுகாலமாக இருந்துவந்த பழக்கம். 

அப்போதெல்லாம் தமிழகத்திலேயே குடும்ப உணவகம் "ஹோட்டல்" நிறைந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது, காஞ்சிபுரத்தை அடுத்து மதுரையிலும் இந்தப் பழக்கம் இருந்தது. "காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி -என முப்பெரும் தேவியர்களின் நகரமல்லாவா? சதா உழைப்பவர்களுக்கு உணவு சமைத்திட நேரம் எங்கே இருக்கிறது, ஆகவே அந்தந்த பகுதிக்கு ஒன்று என்ற விதத்தில் பல உணவு விடுதிகள் தோன்றி காஞ்சிபுரம் நகரம் முழுவதிலும் வியாபித்திருந்தது. முக்கியமாக சாப்பாட்டு நேரம் மட்டுமே இந்த ஓட்டல்கள் திறந்திருக்கும். வெளியூரிலிருந்து வரும் யாத்திரியர்களும் வியாபாரிகளும் இந்த குடும்ப ஓட்டல்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே உணவு கிடைக்கும். 

அவ்வளவு ஏன் ஒருமுறை காஞ்சிபுரத்தில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது பல மாநிலங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள் வந்திருந்தார்கள், நான் அப்போது திருத்தணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (முன்னாள் இந்திய ஜனாதிபதி, விருதுபெற்ற தத்துவ ஆசிரியர், சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்  அவர்கள் படித்த பள்ளி அது, பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் சுண்ணாப்பு கலவையால் கட்டப்பட்ட பழமையான பள்ளிக்கட்டிடங்கள் வகுப்பறைகளாகக் கொண்ட அந்த பள்ளியின் சுவர்கள் மாணவர்களாகிய எங்களோடு பேசும்-(சுவர் எப்படி பேசும்? ......அது ஒரு பெரிய கதை என்னோடு படித்த நண்பர்கள் அதுகுறித்து இன்றளவும் பேசுவார்கள், அது ஒரு இனிமையான மாணவர்களாக இருந்த காலம்... பிறகு ஒரு நேரத்தில் அதுபற்றி கூறுகிறேன்) 


நான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். நான் ஒரு பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியராக இருந்ததால் (நான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராக, மூன்றுவருடம் பணியாற்றினேன்) எங்கள் பள்ளியின் மாணவர்களோடு நானும் அந்த தேசிய  அறிவியல் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். முதல்நாள் எனக்கு நல்ல பசி மதியம் சரியாக 12.30 மணி இருக்கும்,  இன்று முழு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிவிடலாம் என்று பள்ளிக்கு அருகேயிருந்த அந்த உணவு விடுதி (ஹோட்டல்) சென்று பார்த்தபோது, ஹோட்டல் முழுவதும் நிரம்பி வழிந்தது. பலர் வாசல்பகுதியில் சாப்பிட காத்திருந்தார்கள், ஹோட்டலின் கல்லாபெட்டியில் இருந்தவர் பெரிய அளவில் நெற்றி திருநீறு பட்டையில் மிகவும் தெய்வாம்சமாக திகழ்ந்தார். எங்களைப்பார்த்த அவர் "நீங்கள் சாப்பாட்டிற்கு முன்பதிவு செய்துவிட்டு மதியம் 3.00மணிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டார்".  

எனக்கோ மிகவும் ஆச்சரியம், பசி மயக்கம்வேறு அதெல்லாம் முடியாது அடுத்த ஓட்டலை பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு 10 ஓட்டலாவது சுற்றியிருப்போம் எல்லா இடங்களிலும் சாப்பிட இடம் இல்லை அனைத்து இடங்களிலும் "சாப்பிட முன்பதிவு செய்யவேண்டும்" என்ற ஒரே பாட்டைத்தான் பாடினார்கள் வேறு வழியில்லாமல் இறுதியாக வந்த அந்த ஓட்டலில் முன்பதிவு செய்துவிட்டு, நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நாய்கள்தான் அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தது.... எப்போது சாப்பாடு கிடைக்கும் என்று கிட்டத்தட்ட 2மணிநேரம் "ஸ்வாமி பிரசாதத்தை தேவுடு-காப்பது" போல காத்துக்கிடந்தோம்.  அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்....ஹோட்டல் ஹோட்டலாக தேடியதால் நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் என்பது, சாப்பிட்டுவிட்டு அறிவியல் கண்காட்சி நடக்கும் பள்ளிக்குத் திரும்பியபோதுதான் தெரிந்தது, நாங்கள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி இன்னும் ஏதாவது சாப்பிடலாமா? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டோம். 

காஞ்சிபுரம் "இட்டிலி" பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காஞ்சிபுரம் இட்டிலி மிகவும் சுவையான இட்டிலி. அப்படிப்பட்ட காஞ்சிபுரம் இட்டிலியில் நெய்யில் வறுத்த மிளகு,சீரகம், முந்திரி, மஞ்சல் போடி  என சிலபொருட்களை சேர்த்து செய்யும் மிகப்பெரிய அளவு இட்டிலி என்றால் அது காஞ்சிபுரம் இட்டிலி மட்டுமே. காரணம் அந்தக்காலத்து காஞ்சிபுரம் இட்டிலி என்பது ஒரு பெரிய தட்டு அளவில் இருக்கும் "மெகா சைஸ்" இட்டிலியாகும்....(பின்னாளில் டம்ளர் சைஸ் இட்டிலி, பெரிய கப் சைஸ் இட்டிலி, பெரிய தட்டுவடிவ இட்டிலி என பல வடிவங்களில்  அதாவது ஒரு பெரிய தட்டில், டம்ளரில் இட்டிலி மாவை ஊற்றி வேகவைத்து எடுத்துவிடுவார்கள், அது அந்த பெரிய தட்டின் அளவில் அல்லது அந்த பாத்திரத்தின் அளவில் ஒரே இட்டிலி அதுவும் மிகப் பெரிய இட்டிலியாக இருக்கும். (நான் நினைக்கிறேன்:- சிறு சிறு இட்டிலிகளாக செய்ய வெகு நேரம் ஆகும் என்பதால் ஒரே ஒரு மெகா சைஸ் இட்டிலியை செய்து வீட்டில் இருக்கும் அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற எண்ணத்தில் உருவானதோ என்னவோ!!) ஆகவே காஞ்சிபுரம் இட்டிலிக்கு இன்றளவும் ஒரு தனி இடம் உண்டு எனலாம்.


சரி சரி முக்கியமான விசயத்திற்கு வராமல் வேறு எங்கோ சென்றுவிட்டோம். ஆகவே காஞ்சிபுரத்தில் வசிப்பவர்கள் விடியற்காலையே சென்னையிலிருக்கும் தமது அலுவலகத்திற்கு செல்லவேண்டியிருப்பதாலும்,  பொதுவாகவே காஞ்சிபுர வாசிகள் குடும்ப உணவு விடுதிகளில் உண்டு பழக்கப்பட்டதாலும், அதோடு காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவ சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்ததினால், அனைத்து இரயில் நிலையங்களில் இருக்கும் சைவ உணவு விடுதிகளில் அவர்களது காலை உணவையும், மதிய உணவையும் பெற்றுக்கொள்வார்கள், ஆகவே அனைத்து முக்கிய இரயில் நிலையத்திலும் இந்த காஞ்சிபுரம் பயணிகளை கவருவதற்காகவே "சாம்பார் சாதம்" செய்து அதை இந்த இரயில் வண்டி ஒவ்வொரு இரயில் நிலையத்தை அடைந்ததும்  இரயில் நிலைய உணவு விடுதி விற்பனையாளர்கள் "சாம்பார் சாதம்" என்று கூவி கூவி விற்பார்கள். இதில் முக்கியமாக இந்த காஞ்சி-சென்னை இரயில் வரும்போதுமட்டுமே சைவ சாம்மார் சாதம் நிறைய விற்பனையானத்தினால் அந்த காஞ்சி-சென்னை ரயிலுக்கு "சாம்பார்" இரயில் என்ற பெயரே நிலைத்துவிட்டது. 


காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போதோ அல்லது மாலை அலுவலகத்திலிருந்தோ வீட்டிற்கு செல்லும் பொது வேகவேகமாக இரயில் நிலையத்தை அடைந்தவர்கள் "சாம்பார்" போய்விட்டதா, சரியான நேரத்தில் வருமா? என்று கேட்பது ஒரு வாடிக்கையான செயலாக இருந்தது.     
                           
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" இயற்கையின் நியதி. ஆனால் பழமையில் ஊறித்திளைத்த பலருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக அக்கறை காட்டுவதிலும் கூட கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

ஆனால் கடந்த காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட பொருட்களை நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறோம். அதேபோன்று எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி அதிகளவுக்கு எதிர்வு கூற முடியாமலேயே இருந்துவிடுகிறோம்.

காலம் பல விடயங்களை விழுங்கிவிடுகின்றதெனக் கூறுகிறார்கள். அது தவிர்க்க முடியாதது. ஆனால் ஏற்றுக்கொள்வதென்பது கவலையானதாக இருக்கும். அத்துடன் தலைமுறை இடைவெளியையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது "விஞ்ஞான, தொழில்நுட்ப யுகம்' என்ற சிந்தனை புதிய தலைமுறையினர் மத்தியில் உறுதியாகக் காணப்படுகிறது. பழைய விடயங்களை இழந்துவிடுவது தொடர்பாக கவலைப்படுவது இந்த நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் கேலிக்கூத்தான விடயமென்பது புதிய தலைமுறையினரின் எண்ணப்பாடாகக் காணப்படுகிறது. விமானத்திற்குப் பதிலாக மீண்டும் மாட்டு வண்டியில் பயணம் செய்ய முடியுமா? 

பழைய பாரம்பரிய முறைகள் வேறு ஒரு புதிய பாரம்பரியமாக மாற்றமடைந்துவருகிறது. இப்படிப்பட்ட மாற்றங்கள் எந்த அளவிற்கு எதிர்கால சந்ததியினர்களுக்கு வளமான வாழ்க்கையை பெற்றுத்தரும் என்பது இன்னமும் முழுமைபெறாத எதிர்கால திட்டங்களாகத்தான் வலம்வந்துகொண்டிருக்கின்றன.   

அதேவேளை மனிதர்களும் "இயந்திரங்களாக' மாறிக்கொண்டிருப்பதே இங்கு உண்மையில் சிந்திக்கப்பட வேண்டிய விடயம். அதேவேளை சனத்தொகை அதிகரித்திருக்காத, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது போன்று மேம்பட்டிராத காலத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாகவே இருந்தன.

இதனால் நமக்கு கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நிகழ்காலத்திலேயே கவனத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. ஆகவே மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத கடந்த காலம் பற்றிச் "வாடாமலர்" சிந்தனை செய்யாமல் காலவெள்ளத்தின் திசையில் நாமும் செல்வதற்கு எம்மை இசைவாக்கமடையச் செய்வதே சிறந்த தெரிவாக அமைய முடியும். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் வாழ்வதும், அதேசமயம் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதும் சிறப்பானதாகத் தென்படுகிறது.


எனதருமை வாசக அன்பர்களே, தொடர்ந்து உங்களுக்கு என்னால் முடிந்த வாசிப்பு விருந்தை வழங்கிடும் வாய்ப்பை தரவேண்டும் என்று கூறி, எனது வலைப்பக்கத்திற்கு உலவிட வந்த உங்களின் பொன்னான வாய்ப்பிற்கு நன்றிகூறி மேலும் பல சுவையான விவரங்களை எனது அடுத்த பதிவில் காணலாம் என்று கூறி விடைபெறுகிறேன். 

நன்றிகளுடன் 
கோகி-ரேடியோ மார்கோனி.

Friday, September 1, 2017

மாதங்களில் சிறந்த "பித்ருப்யோ நம:, மாத்ருப்யோ நம:" என்று கூறும் புரட்டாசி மாத மகாளயபட்சம்.

பொதுவாக மூதாதையர்களுக்கு செய்யும் திதி தர்ப்பணம் ஏன் செய்யவேண்டும்? எப்படி செய்யவேண்டும்?  எப்போது செய்யவேண்டும் என்பன போன்ற 101-விவரங்களை ஒன்று திரட்டி இந்த பதிவை எழுதுகிறேன்.


1. மாதங்களில் சிறந்த "பித்ருப்யோ நம:,  மாத்ருப்யோ நம:"  என்று கூறும் புரட்டாசி மாத மகாளயபட்சம், மிகச்சிறந்த மூதாதையார்களின் வாழ்த்துக்களை பெரும் நாட்கள் அமைந்த மாதமாக போற்றப்படுகிறது.

2. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. அப்படி செய்பவர்களுக்கு பித்ருதோஷம்தான் ஏற்படும். அதாவது பிள்ளைகள் கிடையாது, அப்படியே பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் இருந்தும் பிள்ளைகள் இல்லாதவர்களைப்போல எவ்வித ஆதரவுமின்றி வாழ்வார்கள். 


3. பொதுவாக மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்வதற்கு முன்பாக, மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலயநிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

4. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

5. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.


6. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

7. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்கிறார்கள் என்றும், அதனால் பித்ரு லோகத்தை அதிகாரம் செய்யும் தேவதைகள் சாபம் தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தர்ப்பணம் முடிந்ததும் தாம்பாளத் தட்டிலிருக்கும் தர்ப்பை புற்களுடன் சேர்ந்த எள்ளும் தண்ணீருமான தர்ப்பண ஜலத்தை துளசி செடி இருக்கும் மாடத்திலோ, கோவில் அல்லது வீட்டின் வாசல்படி அமைந்திருக்கும் பகுதியில் வடக்கு பக்கமாக கால் படாத இடத்தில் கொட்டவேண்டும். 


8. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.

9. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.

10. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

11. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.


12. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4 ,மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12 , வைத்ருதி 12 , அஷ்டகா 4 , அன்வஷ்டகா 4 , பூர்வேத்யு நாட்கள் 4. இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

13. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.

14. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

15. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.


16. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.

17. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.


18. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.


19. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.

20. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.


21. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

22. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

23. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

24. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.

25. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியானமுறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள் . இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.


26. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

27. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.

28. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

29. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

30. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

31. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

32. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

33. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

34. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.

35. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.

36. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் நமது உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று கூறுவது தவறு. ஆனால் பிறகு அடுத்த திதியில் கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

37. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

38. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.


39. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற திதி தர்ப்பணம் செய்யும் நாட்களில், உணர்ச்சிகளைத் தூண்டும்  வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை உபயோகிக்க வேண்டாம். அம்மாவாசை போன்ற நாட்களில் பூலோகம் சுருங்கிவிடுவதால் அந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீரணசக்தி குறைத்துவிடும். ஆகவே அம்மாவாசை நாட்களில் விரதமிருப்பதும், குறைவாக உண்பதும் சிறந்தது. அம்மாவாசை நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்கள் பிழைப்பது கடினம் என்று கூறுவார்கள், காரணம் அன்று நமது உடலின் ஜீரண சக்தி குறைவாகவும், உடலுக்கு செலுத்தும் மருத்துவ சக்தியை கிரகித்துக்கொள்கிற தன்மையும் குறைவாகவே இருக்கும்.  

40. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

41. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

42. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.

43. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

44. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

45. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் அன்றய தினத்தின் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் விருந்து உணவும், உண்ணக்கூடாது. 

46. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்துஉறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

47. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.

48. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

49. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

50. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.

51. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

52. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

53. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

54. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.

55. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.  குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளயசிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

56. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. புண்ணிய ஷேத்திரங்களிலும், திருவாலங்காடு, திருவள்ளூர் , ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர் , காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. 

57. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது . இங்கு ஸ்ரீராமரும், லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

58. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம்கூறியுள்ளது.

59. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும் போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய்விடுவான் என்று கருதப்படுகிறது.

60.தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப் பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

61. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை அணிவிப்பது நல்லது .

62. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் பாட்டி தாத்தாவுக்கும்,  (மூதாதையர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) அந்தப்புண்ணிய பலன் சென்றுசேர்ந்து உரியபலன்களை கொடுக்கும்.

63. மகாளய அமாவாசை நாட்களில் பித்ருக்களின் தர்ப்பண காரியங்களை முடித்துவிட்டுத்தான், நெற்றியில் பெண் குங்குமம் / ஆண்கள் திருநீறு  தரித்தல் வேண்டும். தர்ப்பண காரியங்கள் முடித்தபிறகுதான் வீட்டில் பூஜையறையில் விளக்கு/தீபம் ஏற்றவேண்டும். மற்றும் வீட்டின் வாசல் கோலம் போடுவது, கோவிலுக்கு போவது, சங்கல்பம் பூஜை செய்வது போன்ற பிற காரியங்களை செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

64. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

65. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

66. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

67. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

68. மகாளய பட்சத்தின் நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

69. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேது பகவான் மூலம் பலன்களை பெற்றுத் தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

70. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

71. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

72. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

73. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.

74. பகவத் கீதை : அத் :: 2 - 18 "ஆத்மா என்பவன் நிலையானவன் ; அழிவில்லாதவன் கணக்கிட முடியாதவன் ;ஆயினும் அவனுடைய ஸ்தூல வடிவங்கள் முடிவடையக் கூடியவையே . ஆதலால், போர்செய் .!"

75. பகவத் கீதை : அத் : 2 - 19 "ஆத்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை . அப்படி நினைப்பவர்கள் அறியாதவர்கள்."

76. மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் :-

"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.

இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.


மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

77. மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

78. நவக்கிரக தோஷம் நீக்கும் மகாளய அமாவாசை:-

15ம் நாள் - மகாளய அமாவாசை தினத்தில் - முன் சொன்ன 14 தினங்களின் அத்தனை பலன்களும் நம்மைச் சேர அன்றய மகாளய இறுதி தினத்தில் முன்னோர் ஆசிகளை வாரிவழங்குவதால் சகல விதமான தோஷங்களும்,  நவக்கிரக தோஷமும் நீங்குவதாக...  இந்த மகாளய அம்மாவாசை அன்று ஒரேநாளில் செய்யும் பித்துருக்களின் தர்ப்பணம், திதி, ஹோமம் போன்றவை பலமடங்கு பலன்தரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  .

பித்ருப்யோ நம: மாத்ருப்யோ நம: 

79. மஹாளய தர்ப்பணம் ஏன் ..??? ( தெரிந்து கொள்ளுங்கள் )

கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.

தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்".
ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.

குரு விளக்குகிறார் " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. "
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.

கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.

யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.

கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்."


யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.

" யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்."

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.


சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி...

80. எளிய தர்ப்பணம் BRIEF THARPANA WORSHIP OF OUR FATHERS & GRAND FATHERS:- திருச்சி லால்குடி அருகே பூவாளூர் திருத்தலத்தில் பல்குனி நதிக்கரையில் நிறைவேற்றப்படும் தர்ப்பணங்கள் விரைவில் நமது முன்னோர்களுக்கு முக்தியை அளிக்கும் சக்தி உடையது. இது தென்னிந்திய கயா ஆகும்.
81. "தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

82. நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

83. பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள்.

84. தேஜஸ் - வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

85.பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். 

86. ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

87. இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பித்ரு் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

88. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

89. இந்தப் புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

90. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரணதோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.


91. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்புவனத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

92. திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திலதர்ப்பணபுரி:- திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.

93. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பணம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

94.  தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும். ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

95.  தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” (ஐந்து வேள்வி என்று பொருள்) என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?


96. ஐவேள்வி? இதற்க்கு திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல், இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (41).... என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் (குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்) என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

97.ஒரு குடும்பத்தில் ஆன் பிள்ளைகள் (அல்லது) பிள்ளைகளே இல்லாவிட்டால் நரகமா? 

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?


இல்லை.... இல்லவே இல்லை.... ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் (கர்த்தாக்களாக) எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட வேதம் படித்த கோவில் அர்ச்சகர்கள் /ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளத்தெளிவாக விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று ). இதனால்தான் வேதம் பயின்ற பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் பண்டையகால தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும், பண்டைய  80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

98. தர்ப்பண மந்திரத்தில், பொதுவாக ஒரு மந்திரத்தை, தர்ப்பணம் செய்யும் அனைவருமே கூறுகிறார்கள் அது என்ன என்று தெரியுமா?   தமிழாக்கம் "எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய ) — அவர்கள் எல்லாம், இதோ இந்த தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும். திருப்யத... திருப்யத... திருப்யத... என்று கூறி தர்ப்பணத்தை முடிப்பார்கள். 

99.ஆன் வாரிசு இல்லாத பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றெடுத்தவர்களுக்கும், அவர்களது மருமகனும் மகனாக தர்ப்பண, திதி, அந்திமக்கிரியை  காரியங்கள் செய்யலாம் என்று வேதங்கள் கூறுகிறது. 

100. அந்தக் காலத்தில் தீ மூட்டி(ஹோம குண்டங்கள்) வேள்வி செய்து சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:  அதாவது 
12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)

இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

101. இந்த வருடம் (2017) மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - மகாளய அம்மாவாசை தர்ப்பணம் - கோ பூஜை என மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஹோமம் - தர்ப்பணம் - பூஜை என நடப்பது மிகவும் அபரிவிதமான புண்ணியம் தரும் அரிதான ஒரு நிகழ்ச்சி. 


அப்படிப்பட்ட புண்ணிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும், அந்த புண்ணிய காரியத்தில் உங்களது பங்கையும் (பொருளாகவோ, பணமாகவோ, சேவையாகவோ) சேர்க்கமுடியும். 

நடைபெறும் இடம்: திருமுல்லைவாயில் - 
பொத்தூர் கிராமம் - கன்னடபாளையம்
நாள்: 20 செப்டம்பர் 2017
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 5 மணி முதல்

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
அம்பத்தூர் - சென்னை
Email: shrividhyagayathri@gmail.com
Web: www.shrividhyagayathri.com
Phone: 89390 41417 / 89390 43436 / 97100 86818

மறந்துவிடாதீர்கள்... புரட்டாசி மாதம் முழுவதும் எதிலும் எப்போதும் துளசீதளத்தை (துளசி இலைகளை) சேர்த்துக்கொள்வது மிக மிக புண்ணிய செயலாகும். 


தமிழ் புரட்டாதி மாதத்தில் அனைத்துநாளும் பகவான் ஸ்ரீ நாராயணனுக்கு உகந்த சிறப்புமிக்க நன்னாளாகும் .. தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியவாறே நிறைவேறிடவும் .. கல்விச்செல்வம் .. கேள்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..


ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி...
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

FREE JOBS EARN FROM HOME